புதுசா இருக்கு.. நல்லா இருக்கு.. ரூ.899 போதும்.. LED சார்ஜிங் கேஸ்.. QUAD மைக்.. ENC டெக்னாலஜி.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டின் இயர்பட்ஸ் பிரியர்களை கண்ணை மூடிக்கொண்டு ஆர்டர் போட வைக்கும்படியான அடிமட்ட பட்ஜெட்டில் எல்இடி சார்ஜிங் கேஸ் மட்டுமமல்லாமல், கேமிங் பிரியர்களுக்கான டைனாமிக் டிரைவர்கள், டச் கன்ட்ரோல், 56 மணி நேரங்களுக்கு பேக்கப், டூயல் கனெக்டிவிட்டி மோட், கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட், குவாட் மைக்குகள், டச் கன்ட்ரோல் போன்ற ஒட்டுமொத்த பிரீமியம் பீச்சர்களுடன் நு ரீபப்ளிக் சைபர்சவுண்ட் எக்ஸ்8 (Nu Republic Cyberstud X8) இயர்பட்ஸ் களமிறங்கி இருக்கிறது. இந்த புது மாடலின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ரூ.1000 பட்ஜெட்டில் கூட இந்த பீச்சர்கள் கிடைக்காது என்று அடித்து சொல்லலாம். அப்படியான பீச்சர்களை வெறும் ரூ.899 விலையில் இந்த நு ரீபப்ளிக் சைபர்சவுண்ட் எக்ஸ்8 இயர்பட்ஸ் கொடுக்கிறது. கேமிங் பிரியர்களுக்காக வெளியாகி இருப்பதால், டிசைனிலும் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. மெட்டாலிக் பினிஷிங்கில் எல்இடி சார்ஜிங் கேஸ் மற்றும் பட்கள் கிடைக்கின்றன.

நு ரீபப்ளிக் சைபர்சவுண்ட் எக்ஸ்8 அம்சங்கள் (Nu Republic Cyberstud X8 Specifications): இந்த சைபர்சவுண்ட் மாடலில் 13 மிமீ நியோடைமியம் (Neodymium) டிரைவர்கள் கிடைக்கின்றன. இந்த டிரைவர்களில் பேஸ் எபெக்ட் ஆடியோ பிரியர்களுக்கு பக்கா அவுட்புட் கொடுக்கும்படி எக்ஸ்-பேஸ் டெக்னாலஜி கிடைக்கிறது. இந்த பட்களில் எல்இடி-லிட் டிசைனை பார்க்க முடிகிறது.
அதேபோல சார்ஜிங் கேஸில் எல்இடி லைட்டினிங் கிடைக்கிறது. கேமிங் மாடலாக இருப்பதால், மியூசிக் மற்றும் கேமிங் என்று இரண்டு மோட்களில் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த நு ரீபப்ளிக் சைபர்சவுண்ட் எக்ஸ்8 மாடலில் டச் கன்ட்ரோல்கள் (Touch Controls) கிடைக்கின்றன. குவாட் மைக்குகள் (Quad Mics) வருகின்றன. ஈஎன்சி (ENC) சப்போர்ட் கொண்டிருக்கிறது.
ரியல்-டைம் ஆடியோ வீடியோ சிங்க் கொடுக்க 40ms லோவ் லேட்டன்சி மோட் (Low Latency Mode) வருகிறது. ஆகவே, கேமிங் பிரியர்கள் லாக்-ப்ரீ ஆடியோ அவுட்புட் எதிர்பார்க்கலாம். என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் மட்டுமல்லாமல், ஆன்டி எக்கோ இன்டர்பிரன்ஸ் (Anti Echo Interference) மற்றும் என்ஹான்ஸ் வாய்ஸ் (Enhance Voice) சப்போர்ட் கிடைக்கிறது.
இந்த நு ரீபப்ளிக் சைபர்சவுண்ட் எக்ஸ்8 மாடலில் 56 மணி நேரங்களுக்கு பிளேடைம் கிடைக்கும். இது சார்ஜிங் கேஸ் பேக்கப்பில் வருகிறது. அதுவே இயர்பட்களில் 7 மணி நேரங்களுக்கு பிளேடைம் பெற்று கொள்ளலாம். இந்த பேட்டரிக்கு டைப்-சி (Type-C) சார்ஜிங் போர்ட் உள்ளது. டூயல் வாய்ஸ் அசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஆகவே, கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) உள்ளது.
அதேபோல சிரி அசிஸ்டன்ட் (Siri Assistant) சப்போர்ட் வருகிறது. டச் கன்ட்ரோல் மட்டுமல்லாமல், டச்-லெஸ் கன்ட்ரோலும் செய்து கொள்ள முடியும். ஸ்மார்ட்போன்களில் கிடைப்பதை போலவே ஹால் சென்சார் (Hall Sensor) கொடுக்கிறது. ஒருமுறை பேர் செய்துவிட்ட டிவைஸ்களுக்கு ஆட்டோ-பேர் டெக்னாலஜி (Auto-pair Technology) சப்போர்ட் கிடைக்கிறது.
இந்த நு ரீபப்ளிக் சைபர்சவுண்ட் எக்ஸ்8 மாடலில் ஸ்பிளாஷ் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் இருக்கிறது. ஆனால், ரேட்டிங் குறிப்பிடப்படவில்லை. சிங்கிள் டேப் வால்யூம் கன்ட்ரோல், டபுள் டேப் பிளே/பாஸ், டிரிபிள் டேப் டிராக் சேஞ்ச், 4 டேப் கேம்/மியூசிக் மோட், 5 டேப் வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் லாங்-பிரஸ் பவர் ஆப் கன்ட்ரோல்கள் கிடைக்கின்றன.
இவ்வளவு பீச்சர்களை கொண்டிருந்தும், இந்த இந்த நு ரீபப்ளிக் சைபர்சவுண்ட் எக்ஸ்8 மாடலின் விலை வெறும் ரூ.899ஆக மட்டுமே இருக்கிறது. இந்த விலையிலேயே அமேசான் (Amazon) மற்றும் நு ரீபப்ளிக் ஆகிய தளங்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இப்போது, நு ரீபப்ளிக் தளத்தில் மட்டும் ஆர்டர் செய்யலாம். அமேசானில் விரைவில் ஆர்டர் செய்ய கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








