பேசாமல்.. 55-இன்ச் TV வாங்கலாம் போலயே! ஆசையை தூண்டும் விலையில் OnePlus-ன் லேட்டஸ்ட் டிவி!

|

இந்தியாவில் சியோமி நிறுவனத்திற்குப் போட்டியாகத் தொடர்ந்து பல அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். குறிப்பாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள் தரமான அம்சங்களுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு கிடைக்கின்ற என்றுதான் கூறவேண்டும்.

 புதிய OnePlus TV 55 Y1S Pro

புதிய OnePlus TV 55 Y1S Pro

இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய OnePlus TV 55 Y1S Pro எனும் ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது ஏற்கனவே Y1S Pro சீரிஸ்-ல் 43-இன்ச் மற்றும் 50-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய 55-இன்ச் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்ய உள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

300 வருஷத்தில் இப்படி ஒரு வைரத்தை பூமியில யாரும் கண்டுபிடிக்கல.! மதிப்பு எவ்வளவு தெரியுமா?300 வருஷத்தில் இப்படி ஒரு வைரத்தை பூமியில யாரும் கண்டுபிடிக்கல.! மதிப்பு எவ்வளவு தெரியுமா?

55-இன்ச் ஸ்மார்ட் டிவி

விரைவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் டிவி 55 Y1S Pro மாடல் ஆனது தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த புதிய 55-இன்ச் ஸ்மார்ட் டிவியின் அம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்திய வரலாற்றில் முதல்முறை.. இந்திய வரலாற்றில் முதல்முறை.. "விண்ணில் பாயும் விக்ரம்" உற்று நோக்கும் உலக நாடுகள்- ரெடியா இருங்க!

4கே அல்ட்ரா எச்டி ஆதரவு

அதாவது டிப்ஸ்டர் இஷான் அகர்வால் இந்த ஸ்மார்ட் புதிய ஒன்பிளஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை பகிர்ந்துள்ளார். அதன்படி விரைவில் அறிமுகமாகும் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 4கே அல்ட்ரா எச்டி ஆதரவுடன் வெளிவரும். எனவே பயனர்களுக்கு இந்த ஸ்மார்ட் டிவி
சிறந்த திரை அனுபவம் கொடுக்கும் என்றே கூறலாம்.

Zomato-வை கதற விட்ட கேரள சேட்டன்! ஆர்டர் செய்ததோ ரூ.362-க்கு.. வாங்கியதோ ரூ.8,362! என்ன நடந்தது?Zomato-வை கதற விட்ட கேரள சேட்டன்! ஆர்டர் செய்ததோ ரூ.362-க்கு.. வாங்கியதோ ரூ.8,362! என்ன நடந்தது?

புதிய தொழில்நுட்பங்கள்

புதிய தொழில்நுட்பங்கள்

அதாவது சியோமி, சாம்சங், எல்ஜி நிறுவனங்களை விட மேம்பட்ட ஸ்கீரின் வசதியை வழங்குகிறது ஒன்பிளஸ் நிறுவனம். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். அதேபோல் இந்த புதிய டிவியில் Motion Estimation, Motion Compensation போன்றவை காட்சிகளை மென்மையாக உணர வைக்கும். அதாவது இந்த புதிய தொழில்நுட்பங்கள் மூலம் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும்.

Samsung பயனர்களுக்கு Airtel வெளியிட்ட அறிவிப்பு.! எல்லா போனிலும் 5G.! ஆனா இந்த 2 போனுக்கு மட்டும்?Samsung பயனர்களுக்கு Airtel வெளியிட்ட அறிவிப்பு.! எல்லா போனிலும் 5G.! ஆனா இந்த 2 போனுக்கு மட்டும்?

ஆண்ட்ராய்டு டிவி

ஆண்ட்ராய்டு டிவி

மேலும் புதிய ஒன்பிளஸ் டிவி 55 Y1S Pro மாடல் எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

15 நாட்கள் கெடு! அதற்குள் SIM தொடர்பான இந்த சேவையை நிறுத்தணும்! Airtel, Jio-விற்கு இந்திய அரசு வார்னிங்!15 நாட்கள் கெடு! அதற்குள் SIM தொடர்பான இந்த சேவையை நிறுத்தணும்! Airtel, Jio-விற்கு இந்திய அரசு வார்னிங்!

ஸ்மார்ட்போன் அல்லது ஸ்மார்ட்வாட்ச்

ஸ்மார்ட்போன் அல்லது ஸ்மார்ட்வாட்ச்

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அல்லது ஸ்மார்ட்வாட்ச் வைத்திருக்கும் பயனர்கள் இந்த ஸ்மார்ட் டிவியை கட்டுப்படுத்த முடியும். அதாவது உங்களது ஒன்பிளஸ் போன் அல்லது ஸ்மார்ட்வாட்ச் கொண்டு இந்த டிவியை ஆஃப் செய்ய முடியும், ஒலியளவைச் சரிசெய்ய முடியும். இதுதவிர பல்வேறு சிறப்பு அம்சங்களை வழங்கும் இந்த 55-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்.

நம்பவே முடியல! 50 மணி நேரம் பேட்டரி லைஃப் வழங்கும் இயர்பட்ஸ் இவ்ளோ கம்மி விலைக்கா? என்ன மாடல்?நம்பவே முடியல! 50 மணி நேரம் பேட்டரி லைஃப் வழங்கும் இயர்பட்ஸ் இவ்ளோ கம்மி விலைக்கா? என்ன மாடல்?

பிரைம் வீடியோ மற்றும் யூடியூப்

பிரைம் வீடியோ மற்றும் யூடியூப்

நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் யூடியூப் போன்ற பல ஆப் வசதிகள் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளன. மேலும் உங்களுக்கு தேவையான ஆப்ஸ்களை கூட இந்த 55-இன்ச் ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியம் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தம் இல்லாம தூக்கிட்டாங்க! இனிமேல் இந்த Jio பிளானும் கிடைக்காது; முக்கிய நன்மை ஒன்றும் கிடைக்காது!சத்தம் இல்லாம தூக்கிட்டாங்க! இனிமேல் இந்த Jio பிளானும் கிடைக்காது; முக்கிய நன்மை ஒன்றும் கிடைக்காது!

 புதிய 55-இன்ச் ஸ்மார்ட் டிவி

மூன்று எச்டிஎம்ஐ போர்ட், இரண்டு யுஎஸ்பி போர்ட், 1 RJ45, 1 RF input port போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் டிவி 55 Y1S Pro மாடல். அதேபோல் இந்த புதிய 55-இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.40,000-விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
OnePlus all set to launch a new 55 inch 4K Ultra HD smart TV in India Around Rs 40000 Budget: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X