Home
Gadgets

கலக்குறே OnePlus.. 12000mAh உடன் புது Power Bank.. 6100mAh பேட்டரியுடன் புது Phone அறிமுகம்.. என்ன விலை?

சீனாவில் இன்று (ஜூன் 27) நடந்த வெளியீட்டு நிகழ்வில் ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் புதிய ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் சேர்த்து, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் அதன் புதிய 12000எம்ஏஎச் பவர் பேங்க்கை அறிமுகம் செய்தது. கிளவுட் கிரீன் மற்றும் சில்வர் விங் ஒயிட் என்கிற இரண்டு வண்ணங்களில் வெளியாகியுள்ள புதிய ஒன்பிளஸ் பவர் பேங்கின் விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இதனுடன் அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோவின் விலை என்ன? அதன் முக்கிய அம்சங்கள் என்ன? இதோ விவரங்கள்:

ஒன்பிளஸ் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் 12000எம்ஏஎச் பவர் பேங்க்கின் முக்கிய அம்சங்கள்: இது யூஎஸ்பி-சி போர்ட் மற்றும் யூஎஸ்பி-ஏ போர்ட் ஆகிய இரண்டையுமே கொண்டுள்ளது. மேலும் இவ்விரண்டுமே சூப்பர்வூக் 100W பாஸ்ட் சார்ஜிங்கை வழங்கும். இந்த பவர் பேங்கை பயன்படுத்தி ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனை ஸாஜ் செய்தால் வெறும் 17 நிமிடங்களில் 60% பேட்டரி சார்ஜ் ஆகிவிடும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் கூறுகிறது.

கலக்குறே OnePlus.. 12000mAh கெப்பாசிட்டி உடன் புதிய Power Bank!

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அப்பால், இந்த புதிய பவர் பேங்க் ஆனது பிடி/பிபிஎஸ்/க்யூசி போன்ற முக்கிய சார்ஜிங் நெறிமுறைகளையும் ஆதரிக்கிறது. அதாவது இது போன்கள் மட்டுமின்றி லேப்டாப்கள், டேப்லெட்டுகள் மற்றும் பல வகையான மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்யும் திறன் கொண்டது என்று அர்த்தம். லேப்டாப்களுக்கு இணக்கமான இந்த ஒன்பிளஸ் பவர் பேங்க் ஆனது 45W பாஸ்ட் சார்ஜிங்கை வழங்கும்.

மேலும் இந்த ஒன்பிளஸ் பவர் பேங்க் ஆனது 45W அதிவேக செல்ப்-சார்ஜிங் செயல்பாட்டையும் கொண்டுள்ளது. இதன் மூலம் இது வெறும் 90 நிமிடங்களில் 1% முதல் 100% வரை ரீசார்ஜ் ஆகிவிடும். கூடுதல் வசதிக்காக, இந்த பவர் பேங்க் ஒரு டைனமிக் ப்ரீதிங் லைட்டிங்கையும் கொண்டுள்ளது.

இது ஒரே கிளிக்கில் தற்போதைய பவர் அளவைக் காட்டும். மேலும் அதை டபுள் கிளிக் செய்தால்.. ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் ஹெட்ஃபோன்கள் போன்ற சிறிய சாதனங்களை பாதுகாப்பாக சார்ஜ் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட லோ கரண்ட் மோட்-ஐ (Low Current Mode) எனேபிள் செய்யும்.

ஒன்பிளஸ் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் 12000எம்ஏஎச் பவர் பேங்க்கின் விலை நிர்ணயம்: முன்னரே குறிப்பிட்டபடி ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் பவர் பேங்க் ஆனது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அங்கே இது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.3400 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் ஜூலை 19 ஆம் தேதி முதல் சலுகை விலையில் விற்பனைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை கொண்டுள்ளது. இது இ-ஸ்போர்ட்ஸ் கிரேடு கேமிங் டிஸ்க்ரீட் கிராபிக்ஸ் சிப் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த பவர்ஹவுஸ் 24ஜிபி வரையிலான LPDDR5X ரேம் மற்றும் 1டிபி UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் "மெமரி ஜீன் ரீகாம்பினேஷன் 3.0" மற்றும் பிரத்யேக ஸ்டோரேஜ் தொழில்நுட்பத்தின் காரணமாக பல வருட பயன்பாட்டிற்குப் பிறகும் கூட இது சீரான செயல்பாட்டை வழங்குமென்று ஒன்பிளஸ் கோருகிறது. இதுதவிர்த்து, மனித உடலால் ஏற்படும் சிக்னல் தடையை சமாளிக்கும் புதுமையான டூயல் கோல்டன் கேமிங் ஆண்டெனாவால் இது நிலையான கேமிங் அனுபவத்தையும் உறுதி செய்யும் என்றும் ஒன்பிளஸ் கூறுகிறது.

பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை, இது 100W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 6100mAh க்ளேசியர் பேட்டரியை கொண்டுள்ளது. மிதமான பயன்பாட்டின் கீழ், இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 2 நாட்கள் வரை பேட்டரி லைஃப் நீடிக்கும் என்று அதிகாரப்பூர்வ சோதனைகள் தெரிவிக்கின்றன.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, இதன் 1.5K ஓரியண்டல் ஸ்கிரீன் ஆனது 8T LTPO சர்க்யூட் வடிவமைப்பு மற்றும் அட்வான்ஸ்டு டச் ரெஸ்பான்ஸ்க்கான ரெயின் டச் 2.0 தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஐபி65 தூசி மற்றும் நீர் எதிர்க்கும் திறனையும் கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, இது சக்திவாய்ந்த சோனி ஐஎம்எக்ஸ்890 50மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை கொண்டுள்ளது, இது ஃபைண்ட் சீரிஸின் ஃபிளாக்ஷிப் இமேஜிங் அல்காரிதத்துடன் வருகிறது. கடைசியாக இது டைட்டானியம் மிரர் சில்வர் (Titanium Mirror Silver), க்ரீன் பீல்ட் ப்ளூ (Green Field Blue) மற்றும் சூப்பர்கார் போர்சிலென் கலெக்ஷன் (Supercar Porcelain Collection) என்கிற 3 கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம்: இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.36700 க்கு தொடங்குகிறது. ஹை-எண்ட் அம்சங்களை கொண்ட லிமிடெட் சூப்பர்கார் போர்சிலென் கலெக்டர்ஸ் எடிஷன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.52,700 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன்களின் சீன விற்பனை ஜூலை 3 முதல் தொடங்குகிறது. ஒன்பிளஸ் பவர் பேங்க் மற்றும் ஏஸ் 3 ப்ரோ ஆகிய இரண்டின் இந்திய மற்றும் உலகளாவிய அறிமுகம் குறித்து எந்த தகவலும் இல்லை.

Best Mobiles in India

English summary
OnePlus 100W Fast Charging 12000 mAh Power Bank Along with Ace 3 Pro Launched in China Price Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X