டபுள் டமாக்கா.. 8600mAh பேட்டரி புது OnePlus போனுடன் சேர்ந்து 15000mAh ஒன்பிளஸ் பவர் பேங்க் அறிமுகம்!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் சீனாவில் அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா (OnePlus Ace 6 Ultra) ஸ்மார்ட்போனுடன் சேர்த்து, 15000எம்ஏஎச் கெப்பாசிட்டி கொண்ட சூப்பர்வூக் 120W பவர் பேங்கையும் (OnePlus 15000mAh SuperVOOC 120W Power Bank) அறிமுகம் செய்துள்ளது.
ஒன்பிளஸ் 15000எம்ஏஎச் சூப்பர்வூக் 120W பவர் பேங்க்கின் அம்சங்கள்: ஒன்பிளஸ் சூப்பர்வூக் 120W பவர் பேங்க் ஆனது தொடரிணைப்பில் உள்ள மூன்று 5000mAh செல்களை கொண்டு உருவாக்கப்பட்ட 15,000mAh பேட்டரியை கொண்டுள்ளது, இது 58.65Wh ஒருங்கிணைந்த எனர்ஜி ரேட்டிங்கை (Combined energy rating) வழங்குகிறது.

இந்த பவர் பேங்க், ஒப்போவின் ஐஸ் ஷீல்ட் பாதுகாப்பு பேட்டரி தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது, இது துளைகள், கீழே விழுதல், அதிக வெப்பமடைதல் மற்றும் அதிகப்படியான சார்ஜிங் ஆகியவற்றிற்கு எதிராக மேம்பட்ட ஆயுளை வழங்குகிறது. அதாவது இது 2026 பாதுகாப்பு தரநிலைகளுக்கு இணங்குகிறது.
இதன் யுஎஸ்பி டைப்-சி போர்ட் அதிகபட்சமாக 120W வெளியீட்டை வழங்குகிறது, இது இணக்கமான ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை வேகமாக சார்ஜ் செய்யும் திறனை கொண்டுள்ளது. யுஎஸ்பி-ஏ போர்ட் ஆனது 11V/10.95A வரை ஹைஸ்பீட் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. இரண்டு போர்ட்களையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தும்போது, பவர் பேங்க் யுஎஸ்பி-ஏ போர்ட்டிற்கு 30W மற்றும் யுஎஸ்பி-சி போர்ட்டிற்கு 65W என அவுட்புட்டை சரிசெய்கிறது.
இந்த பவர் பேங்க், PD 3.0, 100W வரையிலான PPS, குயிக் சார்ஜ் (QC) மற்றும் UFCS உள்ளிட்ட பல சார்ஜிங் நெறிமுறைகளை ஆதரிக்கிறது. இந்த பரந்த இணக்கத்தன்மை, ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், டேப்லெட்டுகள் மற்றும் கேமிங் கன்சோல்கள் போன்ற பல்வேறு டிவைஸ்களை சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. வேகமாக ரீசார்ஜ் செய்வதற்காக, இந்த பவர் பேங்கில் யுஎஸ்பி-சி போர்ட்டில் 20V/3.25A இன்புட் திறனும் உள்ளது.
இந்த பவர் பேங்கில் ஒப்போவின் பவர் பேங்க் அசிஸ்டன்ட் சாஃப்ட்வேர் (Oppo's Power Bank Assistant software) உள்ளது. இதன் மூலம் பயனர்கள் அதை ஒரு கம்பியூட்டர் உடன் இணைத்து, பேட்டரி சுழற்சி எண்ணிக்கை மற்றும் செயல்பாட்டு நிலை போன்ற விரிவான அளவீடுகளை அணுகலாம்.
வடிவமைப்பை பொறுத்தவரை இது 105 x 70 x 29 மிமீ அளவிலும், இதன் எடை சுமார் 310 கிராம் ஆகவும் உள்ளது. சிறந்த பிடிமானம் மற்றும் எளிமையாக எடுத்து செல்வதற்காக ஒன்பிளஸ் நிறுவனம், சருமத்திற்கு உகந்த பொருளால் ஆன 'ஸ்பீட் ரெட்' கவர் உடன் இந்த பவர் பேங்கை வடிவமைத்துள்ளது. இந்த பவர் பேங்க், விமான பாதுகாப்பு தேவைகளைப் பூர்த்தி செய்வதால், பயனர்கள் இதை விமானங்களில் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
ஒன்பிளஸ் 15000எம்ஏஎச் சூப்பர்வூக் 120W பவர் பேங்க்கின் விலை: சீனாவில் இந்த பவர் பேங்க் 299 யுவானுக்கு, அதாவது சுமார் 44 அமெரிக்க டாலர்களுக்கு, இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.4190 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய சந்தைக்கு வருமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? சீனாவில் இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ருபாய் மதிப்பின்படி சுமார் ரூ.48,400 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
இது ஏஸ் அவேக்கனிங் மற்றும் மெட்டல் ஸ்டார்ம் ஆகிய இரண்டு கலர்களில் அங்கே வாங்க கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது 165Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 1.5கே ரெசல்யூஷன் AMOLED டிஸ்பிளே, மீடியாடெக் டைமென்சிட்டி 9500 சிப்செட், 16GB வரை ரேம், 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா யூனிட், 8600mAh பேட்டரி ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. இது இந்திய சந்தைக்கு ஒரு ரீபிராண்டிங் வெர்ஷன் ஆக வருமா (அதாவது அதே அம்சங்களுடன் வேறு மாடல் பெயரின் கீழ் அறிமுகம் செய்யப்படுமா) என்பது குறித்து தகவல் இல்லை.


Click it and Unblock the Notifications