Home
Gadgets

OnePlus நீ நல்லா இருடா.. Valentines Day ஆபர்.. பிப்.15 வரை 5 டேப்லெட், 7 இயர்பட்ஸ் மீது விலை குறைப்பு!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் தனது டேப்லெட்டுகள் மற்றும் ஆடியோ தயாரிப்புகளின் மீது 2026 காதலர் தின சலுகைகளை (2026 Valentines Day Offers) அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் (விலை குறைப்பு + பேங்க் டிஸ்கவுண்ட்) ஏற்கனவே ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் குவிக் காமர்ஸ் டெலிவரி ஆப்களில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த சலுகைகள் பிப்ரவரி 15 வரை கிடைக்கும்.

ஒன்பிளஸ் டேப்லெட் மீதான ஆபர்கள்: ஒன்பிளஸ் பேட் கோ (8GB+128GB Wi-Fi) ஆப்ஷன் ரூ.17,999 க்கு பதிலாக ரூ.14,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. அதே ஒன்பிளஸ் பேட் கோ (8GB+128GB LTE) ஆப்ஷன் ரூ.19,999 க்கு பதிலாக ரூ.14,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.

பிப்.15 வரை 5 டேப்லெட், 7 இயர்பட்ஸ் மீது விலை குறைப்பு!

ஒன்பிளஸ் பேட் 2 (8GB+128GB Wi-Fi) ஆப்ஷன் ரூ.36,999 க்கு பதிலாக ரூ.36,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. ஒன்பிளஸ் பேட் 3 (12GB+256GB WiFi) ஆப்ஷன் ரூ.47,999 க்கு பதிலாக ரூ.44,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது

ஒன்பிளஸ் பேட் லைட் (6GB+128GB Wi-Fi) ஆப்ஷன் ரூ.15,999 க்கு பதிலாக ரூ.12,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. அதே ஒன்பிளஸ் பேட் லைட் (8GB+128GB LTE) ஆப்ஷன் ரூ.17,999 க்கு பதிலாக ரூ.14,499 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. கடைசியாக ஒன்பிளஸ் பேட் கோ 2 (8GB+128GB Wi-Fi) ரூ.26,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கு கிடைக்கிறது.

ஒன்பிளஸ் இயர்பட்ஸ் மீதான ஆபர்கள்:
1. ஒன்பிளஸ் புல்லட்ஸ் இஸட்3 (OnePlus Bullets Z3) ரூ.1,699 க்கு பதிலாக ரூ.1,299 க்கு வாங்க கிடைக்கிறது.
2. ஒன்பிளஸ் பட்ஸ் இஸட்2 ஏஎன்சி (OnePlus Buds Z2 ANC) ரூ.2,099 க்கு பதிலாக ரூ.1,899 க்கு வாங்க கிடைக்கிறது

3. ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3ஆர் (OnePlus Nord Buds 3r) ரூ.1,799 க்கு பதிலாக ரூ.1,599 க்கு வாங்க கிடைக்கிறது
4. ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 (OnePlus Nord Buds 3) ரூ.2,299 க்கு பதிலாக ரூ.1,999 க்கு வாங்க கிடைக்கிறது

5. ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 ப்ரோ (OnePlus Nord Buds 3 Pro) ரூ.2,999 க்கு பதிலாக ரூ.2,699 க்கு வாங்க கிடைக்கிறது
6. ஒன்பிளஸ் பட்ஸ் 4 (OnePlus Buds 4) ரூ.5,999 க்கு பதிலாக ரூ.5,499 க்கு வாங்க கிடைக்கிறது
7. ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 (OnePlus Buds Pro 3) ரூ.11,999 க்கு பதிலாக ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது

ஒன்பிளஸ் பேட் 2 டேப்லெட்டின் முக்கிய அம்சங்கள்: இது 3000 × 2120 ரெசல்யூஷன், 900நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 12.1-இன்ச் எல்சிடி டிஸ்பிளே, 6 ஸ்பீக்கர் செட்டப், ஹை-ரெஸ் சவுண்ட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், 8 ஜிபி / 12 ஜிபி ரேம், 128 ஜிபி / 256 ஜிபி ஸ்டோரேஜ், 13எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா மற்றும் 67W SUPERVOOC வயர்டு பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 9510mAh பேட்டரியை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3ஆர் முக்கிய அம்சங்கள்: ஒன்பிளஸ்-ன் இந்த ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) ஹெட்செட் ஆனது சார்ஜிங் கேஸ் உட்பட மொத்தம் 54 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்பை வழங்குவதாக கூறப்படுகிறது. மேலும் சி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி55 ரேட்டிங்கையும் கொண்டுள்ளன.

கூடவே 12.4மிமீ டைட்டானியம் டைனமிக் டிரைவர்கள், ஏஐ ஆதரவு உடனான கால் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி உடனும் வருகிறது. மேலும் இந்த இயர்போன்கள் நிகழ்நேர ஏஐ மொழிபெயர்ப்பு மற்றும் 360-டிகிரி ஒன்பிளஸ் 3டி ஆடியோ மற்றும் பைண்ட் மை இயர்பட்ஸ் (Find My Earbuds) அம்சத்திற்கான ஆதரவையும் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 2026 Valentines Day Offers on Tablets and Earbuds Including Pad 3 Buds 4 Till Feb 15
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X