களமிறங்கிய ஒன்பிளஸ் பேண்ட்: குறையே இல்லாத அம்சங்களோடு குறைந்த விலையில்!

|

ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் அணியக்கூடிய சாதனமான ஒன்பிளஸ் பேண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சியோமியின் எம்ஐ ஸ்மார்ட் பேண்ட் 5 மாடலுக்கு போட்டியிடும் விதமாக ஒன்பிளஸ் பேண்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் பேண்ட் அறிமுகம்

ஒன்பிளஸ் பேண்ட் அறிமுகம்

ஒன்பிளஸ் பேண்ட் டச் ஆதரவை கொண்டிருக்கிறது. இது அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த பேண்ட் இரத்த ஆக்சிஸன் அளவு மற்றும் இதய துடிப்பை கண்காணிக்க உதவுகிறது. மேலும் உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் மற்றும் சுகாதார ஆர்வர்களுக்காக ஒன்பிளஸ் பேண்ட்டில் புதிய ஒன்பிளஸ் ஹெல்த் பயன்பாடுகள் உள்ளன.

ஒன்பிளஸ் பேண்ட் விலை

ஒன்பிளஸ் பேண்ட் விலை

இந்தியாவில் ஒன்பிளஸ் பேண்ட் விலை ரூ.2,499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஃபிட்னஸ் பேண்ட் ஒற்றை கருப்பு வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்பேண்டானது ஒன்பிளஸ்.இன், ஒன்பிளஸ் ஸ்டோர், அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஒன்பிளஸ் பிரத்யேக ஆஃப்லைன் கடைகளில் ஜனவரி 13 முதல் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் பேண்ட் கிடைக்கும் இடம்

ஒன்பிளஸ் பேண்ட் கிடைக்கும் இடம்

ஒன்பிளஸ்.இன் மற்றும் ஒன்பிளஸ் ஸ்டோர் தளங்களில் ரெட் கேபிள் கிளப் மெம்பர்களுக்கு பிரத்யேகமாக ஒன்பிளஸ் பேண்ட் ஜனவரி 12 ஆம் தேதி காலை 9 மணிக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

டாப் 10 பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் இவரா?-அமேசான், பேஸ்புக் நிறுவனர்கள் பிடித்த இடம் இதுதான்!டாப் 10 பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் இவரா?-அமேசான், பேஸ்புக் நிறுவனர்கள் பிடித்த இடம் இதுதான்!

ஒன்பிளஸ் பேண்ட் விவரக்குறிப்புகள்

ஒன்பிளஸ் பேண்ட் விவரக்குறிப்புகள்

ஒன்பிளஸ் பேண்ட் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இதில் ஒன்பிளஸ் பேண்ட் 126x294 பிக்சல்கள் தீர்மானம், 1.1 அங்குல் அமோலெட் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இதில் ஆப்டிகல் இதய துடிப்பு சென்சார், இரத்த ஆக்ஸிஜன் சென்சார் உள்ளிட்டவைகள் உள்ளன. வெளிப்புறத்தில் ஓடுவதற்கு, உள்புறத்தில் ஓடுவதற்கு, கொழுப்பு கரைக்கும் ஓட்டம், வெளிப்புற நடைபயிற்சி, வெளிப்புற சைக்ளிங், உள்புற சைக்ளிங், கிரிக்கெட், பேட்மிண்டன், நீச்சல், யோகா உள்ளிட்ட 13 உடற்பயிற்சி முறைகள் ஒன்பிளஸ் பேண்டில் இருக்கிறது.

வாட்டர் ரெசிஸ்டென்ட் அம்சங்களோடு

வாட்டர் ரெசிஸ்டென்ட் அம்சங்களோடு

ஒன்பிளஸ் பேண்ட் ஐபி68 மற்றும் 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டென்ட்களோடு வருகிறது. மேலும் ஒன்பிளஸ் பேண்ட்டை பயன்படுத்தி தூக்க முறைகளை பகுப்பாய்வு செய்யலாம். பல ஆதரவுகள் இதில் இருக்கிறது. இருப்பினும் எந்தவொரு சுகாதார சான்றிதழ்களுடனும், மருத்துவ ரீதியிலான அங்கீகாரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

14 நாட்கள் சார்ஜ் நீட்டிப்பு ஆதரவு

14 நாட்கள் சார்ஜ் நீட்டிப்பு ஆதரவு

ஒன்பிளஸ் பேண்ட் தனிப்பயனாக்கப்பட்ட இதய துடிப்பு கண்காணிப்பு இருக்கிறது. மேலும் ஒழுங்கற்ற சுவாசத்தின்போது எச்சரிக்கும் அம்சமும் இதில் இருக்கிறது. ஒன்பிளஸ் பேண்ட் ஆண்ட்ராய்டு 6.0 இல் இயங்கும் எனவும் இது ப்ளூடூத் வி5.0 இணைப்பையும் கொண்டுள்ளது. இதில் 100 எம்ஏஎச் பேட்டரி இருக்கிறது. இதை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்யும்போது 14 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
OnePlus Band Launched in India at Rs.2499: Specs, Features and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X