அறிமுகமானது புது ஒன்பிளஸ் 5ஜி போன்.. 9000எம்ஏஎச் பேட்டரி.. 200எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் 16 (OnePlus 16) ஸ்மார்ட்போனை தற்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இப்போது ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஒன்பிளஸ் 16 அம்சங்கள் (OnePlus 16 specifications): 6.78-இன்ச் பிளாட் 1.5கே LTPO AMOLED டிஸ்பிளே உடன் இந்த புதிய ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளேவில் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (165Hz refresh rate) மற்றும் 2000 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் எக்ஸ்ட்ரீம் ஜென் 6 சிப்செட் (Octa Core Snapdragon 8 Elite Extreme Gen 6)உடன் இந்த ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 850 ஜிபியு (Adreno 850 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.
200எம்பி பிமைரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் மூலம் 4கே டால்பி விஷன் மற்றும் 8கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
கலர்ஓஎஸ் 17 உடன் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் இயங்குகிறது. 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதிகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் போன்.
9000எம்ஏஎச் பேட்டரி உடன் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கொடுக்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும்யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) இந்த புதிய போனில் உள்ளன.
5ஜி, 4ஜி, வைஃபை 7, புளூடூத் 6.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், கலிலியோ, என்எப்சி உள்ளிட்ட பல்வேற கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ஒன்பிளஸ் போனில் உள்ளன. டுமாரோ ஸ்டார்லைட் (Tomorrow Starlight), டார்க் ஃபாரஸ்ட் (Dark Forest) மற்றும் மார்ஷியன் மாஸ்டர்பீஸ் (Martian Masterpiece) ஆகிய கலர்களில் இந்த போன் வாங்க கிடைக்கும்.
ஒன்பிளஸ் 16 விலை
- 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட் ஒன்பிளஸ் 16 மாடலின் விலை 5999 yuan (இந்திய மதிப்பில் ரூ.85,850)
- 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட் ஒன்பிளஸ் 16 மாடலின் விலை 6799 yuan (இந்திய மதிப்பில் ரூ.97,300)
- 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட் ஒன்பிளஸ் 16 மாடலின் விலை 7499 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,07,315)
- 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட் ஒன்பிளஸ் 16 மாடலின் விலை 8499 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,21,625)
- சீனாவில் இன்று ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications
