OnePlus வாட்ச் சாதனத்திற்கு முன்பாக OnePlus பேண்ட் வெளியாகிறதா? என்னவெல்லாம் இதில் எதிர்பார்க்கலாம்?
OnePlus நிறுவனம் இப்போது அதன் புதிய ஒன்பிளஸ் பேண்ட் சாதனத்தின் ஆரம்ப 2021. கடந்த சில வாரங்களாக OnePlus வாட்ச் இந்தியாவில் வெளியீட்டிற்குத் தயாராவதாகப் பல வதந்திகள் எழுந்துள்ளது. ஒன்பிளஸின் ஸ்மார்ட்வாட்சுக்கு முன்னால், ஒன்பிளஸ் பேண்ட் அறிமுகமாகும் என்று தற்பொழுது செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சாதனம் சியோமி மி ஸ்மார்ட் பேண்ட் 5க்கு போட்டியாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தி, முதலில் ஆண்ட்ராய்டு சென்ட்ரலால் கசிந்தது, ஒன்பிளஸ் பேண்ட் விலை சுமார் $ 40 (தோராயமாக ரூ .2,950) என்று கூறப்படுகிறது. சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள Mi ஸ்மார்ட் பேண்ட் 5 இந்தியாவில் ரூ. 2,499 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த தகவலை ஒரு தனி கசிவில், டிப்ஸ்டர் முகுல் ஷர்மா ஒன்பிளஸ் பேண்டின் முழுமையான ஸ்பெக்-ஷீட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒன்பிளஸ் பேண்ட் சாதனம் 1.16' இன்ச் AMOLED டச் டிஸ்பிளே கட்டுப்பாட்டுடன், 100 எம்ஏஎச் பேட்டரி, வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மற்றும் பல உடற்பயிற்சி மோடு உடன் வெளிவரும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் பேண்ட், சியோமி மி ஸ்மார்ட் பேண்ட் 5 ஐப் போன்ற சில ஸ்மார்ட் செயல்பாடுகளைக் கொண்ட ஒரு உடற்பயிற்சி கண்காணிப்பாளராக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
ஒன்பிளஸ் பேண்ட் பிளாக், நேவி ப்ளூ மற்றும் டேன்ஜரின் கிரே ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வரும். சென்சார்களைப் பொறுத்தவரை, இந்த சாதனத்தில் ஆப்டிகல் ரத்த ஆக்ஸிஜன் சென்சார் இருப்பதாகவும், 3-ஆக்சிஸ் ஆக்சிலோமீட்டர் மற்றும் கைரோஸ்கோப் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பல ஸ்போர்ட்ஸ் மோடு உடன் ஒன்பிளஸ் பேண்ட் IP68 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மதிப்பீட்டைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது புளூடூத் 5.0 இணைப்பு அம்சத்தை கொண்டிருக்கும் என்றும், இதில் டிராக்கர் மற்றும் 100 எம்ஏஎச் பேட்டரி மற்றும் யூ.எஸ்.பி டைப்-ஏ போர்ட் ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரே சார்ஜ்ஜில் 14 நாட்கள் பேட்டரி ஆயுளை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் பேண்டின் வெளியீடு Q1 2021 நிகழ்வின் போது நிகழும் என்று வதந்திகள் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








