Home
Gadgets

ஒரே கல்லுல 2 மாங்காய்.. OnePlus-ன் 2-in-1 கேபிள்.. இனி போன், வாட்ச் 2-ஐயும் ஒன்னா சார்ஜ் பண்ணலாம்.. என்ன விலை?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் ஆனது, ஒரே கேபிள் மூலம் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் (Smartphone and Smartwatch) ஆகிய இரண்டையும் சார்ஜ் செய்ய விரும்பும் பயனர்களை இலக்காக கொண்டு ஒரு புதிய சார்ஜிங் ஆக்சஸெரீயை அறிமுகப்படுத்தி உள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் இதை 2-இன்-1 சூப்பர்வூக் கேபிள் (2-in-1 SUPERVOOC Cable) என்று அழைக்கிறது.

ஒன்பிளஸ் 2-இன்-1 சூப்பர்வூக் கேபிள் விலை: இது $29.99 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பின் படி ரூ.2580 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த தயாரிப்பின் இந்திய அறிமுகம் குறித்து எந்த விவரங்களும் இல்லை; இதுகுறித்த தகவல் கிடைத்தால் அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.

OnePlus-ன் 2-in-1 கேபிள்.. இனி ஒன்னா சார்ஜ் பண்ணலாம்.. என்ன விலை?

ஒன்பிளஸ் 2-இன்-1 சூப்பர்வூக் கேபிள் அம்சங்கள்: இந்த கேபிள் 120 செமீ நீளம் கொண்டது மற்றும் ஒரு ஸ்மார்ட்போனை மட்டும் சார்ஜ் செய்ய பயன்படுத்தும்போது 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. ஒரே நேரத்தில் ஒரு ஸ்மார்ட்போன் மற்றும் ஒரு ஸ்மார்ட்வாட்ச்சை சார்ஜ் செய்ய பயன்படுத்தும்போது, இந்த கேபிள் ஸ்மார்ட்போனுக்கு 67W மற்றும் ஒரு ஸ்மார்ட்வாட்சுக்கு 10W-ஐ வழங்கும்

இதனால் பயனர்கள் சார்ஜிங் ஸ்பீடில் (Charging Speed) குறிப்பிடத்தக்க சமரசம் செய்யாமல் 2 டிவைஸ்களையும் ஒரே சார்ஜ் செய்ய முடியும். இந்த கேபிளின் ஒரு முனை ஒரு நிலையான யூஎஸ்பி-ஏ கனெக்டரை (USB-A Connector) கொண்டுள்ளது, அதே நேரத்தில் மறுமுனை 2 அவுட்புட்களாக (2 Output) பிரிக்கிறது.

ஸ்மார்ட்போன்களுக்கான யூஎஸ்பிக்-சி பிளக் (USB-C Plug) மற்றும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மேக்னெட்டிக் போகோ பின் கனெக்டர் (Magnetic POGO pin connector) உள்ளது. மேக்னெட்டிக் கனெக்டர் ஆனது 2 கோல்ட் சார்ஜிங் பின்களுடன் கடிகாரத்தின் பின்புறத்தில் பாதுகாப்பாக இணைகிறது மற்றும் பயணத்தின் போது தனியாக ஸ்மார்ட்வாட்ச் சார்ஜரை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை நீக்குகிறது.

இந்த கேபிளுக்கு "அதிக சுமையில்" இருந்து பாதுகாப்பை வழங்கவும், நிலையான மின் விநியோகத்தை உறுதி செய்யவும் ஒன்பிளஸ் நிறுவனம் இந்த கேபிளின் உள்ளே ஒரு இ-மார்க்கர் ஸ்மார்ட் சிப்பை (E-marker smart chip) சேர்த்துள்ளது. சார்ஜிங் வேகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் மேம்படுத்த, இந்த கேபிள் தடிமனான தூய செப்பு கோர்களையும் பயன்படுத்துகிறது.

இந்த 2-இன்-1 சூப்பர்வூக் கேபிள் ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பிளஸ் டிவைஸ்களுடன் இணக்கமானது மற்றும் ஏற்கனவே ஒன்பில்ஸ் ஸ்மார்ட்போன் மற்றும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் இரண்டையும் பயன்படுத்தும் பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது இது மற்ற பிராண்டுகளின் வியரபிள்களுடன் வேலை செய்ய வடிவமைக்கப்படவில்லை.

ஒன்பிளஸ் தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள் ஆக ஒன்பிளஸ் நோர்ட் 5 சீரீஸ் (OnePlus Nord 5 Series) கீழ் அறிமுகமான 2 மாடல்களுமே இப்போது வாங்க கிடைக்கிறது. இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 (OnePlus Nord CE 5) ஸ்மார்ட்போனின் பேஸிக் 8GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல 8GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.26,999 க்கும் மற்றும் ஹை எண்ட் 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.28,999 க்கும் வாங்க கிடைக்கிறது. மறுகையில் உள்ள ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) ஸ்மார்ட்போனின் பேஸிக் 8GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.31,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம் + 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.34,999 மற்றும் ரூ.37,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 2 in 1 SUPERVOOC Cable Can Charge Smartphone and Smartwatch Same time Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X