Home
Gadgets

OnePlus 13-க்கான 3 Magnetic Cases அறிமுகம்.. மரப்பட்டை கலரும் உள்ளது.. என்ன விலை? ஜன.10 முதல் விற்பனை!

2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்களான ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) மாடல்கள் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. இவ்விரு ஸ்மார்ட்போன்களும் முறையயே ஜனவரி 10 மற்றும் ஜனவரி 13 ஆம் தேதிகளில் விற்பனைக்கு வர உள்ளன.

இதற்கிடையில் ஒன்பிளஸ் நிறுவனமானது அதன் பிளாக்ஷிப் மாடலான ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனிற்கான மேக்னெட்டிக் கேஸ்கள் (OnePlus 13 Magnetic Cases) மற்றும் 50W ஏர்வூக் வயர்லெஸ் சார்ஜரை (AIRVOOC wireless charge) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இவைகளின் விலை நிர்ணயம் என்ன? எப்போது முதல் வாங்க கிடைக்கும்? இதோ விவரங்கள்:

OnePlus 13-க்கான 3 Magnetic Cases அறிமுகம்!

ஒன்பிளஸ் 13 மேக்னெட்டிக் கேஸ்களின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் மொத்தம் 3 ஒன்பிளஸ் 13 மேக்னெட்டிக் கேஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஒன்பிளஸ் 13 சாண்ட்ஸ்டோன் மேக்னடிக் கேஸ் (OnePlus 13 Sandstone magnetic case) ஆனது இந்தியாவில் ரூ.1,299 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வூட் பிளாக் ஃபினிஷில் உள்ள ஒன்பிளஸ் 13 வுட் க்ரெயின் ஹாஃப்-பேக் கேஸ் (OnePlus 13 Wood Grain magnetic half-pack case) ஆனது ரூ.2,299 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடைசியாக உள்ள ஒன்பிளஸ் 13 அரமிட் ஃபைபர் மேக்னடிக் கேஸ் (OnePlus 13 Aramid Fiber magnetic case) ஆனது ரூ.2,499 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,

இந்த மூன்று கேஸ்களுமே ஒன்பிளஸ் இந்தியா இணையதளம் (OnePlus India Website) வழியாக ஜனவரி 10 ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கும். நினைவூட்டம் வண்ணம் அதே ஜனவரி 10 ஆம் தேதி முதல் தான் ஒன்பிளஸ் 13 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனையும் தொடங்குகிறது.

50W ஏர்வூக் வயர்லெஸ் சார்ஜரின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: 50W ஏர்வூக் வயர்லெஸ் சார்ஜர் ஆனது ஒயிட் கலர் ஆப்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இது ரூ.5,999 க்கு வாங்க கிடைக்கும். இது கூடிய விரைவில் ஒன்பிளஸ் இந்தியா இ-ஸ்டோர் வழியாக விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது 100W வயர்டு சூப்பர்வூக் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனின் அசல் விலை ரூ.69,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ரூ.5000 பேங்க் கேஷ்பேக் ஆபருக்கு பின்னர் இது ரூ.64,999 க்கு வாங்க கிடைக்கும். இதேபோல 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷனின் அசல் விலை ரூ.76,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, ரூ.5000 பேங்க் கேஷ்பேக் ஆபருக்கு பின்னர் ரூ.71,999 க்கு வாங்க முடியும்.

கடைசியாக 24ஜிபி ரேம் + 1டிபி ஆப்ஷனின் அசல் விலை ரூ.89,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ரூ.5000 பேங்க் கேஷ்பேக் ஆபருக்கு பின்னர் இது ரூ.84,999 க்கு வாங்க கிடைக்கும். இந்த மூன்று வேரியண்ட்களுமே வருகிற 2025 ஜனவரி 10 ஆம் தேதியன்று திறந்த விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன. கூடவே 3 வேரியண்ட்கள் மீதும் ரூ.7000 வரையிலான எக்ஸ்சேன்ஜ் போனஸும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.42,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.49,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்போன் ஆஸ்ட்ரெயில் ட்ரையல் (Astral Trail) மற்றும் நெபுலா நோயர் (Nebula Noir) ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஜனவரி 10 ஆம் தேதி முதலும், ஒன்பிளஸ் 13ஆர் ஜனவரி 13 ஆம் தேதி முதலும் விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13 Magnetic Cases 50W AIRVOOC Wireless Charger Launched in India See Price Sale From Jan 10
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X