Home
Gadgets

அண்ணன் வரார் வழி விடு.. செப்.24-ல் Nothing நிறுவனம் அறிமுகம் செய்யப்போகும் புதிய தயாரிப்பு.. என்னது?

Nothing September 24 Launch: நத்திங் நிறுவனம், இந்த மாத இறுதியில் ஒரு புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்த போவதாக அறிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே, எந்த வகையான டிவைஸ் அறிமுகமாகும் அல்லது அதன் அம்சங்கள் உள்ளிட்ட எந்தவொரு பொருத்தமான தகவலையும் வெளியிடாமல், ஒரு புதிய தயாரிப்பின் வருகையை மட்டுமே, நத்திங் நிறுவனம் டீஸ் செய்து வருகிறது. இந்நிலைப்பாட்டில், நத்திங் நிறுவனத்தின் சமீபத்திய டீசர் ஆனது, ஓப்பன் இயர் வடிவமைப்புடன் (open ear design) கூடிய புதிய வயர்லெஸ் ஆடியோ ஹெட்செட்டை விரைவில் அறிமுகமாகும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

நத்திங் நிறுவனம் அதன் எக்ஸ் தளம் (Nothing's X Account) வழியாக வெளியிட்டுள்ள டீசரில், இரண்டு வட்டமான கேபிள்கள் ஒன்றோடொன்று மோதிகொள்வதை காண முடிகிறது. அந்த டீசரில், "வெளியே திறந்திருக்கும்" எனகிற வாசகத்தோடு.. செப்டம்பர் 24 அன்று நத்திங் நிறுவனம் ஒரு புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

செப்.24-ல் Nothing நிறுவனம் அறிமுகம் செய்யப்போகும் புதிய தயாரிப்பு!

இந்த புதிய தயாரிப்பு குறித்து நத்திங் நிறுவனத்தின் இணையதளத்திலும் கூட எந்த விதமான கூடுதல் தகவல்களும் இல்லை. இருப்பினும் முன்னதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இது நத்திங் இயர் ஓப்பன் (Nothing Ear Open) என்று அழைக்கப்படலாம். சுவாரசியமாக இது பல்வேறு உலகளாவிய சந்தைகளுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இது இந்தியா மற்றும் இங்கிலாந்தில் மட்டும் அறிமுகம் செய்யப்படாமல் மற்ற நாடுகளுக்கும் செல்லலாம்.

நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) ஸ்மார்ட்போனிற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இந்நிறுவனம் அதன் புதிய இயர்பட்ஸ்களாக நத்திங் இயர் (Nothing Ear) மற்றும் நத்திங் இயர் ஏ (Nothing Ear a) மாடல்களை கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்திருந்தது. அதன் பிறகு.. நீண்ட இடைவேளிக்கு பின்னர் நத்திங் நிறுவனம் அதன் அடுத்த ஆடியோ தயாரிப்பை அறிமுகம் செய்ய உள்ளது.

நத்திங் இயர் மற்றும் நத்திங் இயர் ஏ இயர்பட்ஸ்களின் முக்கிய அம்சங்கள்: இந்த 2 மாடல்களுக்கும்சில பொதுவான அம்சங்கள் உள்ளன. இரண்டுமே 45dB வரையிலான ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷன் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டியை ஆதரிக்கின்றன. மேலும் சார்ஜிங் கேஸ்களும் மற்றும் இயர்பட்களும் பிராண்டின் சிக்னேச்சர் டிரான்ஸ்பரென்ட் டிஸைனை பெற்றுள்ளன.

மேலும் இரண்டுமே இன்-இயர் டிடெக்ஷன் அம்சத்துடன் வருகின்றன மற்றும் டூயல் கனெக்டிவிட்டியை ஆதரிக்கின்றன. இரண்டுமே 11மிமீ டைனமிக் டிரைவர்களுடன் வருகின்றன. கூடவே பிஞ்ச் கண்ட்ரோல்களை வழங்குகின்றன. மேலும் இவ்விரு மாடல்களுமே நத்திங் எக்ஸ் ஆப் உடன் இணக்கமாக உள்ளன. இந்த ஆப்பை பயன்படுத்தி இந்த இயர்பட்ஸ்களின் செயல்பாடுகளை கஸ்டமைஸ் செய்யலாம்.

மேலும் இந்த இரண்டு இயர்பட்ஸ் மாடல்களுமே சாட்ஜிபிடி ஒருங்கிணைப்புடன் வருகின்றன. இதை பிஞ்ச்-டு-ஸ்பீக் ஆக்ஷன் மூலம் அணுகலாம். நத்திங் இயர் மற்றும் இயர் ஏ இயர்பட்கள் ஒவ்வொன்றும் 46எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளன, அதே சமயம் சார்ஜிங் கேஸ்களில் 500எம்ஏஎச் பேட்டரிகள் உள்ளன. முக்கிய வேறுபாடுகளை பொறுத்தவரை நத்திங் இயர் மாடலானது 40.5 மணிநேரம் வரை ஒட்டுமொத்த பேட்டரி லைஃப்பை வழங்குகிறது.

மறுகையில் உள்ள நத்திங் இயர் ஏ மாடலானது 42.5 மணிநேரம் வரை ஒட்டுமொத்த பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. விலை விவரங்களை பொறுத்தவரை, இந்திய சந்தையில் நத்திங் இயர் ரூ.11,999 க்கும், நத்திங் இயர் ஏ ரூ.7,999 க்கும் வாங்க கிடைக்கிறது. இவ்விரு மாடல்களை விட நத்திங் இயர் ஓப்பன் மாடலின் விலை நிர்ணயம் நிச்சயம் அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஆனால் எவ்வளவு என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

Best Mobiles in India

English summary
Nothing to launch new audio product with open ear design in India on September 24
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X