Home
Gadgets

சவுண்ட் கிழியுது.. 66 மணி நேர பிளேடைம்.. RGB லைட்.. இதைவிட கம்மி விலையில் கிடைக்கவே கிடைக்காது.. என்ன மாடல்?

நம்பர் (numBer) நிறுவனம் அதன் இயர்பட்ஸ் வரிசையை மிக வேகமாக விரிவுபடுத்தி வருவது போல் தெரிகிறது. காரணம், நம்பர் நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில் தான் அதன் புதிய நம்பர் சூப்பர் பட்ஸ் ஜிடி எம்9 கேமிங் இயர்பட்ஸ் (numBer Super Buds GT M9 RGB Gaming Earbuds) சாதனத்தை அறிமுகம் செய்தது. இப்போது, அதே வேகத்தில், நம்பர் சூப்பர் பட்ஸ் 555 (numBer Super Buds 555) என்ற இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

இது மிகவும் மலிவு விலையில் 66 மணிநேர பிளேடைம் நேரத்தை வழங்குவதோடு, இன்னும் பல நம்ப முடியாத அட்டகாச அம்சங்களை வழங்குகிறது. இந்த புதிய நம்பர் சூப்பர் பட்ஸ் 555 (numBer Super Buds 555) இயர்பட்ஸ் பற்றிய முழு விபரங்கள் இதோ. முதலில் நம்பர் நிறுவனம் இந்த இயர்பட்ஸ் சாதனத்தை வெயிட்லெஸ் எடையில், காதுகளில் கட்சிதமாக பொருந்தும் வடிவமைப்பை கொண்டுள்ளது.

சவுண்ட் கிழியுது.. 66 மணி நேர பிளேடைம்.. RGB லைட்.. கம்மி விலை..

நம்பர் சூப்பர் பட்ஸ் 555 (numBer Super Buds 555):

இந்த புதிய நம்பர் சூப்பர் பட்ஸ் 555 (numBer Super Buds 555) இயர்பட்ஸ் சாதனம் அதன் கேஸ் இல் ஸ்மைலிங் வடிவ RGB லைட்டிங் (Smiling RGB LED in Case) ஆதரவையும் கொண்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்த இயர்பட்ஸ் சாதனம் 13.4mm பெரிலியம் டிரைவர்களை (13.4mm Beryllium drivers) கொண்டுள்ளது.

இது ஹைஃபை டிஜிட்டல் சிக்னல் பிராசஸிங் (HiFi Digital Signal Processing - DSP) அம்சத்தை கொண்டுள்ளது. இதில் ப்ளூடூத் v5.4 (Bluetooth v5.4), பாஸ் பூஸ்டட் (Bass Boosted), SBC மற்றும் AAC codec சப்போர்ட் போன்ற ஆதரவுகளை கொண்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் சாதனம் 32dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷசன் (Active Noise Cancellation - ANC) அம்சத்தை வழங்குகிறது.

மிகவும் துல்லியமான ஆடியோ அனுபவத்தை வழங்க இதில், Environmental Noise Cancellation - ENC அம்சம் கூட இருக்கிறது. கேமர்களை குஷி அடைய செய்யும் வகையில் இதில் 35ms அல்ட்ரா-லோ லேடன்சி (35ms ultra-low latency) ஆதரவை கொண்ட ரோக் கேமிங் மோட் (Rogue Gaming Mode) இருக்கிறது. இது டூயல் டிவைஸ் பேரிங் ஆதரவை வழங்குகிறது.

சவுண்ட் கிழியுது.. 66 மணிநேர மொத்த பிளேடைம்:

இன்ஸ்டன்ட் பேரிங் ( instant pairing) மற்றும் டச் கண்ட்ரோல் (touch controls) போன்ற சூப்பர் அம்சங்களை இந்த நம்பர் சூப்பர் பட்ஸ் 555 (numBer Super Buds 555) ஆதரிக்கிறது. முன்பே சொன்னது போல, இந்த இயர்பட்ஸ் சாதனம் 66 மணிநேர மொத்த பிளேடைம் (66 hours of total playback) நேரத்தை வழங்குகிறது. இதில் சூப்பர் குயிக் சார்ஜிங் அம்சமும் (SuperQuick Type-C charging) இருக்கிறதென்பது கவனிக்கத்தக்கது.

தனால், இதை 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 180 நிமிட பிளே டைம் கிடைக்குமென்று நிறுவனம் உறுதியளித்துள்ளது. நம்பர் சூப்பர் பட்ஸ் 555 (numBer Super Buds 555) சாதனம் சிரி (Siri) மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ஸ் (Google Voice Assistant) மற்றும் IPX5 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் ஆதரவுடன் வருகிறது.

நம்பர் சூப்பர் பட்ஸ் 555 விலை (numBer Super Buds 555 Price):

இதன் விலை பற்றி பேசுகையில், இந்த புதிய numBer Super Buds 555 இயர்பட்ஸ் சாதனம் ரூ. 1,499 என்ற விலையுடன் பிளாக் டியூன் (Black Dune), ப்ளூ லாவா (Blue Lava), மற்றும் க்ரேய் ஃபாரஸ்ட் (Grey Forest) ஆகிய நிறங்களில் வாங்க கிடைக்கிறது. இது தற்போது பிளிப்கார்ட் (Flipkart) வழியாக பிரத்தியேகமாக விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
numBer Super Buds 555 Earbuds With 66 Hours Playback Time Launched Under Rs 1499 In India Now On Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X