Home
Gadgets

ஒரே கல்லுல 2 மாங்கா.. 70 மணிநேர பிளேடைம்.. ஃபிட்ஜெட் ஸ்பின்னருடன் Earbuds.. அல்டிமேட் லுக்.. என்ன விலை?

இதுவரை யாரும் பார்த்திடாத வகையில் ஒரு வித்தியாசமான இயர்பட்ஸ் சாதனம் இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கே வித்தியாசமான சைபர்பங்க் தோற்றத்தில் (Cyberpunk Design) காட்சியளிக்கிறது. இந்த சாதனம் ஒரே டிவைஸில் ஃபிட்ஜெட் ஸ்பின்னர் (Fidget Spinner) மற்றும் TWS இயர்பட்ஸ் (TWS Earbuds) சாதனத்தை இணைத்து வழங்குகிறது. இதன் விலை கூட மிகவும் மலிவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்திய கேட்ஜெட் பிரியர்களை (Gadgets Fans) குஷி அடைய செய்துள்ளது. இந்த ஃபிட்ஜெட் ஸ்பின்னர் x இயர்பட்ஸ் சாதனத்தின் முழு விபரத்தை இப்போது பார்க்கலாம்.

உலக சந்தையில் சிறந்து விளங்கும் தலைசிறந்த நிறுவனங்களே இன்று என்யு ரிபப்ளிக் (Nu Republic) என்ற இந்திய நிறுவனத்தை பார்த்து வியந்து நிற்கிறது. இதற்கு, என்யு ரிபப்ளிக் சைபர்ஸ்டட் ஸ்பின் இயர்பட்ஸ் (Nu Republic Cyberstud SPIN Earbuds) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபிட்ஜெட் ஸ்பின்னர் x இயர்பட்ஸ் டிவைஸ் தான் முக்கிய காரணம் மக்களே.

ஒரே கல்லுல 2 மாங்கா.. 70 மணிநேர பிளேடைம்.. அல்டிமேட் லுக்.. என்ன விலை?

என்யு ரிபப்ளிக் சைபர்ஸ்டட் ஸ்பின் இயர்பட்ஸ் (Nu Republic Cyberstud SPIN Earbuds):

இதுவரை எந்தவொரு ஸ்மார்ட் கேட்ஜெட் நிறுவனமும் உருவாக்காத ஒரு புதிய வகை சாதனத்தை என்யு ரிபப்ளிக் (Nu Republic) நிறுவனம் உருவாக்கியுள்ளது. கேட்ஜெட் (Gadget) மற்றும் டெக்னாலஜி துறை வரலாற்றிலேயே (Technology History) முதல் முறையாக ஃபிட்ஜெட் ஸ்பின்னர் (Fidget spinner) உடன் வயர்லெஸ் ப்ளூடூத் இயர்பட்ஸ் (Wireless Bluetooth Earbuds) சாதனத்தை இணைத்து ஒரு வித்தியாசமான 2 இன் 1 சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய என்யு ரிபப்ளிக் சைபர்ஸ்டட் ஸ்பின் இயர்பட்ஸ் (Nu Republic Cyberstud SPIN Earbuds) சாதனத்தின் வித்தியசமான வடிவமைப்பு நம்மை ஈர்க்கிறது. அதை விட இதன் விலை கூட மக்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த என்யு ரிபப்ளிக் சைபர்ஸ்டட் ஸ்பின் இயர்பட்ஸ் விலை (Nu Republic Cyberstud SPIN Earbuds Price) பற்றி பேசுகையில், இது இந்தியாவில் ரூ. 2499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வித்தியசமான சைபர்ஸ்டட் ஸ்பின் (Cyberstud SPIN) இயர்பட்ஸ் சாதனம் 13mm டைனமிக் டிரைவர்களுடன் (13mm dynamic drivers) வருகிறது. யாரும் எதிர்பார்த்திடாத வகையில் 70 மணி நேர பிளேபேக் நேரத்தை (70 Hours Playback Time) இதன் இயர்பட்ஸ் சாதனம் வழங்குகிறது. அதேபோல், இது 310 மணி நேர ஸ்டாண்ட்பை நேரத்தையும் (Standby Time) வழங்குகிறது.

70 மணி நேர பிளேபேக் நேரம்.. அல்டிமேட் லுக்கில் ஃபிட்ஜெட் ஸ்பின்னர் x இயர்பட்ஸ் (70 Hours Playback Time With Ultimate Look Fidget Spinner x Earbuds):

இது கேமர்களை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது, இதில் உள்ள 40ms லோ-லேடன்சி (low-latency) ஆதரவு மூலம் தெளிவாகிறது. இந்த புதிய என்யு ரிபப்ளிக் சைபர்ஸ்டட் ஸ்பின் இயர்பட்ஸ் சாதனம் போல்ட்டிங் (folding) செய்யக்கூடிய பிட்ஜெட் ஸ்பின்னர் மெட்டல் கிளைடர் ரெக்கைகளுடன் (Fidget Spinner Metal Glider Wings) வருகிறது. இதில் உள்ள பிட்ஜெட் ஸ்பின்னர் சாதனம் 360 டிகிரி கோணத்தில் எல்லா பக்கமும் சுழலும் படி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பிட்ஜெட் ஸ்பின்னர் சுழலும் பொழுது ஸ்வூஷ் சவுண்டை (swoosh sound) உருவாக்குகிறது. இதில் எக்ஸ் பாஸ் டெக்னாலஜி (X Bass Technology), டூயல் மோட் கனெக்டிவிட்டி, இஎன்சி (ENC) போன்ற பல அம்சங்கள் இதில் பேக் செய்யப்பட்டுள்ளது. இது டச் கண்ட்ரோல் (Touch Control) உடன் USB Type-C ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast charging) ஆதரவை பெற்றுள்ளது.

இது இந்தியா மட்டுமின்றி, நேபால், ஸ்ரீலங்கா மற்றும் அரபிக் நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த என்யு ரிபப்ளிக் சைபர்ஸ்டட் ஸ்பின் இயர்பட்ஸ் (Nu Republic Cyberstud SPIN Earbuds) சாதனத்தை நீங்கள் இப்போது நிறுவனத்தின் www.nurepublic.co என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக வாங்கலாம். இதன் அசல் விலை ரூ. 5499 ஆகும். இப்போது சலுகையுடன் ரூ. 2499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nu Republic Cyberstud Spin Fidget Spinner and TWS Earbuds Launched India at a Offer Price as Rs 2499 Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X