சும்மா சுத்தி-சுத்தி சார்ஜ் ஏற்றலாம்.. ஃபிட்ஜெட் ஸ்பின்னர் உடன் Power Bank.. விலை அள்ளுது.. ஆளுக்கு 1 ஆர்டர்..
என்யூ ரிபப்ளிக் (Nu Republic) பிராண்டு இந்தியாவில் மிகவும் சுவாரசியமான கேட்ஜெட்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், Nu Republic நிறுவனம் என்யூ ரிபப்ளிக் சைபோட்ரான் ஸ்பின் பவர்பேங்க் (Nu Republic Cybotron SPIN Power bank) என்ற புதிய வயர்லெஸ் சார்ஜிங் பவர் பேங்க் (Wireless charging power bank) சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது பவர் பேங்க் உடன் ஃபிட்ஜெட் ஸ்பின்னர் (Fidget Spinner) கொண்ட பவர் பேங்க் சாதனமாக இது வெளிவந்துள்ளது. இதன் விலை என்ன? இதன் சிறப்பம்சம் பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம்.
ஃபிட்ஜெட் ஸ்பின்னர் உடன் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் வயர்லெஸ் பவர்பேங்க் சாதனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு நிறுவனம், என்யு ரிபப்ளிக் சைபர்ஸ்டட் ஸ்பின் பிட்ஜெட் ஸ்பின்னர் இயர்பட்ஸ் (Nu Republic Cyberstud SPIN fidget spinner earbuds) என்ற சாதனத்தை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக பிட்ஜெட் ஸ்பின்னர் உடன் வெளிவரும் சாதனம் தான் Nu Republic Cybotron SPIN Power bank.

என்யூ ரிபப்ளிக் சைபோட்ரான் ஸ்பின் பவர்பேங்க் (Nu Republic Cybotron SPIN Power bank):
இந்த புதிய என்யூ ரிபப்ளிக் சைபோட்ரான் ஸ்பின் பவர்பேங்க் சாதனம் ஸ்லீப் ஆன மெட்டாலிக் டிஸைனுடன் வருகிறது. இந்த பிட்ஜெட் ஸ்பின்னர் பவர் பேங்க் 10,000mAh கெபாசிட்டியை கொண்டுள்ளது. இது 22W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது. இது 60 நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் செய்யும் வேகத்தை கொண்டுள்ளது. இதன் வடிவமைப்பு தான் இந்த பவர் பேங்க் சிறப்பாக அமைந்துள்ளது.
இந்த என்யூ ரிபப்ளிக் சைபோட்ரான் ஸ்பின் பவர்பேங்க் (Nu Republic Cybotron SPIN Power bank) சாதனம் 65W பாஸ்ட் சார்ஜிங் திறனுடன் வருகிறது. இதில் பேட்டரி இண்டிகேட்டர் லெவல் அம்சமும் உள்ளது. இதன் மூலம் பவர் பேங்க் சாதனத்தில் எவ்வளவு சார்ஜ் உள்ளது என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியும். இந்த பவர் பேங்க் சாதனம் ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களை சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது.
என்யூ ரிபப்ளிக் சைபோட்ரான் ஸ்பின் பவர்பேங்க் விலை (Nu Republic Cybotron SPIN Power bank Price):
ஆம், இதில் டூயல் சார்ஜிங் அம்சம் இருக்கிறது. இது மிகவும் ஸ்லிம்மாக இருப்பதினால், இதை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம், இது உங்கள் பை மற்றும் பாக்கெட்டில் கட்சிதமாக பொருந்தும் வகையில் சிறியதாக வெறும் 185 கிராம் எடையுடன், கைக்கு அடக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது Type-C (input/output), Type L (input), மற்றும் USB-A (output) போன்ற ஆதரவுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய என்யூ ரிபப்ளிக் சைபோட்ரான் ஸ்பின் பவர்பேங்க் (Nu Republic Cybotron SPIN Power bank) க்ரேய் நிறத்தில் 6 மாத வாரன்டி உடன் இந்தியாவில் வெறும் ரூ. 2499 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதை நீங்கள் Nu Republic அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் மற்றும் Blinkit வழியாக வாங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. பிட்ஜெட் ஸ்பின்னர் உடன் பவர் பேங்க் வாங்க ஆசை என்றால், இதே உடனே வாங்குங்கள்.


Click it and Unblock the Notifications








