அதே 44 மணி நேர பேட்டரி.. ஆனா ரூ.1000 கம்மி.. கூடவே ரூ.500 ஆபர்.. க்ரீன் கலரில் OnePlus Buds 3 இயர்பட்ஸ்!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் பிரபலமான இயர்பட்ஸ் மாடலான ஒன்பிளஸ் பட்ஸ் 3-க்கான (OnePlus Buds 3) புதிய கலர் ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. கடந்த 2024 ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டபோது, இது பிளாக் மற்றும் ப்ளூ ஆகிய 2 கலர்களில் மட்டுமே வெளியிடப்பட்டது. தற்போது இது நேர்த்தியான க்ரீன் கலர் வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய கலரை தவிர்த்து அம்சங்கள் அடிப்படையில் எந்த மாற்றங்களையும் இது பெறவில்லை. இதன் விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இதோ விவரங்கள்:
ஒன்பிளஸ் பட்ஸ் 3 விலை மற்றும் விற்பனை சலுகை: ஒன்பிளஸ் பட்ஸ் 3-ன் புதிய க்ரீன் கலர் ஆப்ஷன் தற்போது அமேசான் இந்தியா (Amazon India) வலுயாக ரூ.4,499 க்கு வாங்க கிடைக்கிறது. விற்பனை சலுகையை பொறுத்தவரை, ஒன்பிளஸ் பட்ஸ் 3-ஐ வாங்குவதற்கு எஸ்பிஐ கிரெடிட் கார்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 தள்ளுபடி கிடைக்கும். இதன்மூலம் ஒன்பிளஸ் பட்ஸ் 3-ன் விலையை ரூ.3,999 ஆக குறைக்க முடியும்.

நினைவூட்டம் வண்ணம் இது அறிமுகத்தின் போது, இந்தியாவில் இதன் விலை ரூ.5499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும் அப்போதைய விற்பனை சலுகையின் கீழ் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு மற்றும் கிரெடிட் / டெபிட் கார்டு இஎம்ஐ-யின் கீழ் ரூ.1000 தள்ளுபடி, ஒன்கார்டு இஎம்ஐ மற்றும் கிரெடிட் கார்டு வழியாக ரூ.1000 தள்ளுபடி என ரூ.4,499 க்கு வாங்க கிடைத்தது.
ஒன்பிளஸ் பட்ஸ் 3 விரிவான அம்சங்கள்: ஒன்பிளஸ் பட்ஸ் 3 ஆனது 15 ஹெர்ட்ஸ் - 40 கேஹெர்ட்ஸ் ப்ரெக்வன்சி ரேன்ஜை (frequency range of 15Hz-40KHz)கொண்டுள்ளது. மேலும் இந்த இயர்பட்ஸ் 10.4மிமீ கோ-ஆக்ஸியல் டூயல்-யூனிட் ட்ரைவரையும் (10.4mm co-axial dual-unit driver.) கொண்டுள்ளன.
மேலும் இந்த இயர்பட்ஸ் ஏஏசி (AAC) மற்றும் எஸ்பிசி (SBC) கோடெக்குகளை ஆதரிக்கின்றன, இது மற்ற கோடெக்குகளை (codecs) விட சிறந்த ஒலி தரத்தை வழங்க உதவும். ஒன்பிளஸ் பட்ஸ் 3-ன் மிகவும் தனித்துவமான அம்சங்களில் ஒன்று, இது எல்எச்டிசி 5.0 ஹை-ரெஸ் ஆடியோவை (LHDC 5.0 Hi-Res Audio) ஆதரிக்கின்றன. இது 1எம்பிபிஎஸ் வரையிலான வயர்லெஸ் டிரான்ஸ்மிஷன் ரேட்-ஐ அனுமதிக்கிறது.
ஒன்பிளஸ் பட்ஸ் 3-ல் மொத்தம் மூன்று மைக்ரோஃபோன்கள் உள்ளன, இது கால்களின் போது தெளிவான ஆடியோவை வழங்க உதவும். மேலும் இந்த இயர்பட்ஸ் 94ms லோ லேடன்சியையும் கொண்டுள்ளன. கூடுதலாக, ஒன்பிளஸ் பட்ஸ் 3 ஆனது டச் கண்ட்ரோல்களை கொண்டுள்ளது.
ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷனை பொறுத்தவரை, இது மூன்று வகையான ஏஎன்சி ஆதரவுகளை கொண்டுள்ளது: மைல்ட் (10 dB), மாடரேட் (20 dB) மற்றும் டெப்த் (49 dB). மேலும் இந்த இயர்பட்ஸ் 3டி சரவுண்ட் ஸ்பேஸ் சவுண்ட் எஃபெக்ட் மற்றும் டைனமிக் பாஸ் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. இயர்பட்களை சார்ஜ் செய்ய டைப்-சி போர்ட்டும் உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை, ஏஎன்சி ஆன் செய்யப்பட்டிருந்தால் ஒன்பிளஸ் பட்ஸ் 3 ஆனது 6.5 மணிநேரம் வரை நீடிக்கும், சார்ஜிங் கேஸ் உடன் சேர்த்து மொத்தம் 28 மணிநேரம் வரை நீடிக்கும். ஒருவேளை ஏஎன்சி ஆப் செய்யப்பட்டு இருந்தால் ஒன்பிளஸ் பட்ஸ் 3 ஆனது 10 மணிநேரம் வரை நீடிக்கும், கேஸ் உடன் சேர்த்து 44 மணிநேரம் வரை நீடிக்கும்.
கடைசியாக ஒன்பிளஸ் பட்ஸ் 3 ஆனது பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கின்றன, ஒன்பிளஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி இதை வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், இது மொத்தம் 7 மணிநேரம் வரையிலான ம்யூசிக் பிளேபேக்கை வழங்கும். க்ளாஸி ஃபினிஷ் டிசைன் மற்றும் ஒன்பிளஸ் பட்ஸ் 2 ப்ரோவை போலவே தோற்றமளிக்கும் சார்ஜிங் கேஸுடன் வருகிறது.


Click it and Unblock the Notifications








