பக்கா மாஸ்.. இது Earbuds + பிட்ஜெட் ஸ்பின்னர் டோய்.. வேற லெவல்ல Nu Republic டிவைஸ்.. என்ன விலை? எப்போது ரிலீஸ்
உலகை திரும்பி பார்க்க வைத்த இந்திய நிறுவனம், முதல் முறையாக பிட்ஜெட் ஸ்பின்னர் (Fidget spinner) உடன் இயர்பட்ஸ் (Earbuds) சாதனத்தை இணைத்து அறிமுகம் செய்து சாதனை. இதன் விலை என்ன? இது எப்போது விற்பனைக்கு வரும்? முழு விபரம் இதோ.
என்யு ரிபப்ளிக் (Nu Republic) என்ற இந்திய நிறுவனம் இதுவரை எந்தவொரு ஸ்மார்ட் கேட்ஜெட் தயாரிப்பு நிறுவனமும் செய்யாத ஒரு புதிய கருவியை உருவாக்கியுள்ளது. முதல் முறையாக பிட்ஜெட் ஸ்பின்னர் (Fidget spinner) உடன் வயர்லெஸ் ப்ளூடூத் இயர்பட்ஸ் (Wireless Bluetooth Earbuds) சாதனத்தை இணைத்து ஒரு வித்தியாசமான 2 இன் 1 சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

என்யு ரிபப்ளிக் சைபர்ஸ்டட் ஸ்பின் இயர்பட்ஸ் (Nu Republic Cyberstud SPIN Earbuds):
என்யு ரிபப்ளிக் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள இந்த புது சாதனத்தை நிறுவனம் சைபர்ஸ்டட் ஸ்பின் (Cyberstud SPIN) என்ற பெயருடன் குறிப்பிட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இதை நாம் என்யு ரிபப்ளிக் சைபர்ஸ்டட் ஸ்பின் இயர்பட்ஸ் (Nu Republic Cyberstud SPIN Earbuds) என்ற பெயருடன் விற்பனைக்கு விரைவில் எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது பிட்ஜெட் ஸ்பின்னர் உடன் இயர்பட்ஸ் சாதனத்தை இணைந்து வழங்கும் பியூச்சர்ஸ்டிக் வடிவமைப்பை கொண்டுள்ளது.
இந்த புதிய சாதனத்தின் விதியசமான அமைப்பு உண்மையில் நம்மை ஈர்க்கிறது. அதை விட இதன் விலை கூட மக்களை ஈர்க்கும் வகையில் மிகவும் குறைவானதாகவே இருக்குமென்று லீக் (leak) தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விலை பற்றிய விபரங்களை பதிவின் இறுதியில் குறிப்பிட்டுள்ளோம். இந்த புதிய என்யு ரிபப்ளிக் சைபர்ஸ்டட் ஸ்பின் இயர்பட்ஸ் சாதனம் போல்ட்டிங் (folding) செய்யக்கூடிய பிட்ஜெட் ஸ்பின்னர் ரெக்கைகளுடன் வருகிறது.
இதன் இயர்பட்ஸ் சாதனங்கள் எப்படி இருக்குமென்பது பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த என்யு ரிபப்ளிக் சைபர்ஸ்டட் ஸ்பின் இயர்பட்ஸ் இயர்பட்ஸ் சாதனம் TWS ஆதரவை ஆதரிக்கும் என்றும் இதன் கேஸ் டிரான்ஸ்பார்ம் எக்ஸ் (Transform X) போல இருக்குமென்றும் கூறப்பட்டுள்ளது. இதன் சார்ஜிங் கேஸ் (charging case) எப்படி இருக்குமென்பது இன்னும் தெளிவாகவில்லை.

என்யு ரிபப்ளிக் சைபர்ஸ்டட் ஸ்பின் இயர்பட்ஸ் விலை (Nu Republic Cyberstud SPIN Earbuds Price):
ஆனால், அதுவும் ஒருவகையான வித்தியாசமான தோற்றத்தை பெரும் என்று லீக் தகவல்கள் குறிப்பிட்டுள்ளது. இதன் கேஸ் மெட்டாலிக் வடிவமைப்புடன் பிரைட் நிறங்களை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது முற்றிலும் சைபர்பங்க் (Cyberpunk) தோற்றத்தில் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மாடல் பெயர் சைபர்ஸ்டட் ஸ்பின் (Cyberstud SPIN) கூட இதை தான் குறிப்பிடுவது போல தெரிகிறது.
இந்த சாதனம் கேமர்களை குறிவைத்து அறிமுகம் செய்யப்படுவது போல தெரிகிறது. காரணம் இதில் 40ms லோ-லேடன்சி (low-latency) ஆதரவை ஆதரிக்கும் அம்சம் உள்ளது. இதில் உள்ள பிட்ஜெட் ஸ்பின்னர் சாதனம் 360 டிகிரி கோணத்தில் எல்லா பக்கமும் சுழலும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இயர்பட்ஸ் சாதனத்தை ஒரு விளையாட்டு பொருள் உடன் இணைத்து கேமர்களை (gamers) கவரும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிட்ஜெட் ஸ்பின்னர் சுழலும் பொழுது ஸ்வூஷ் சவுண்டை (swoosh sound) உருவாக்குகிறது.
இதன் விலை மற்றும் சிறப்பம்ச தகவலை பற்றி இப்போது பார்க்கலாம். என்யு ரிபப்ளிக் சைபர்ஸ்டட் ஸ்பின் இயர்பட்ஸ் சாதனம் இந்தியாவில் ரூ. 3000 விலைக்கும் குறைவான விலையில் (price) வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியா மட்டுமின்றி, நேபால், ஸ்ரீலங்கா மற்றும் அரபிக் நாடுகளிலும் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது


Click it and Unblock the Notifications