Home
Gadgets

ஆல்ஃபா ஸ்மார்ட்வாட்ச் போனை அறிமுகம் செய்த நுபியா.!

சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் இந்த சாதனத்தை காட்சப்படுத்தியது நுபியா நிறுவனம்.

நுபியா நிறுவனம் உலகின் முதல் அணியக்கூடிய ஸ்மார்ட்போனினை தற்சமயம் அறிமுகம் செய்துள்ளது, ஏற்கனவே சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் இந்த சாதனத்தை காட்சப்படுத்தியது நுபியா நிறுவனம்.

ஆல்ஃபா ஸ்மார்ட்வாட்ச் போனை அறிமுகம் செய்த நுபியா.!

இந்த புதிய ஆல்ஃபா ஸ்மார்ட்வாட்ச் போன் சாதனத்தில் ஒஎல்இடி டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது, பின்பு விரைவில் 5ஜி வெர்ஷனை அறிமுகம் செய்யும்பணிகளில் ஈடுபட்டுள்ளதாக நுபியா நிறுவனம் அறிவித்துள்ளது.

அணியக்கூடிய ஸ்மார்ட்போன் உடன் நுபியா பிராண்டு வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனத்தையும் நுபியா ஏற்கனவே சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்திருந்தது. மேலும் புதிய ஆல்ஃபா ஸ்மார்ட்வாட்ச் போன் சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

நுபியா ஆல்ஃபா சாதனம்

நுபியா ஆல்ஃபா சாதனம்

நுபியா ஆல்ஃபா சாதனம் பொதுவாக 4.01-இன்ச் மடிக்கக்கூடிய ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்புகுவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 2100 பிராசஸர் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

8ஜிபி உள்ளடக்க மெமரி

8ஜிபி உள்ளடக்க மெமரி

இக்கருவி 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு 5எம்பி பிரைமரி கேமரா, பில்ட்-இன் ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

மியூசிக் பிளேபேக்

மியூசிக் பிளேபேக்

குறிப்பாக உடற்பயிற்சி, ஆரோக்கியத்தை காக்கும் அசிஸ்டண்ட் வசதி, ஓட்ட பயிற்சிகளை டிராக் செய்யும் திறன் மியூசிக் பிளேபேக், இதய துடிப்பு சென்சார் போன் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது நுபியா ஆல்ஃபா சாதனம்.

ரூ.36,225-

ரூ.36,225-

மேலும் 4ஜி மற்றும் இசிம் ஆதரவு,வைஃபை, ப்ளூடூத், 500 எம்ஏஎச் பேட்டரி போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக ரூ.36,225-விலையில் நுபியா ஆல்ஃபா சாதனம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல் நுபியா பிராண்டு வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனம் எல்இடி லேசர் ஆண்டெனா, 45-டிகிரி எர்கோனோமிக்
வடிவமைப்பு, 6.2 கிராம் எடை, ப்ளூடூத் 5 மற்றும் குவால்காம் ஆப்ட் எக்ஸ் அம்சம்,55எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனம் ரூ.8,280-விலையில் விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
nubia Alpha bendable smartphone wristband launching this week: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X