விரைவில்: மலிவு விலையில் களமிறங்கும் ஒன்பிளஸ் பவர் பேங்க்.!

|

ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் மாடலை அக்டோபர் 14-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் ஒன்பிளஸ் நிறுவனத்தின் பவர் பேங்க் மாடல் ஆனது இந்தியாவில் மலிவு விலையில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் கண்டிப்பாக அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில்: மலிவு விலையில் களமிறங்கும் ஒன்பிளஸ் பவர் பேங்க்.!

இந்த ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் உடன் ஒன்பிளஸ் நோர்டின் சிறப்பு பதிப்பும், ஸ்மார்ட் வாட்ச், வயர்லெஸ் இயர்பட்ஸ் போன்ற புதிய தயாரிப்புகள் மட்டுமின்றி ஒரு புதிய ஒன்பிளஸ் பவர் பேங்க் சாதனமும் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

டிப்ஸ்டர் இஷன் அகர்வால் என்பவர் விரைவில் அறிமுகம் செய்யப்படும் பவர் பேங்க்கின் பிரெஸ் புகைப்படங்கள் மற்றும் விவரக்குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஒன்பிளஸ் 8டி போல இந்த பவர் பேங்க் ஒரு உயர்ந்த அம்சங்கள் கொண்டிருக்கவில்லை.

விரைவில்: மலிவு விலையில் களமிறங்கும் ஒன்பிளஸ் பவர் பேங்க்.!

வெளிவந்த தகவலின்படி 18வாட் பாஸ்ட் சார்ஜிங்கை வழங்கக்கூடிய மிகவும் எளிமையான பவர் பேங்க் ஆக இருக்கும். இப்போது விற்பனையில் உள்ள அனைத்து ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களும் வார்ப் சார்ஜ் வழியிலான அதிக வேகத்தை ஆதரிக்கின்றன. எனவே அறிமுகமாகவுள்ள புதிய ஒன்பிளஸ் பவர் பேங்க் ஆனது உங்கள் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை அதன் முழு வேகத்தில் சார்ஜ் செய்ய முடியாது.

இந்த ஒன்பிளஸ் பவர் பேங்க் சாதனம் ஆனது ஒரு யூ.எஸ்.பி-சி போர்ட் மற்றும் இரண்டு யூ.எஸ்.பி-ஏ போர்ட்களுடன் வெளியாகும். பின்பு இந்த பவர் பேங்க்கை சார்ஜ் செய்ய மற்றும் பிற சாதனங்களையும் சார்ஜ் செய்ய யூ.எஸ்.பி-சி போர்ட்டை பயன்படுத்தப்படலாம்.

விரைவில்: மலிவு விலையில் களமிறங்கும் ஒன்பிளஸ் பவர் பேங்க்.!

புதிய ஒன்பிளஸ் பவர் பேங்க் 10,000 எம்ஏஎச் ஆனது பச்சை மற்றும் கருப்பு நிறங்களில் அறிமுகம் செய்யப்படும் என டிப்ஸ்டார் அகர்வால் கூறியுள்ளர். மேலும் இதன் கருப்பு வண்ண மாடலில் கார்பன் ஃபைபர் இழை அமைப்பை பிரதிபலிக்கும் அழகிய வேலைப்பாடு மற்றும் ஒன் ப்ளஸ் நிறுவனத்தின் Never Settle என்ற வாசகத்துடன் வர இருக்கிறது.

புதிய ஒன்பிளஸ் பவர் பேங்க் மாடல் ஆனது ரூ.1,200 முதல் ரூ.1,400 க்குள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒப்போ, ரியல்மி போன்ற நிறுவனங்களும் இதே விலையில் தரமான பவர் பேங்க் மாடல்களை அறிமுகம் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில்: மலிவு விலையில் களமிறங்கும் ஒன்பிளஸ் பவர் பேங்க்.!

இருந்தபோதிலும் சியோமி நிறுவனத்தின் பவர் பேங்க்குகளுடன் ஒன்பிளஸ் பவர் பேங்க்கால் போட்டியிட முடியாது என்பது வெளிப்படை. ஆனாலும் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும்

Most Read Articles
Best Mobiles in India

English summary
OnePlus 18W Power Bank Launching in India on October 14 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X