Just In
- 35 min ago
பெண்களுக்காக ரிலையன்ஸ் அறிமுகம் செய்த Her Circle சமூக வலைத்தளம்.. இது என்ன புதுசா இருக்கு?
- 1 hr ago
ஒப்போ எஃப்19 ப்ரோ, ஒப்போ எஃப்19 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?
- 12 hrs ago
வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சத்தை எப்படிப் பயன்படுத்துவது?
- 16 hrs ago
மார்ச் 17: இந்தியாவில் களமிறங்கும் புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள்.!
Don't Miss
- News
அனல் பறக்கும் களம்.. "யாவாரம்" எப்படி போயிட்டிருக்கு.. வாங்க ஒரு ரவுண்டு பார்ப்போம்!
- Automobiles
எதிர்பாராத அளவிற்கு வரவேற்பு!! கபீரா எலக்ட்ரிக் பைக்குகளை வாங்க ஒரேடியாக குவிந்த வாடிக்கையாளர்கள்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 09.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய செலவுகளைத் தவிர்க்கவும்…
- Finance
கர்நாடாகாவில் இனி வீடு விலை குறையும்.. முத்திரைத் தாள் கட்டணம் 3% ஆகக் குறைப்பு..!
- Movies
டூப் இல்லாமல் சண்டை காட்சிகளில் அசால்ட்டு செய்யும் நவரச நாயகன் கார்த்திக்!
- Sports
ஐபிஎல்லுக்காகவும் கொஞ்சம் விக்கெட்டுகளை விட்டு வைங்கப்பா... கலாய்த்த ரிக்கி பாண்டிங்
- Education
ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விரைவில் புதிய பிட்டனஸ் பேண்ட் அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்.!
ஒன்பிளஸ் நிறுவனத்தின் சாதனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது. குறிப்பாக அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 8டி உள்ளிட்ட சில ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் அணியக்கூடிய சாதனங்கள் பிரிவில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கென ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் பேண்ட் சாதனத்தை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் வெளிவந்த தகவலின்படி ஒன்பிளஸ் பேண்ட் ஆனது இந்திய சந்தையில் ரூ.3 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதில் AMOLED டிஸ்ப்ளே, பல நாட்கள் பேக்கப் வழங்கும் பேட்டரி, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 மில்லியன் 5G பயனர்கள்.. அதிவேகமாக 5G துறையில் வளர்ந்து வரும் நாடு இதுதான்..

அதேபோல் ஒன்பிளஸ் நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து வியர் ஒஎஸ் தளத்தை மேம்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஒன்பிளஸ் வாட்ச் மாடலிலும் கூகுள் பிளாட்பார்ம் கொண்டிருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இப்போது ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன்ஓஎஸ் 11 மூலம் இயங்குகிறது. மேலும் 6.55 இன்ச் அளவிலான புல் எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) Fluid AMOLED டிஸ்ப்ளே கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ஒன்பிளஸ் 8டி சாதனத்தின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி ஸ்னாப்டிராகன் 850 SoC மற்றும் அட்ரினோ 650 ஜி.பீ.யூ சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் வீடியோ கேம் உள்ளிட்ட வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படும் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன்.

இந்த ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனில் மிகவும் முக்கியமானது கேமராக்கள் தான். அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 586 முதன்மை சென்சார் (எஃப் / 1.7 லென்ஸ்) + 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 481 சென்சார் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் (எஃப் / 2.2 லென்ஸ்) + 5 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் + 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. செல்பீக்களுக்காக, டிஸ்பிளேவின் மேல் இடது மூலையில் உள்ள ஹோல் பஞ்ச் கட்அவுட்டில் எஃப் / 2.4 லென்ஸுடன் சிங்கிள் 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார் உள்ளது.

5 ஜி, 4 ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, க்ளோனாஸ் மற்றும் சார்ஜ் செய்வதற்கான யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனின் இந்த மொத்த அமைப்பும் ஒரு 4,500 எம்ஏஎச் பேட்டரியால் சக்தியூட்டப்படுகிறது. மேலும் இது 65W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது பேட்டரியை வெறும் 39 நிமிடங்களில் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190