தர லோக்கலுக்கு இறங்கி அடிக்க தயார்.. முதல் முறையாக Nothing-கிட்ட இருந்து இப்படி ஒரு தயாரிப்பு வருது.. என்னது?
Nothing Ear Open Earbuds: நத்திங் (Nothing) நிறுவனம் அதன் அடுத்த தயாரிப்பாக - நத்திங் இயர் ஓப்பன் இயர்பட்ஸை கூடிய விரைவில் அறிமுகம் செய்யலாம் என்பது போல் தெரிகிறது. கடந்த சில நாட்களாக லீக்ஸ் தகவல்களில் மட்டுமே சிக்கிவந்த, நத்திங் நிறுவனத்தின் இந்த ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போன்ஸ் ஆனது உடனடி வெளியீட்டை பரிந்துரைக்கும் பல சான்றிதழ் தளங்களில் காணப்பட்டுள்ளது. இதற்கிடையில் நத்திங் நிறுவனமும் ஒரு புதிய தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக டீஸ் செய்துள்ளது, இது நத்திங் இயர் ஓப்பன் ஆக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
நத்திங் இயர் ஓப்பன் இயர்பட்ஸில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்? நத்திங் நிறுவனத்தின் எக்ஸ் பக்கத்தில், "விரைவில் வருகிறது. சாத்தியக்கூறுகளின் புதிய உலகம்" என்கிற தலைப்புடன் ஒரு டீஸர் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இது வரவிருக்கும் ஒரு புதிய தயாரிப்பை பற்றி பரிந்துரைக்கிறது. இது நத்திங் இயர் ஓப்பன் ஆக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

டீஸர் படத்தின் வலது பக்கம் மைக் மற்றும் ஸ்பீக்கர் கட்அவுட்களை காணமுடிகிறது. மீதமுள்ள படம் டிரான்ஸ்பரென்ட் ஸ்டெம்-ஐ காட்சிப்படுத்துகிறது. மேலும் டீஸ் செய்யப்பட்ட படத்தின் மேற்புறத்தில் உள்ள வட்டப் பகுதியானது, நத்திங் இயர் ஓப்பன் பட்ஸின் டச் கண்ட்ரோல் பகுதியாக இருக்கலாம், இது பயனர்கள் மியூசிக்கை இயக்க / இடைநிறுத்தவும், அடுத்த டிராக்கிற்குச் செல்லவும் மற்றும் பிற செயல்களை செய்ய அனுமதிக்கலாம்.
சுவாரஸ்யமாக நத்திங் இயர் ஓப்பன் இயர்பட்ஸ் மாடலானது ஓப்பன் இயர் வடிவமைப்புடன் வரும் TWS இயர்போன்களாக இருக்கும். குறிப்பிடத்தக்க வகையில், இதுவரை நத்திங்கில் இருந்து வெளியான அனைத்து TWS தயாரிப்புகளும் (நத்திங் இயர் மற்றும் நத்திங் இயர் ஏ) இன்-இயர் டிசைன்களுடன் வந்துள்ளன. ஊகங்கள் சரியாக இருந்தால், இது நத்திங்கின் இயர் ஓப்பன் இயர்பட்ஸ் ஆனது பிராண்டின் முதல் ஓப்பன் இயர் டிசைன் ஆக இருக்கும்
இருப்பினும் இது நத்திங் இயர் மற்றும் நத்திங் இயர் ஏ மாடல்களில் உள்ள முக்கிய அம்சங்களை அப்படியே தக்கவைத்து கொள்ளும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. ஏனென்றால் நத்திங் இயர் மற்றும் நத்திங் இயர் ஏ ஆகிய 2 மாடல்களுக்கும் கூட சில பொதுவான அம்சங்கள் உள்ளன. இரண்டுமே 45dB வரையிலான ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷன் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டியை ஆதரிக்கின்றன.
மேலும் 2 மாடல்களின் சார்ஜிங் கேஸ்களும் மற்றும் இயர்பட்களும் பிராண்டின் சிக்னேச்சர் டிரான்ஸ்பரென்ட் டிஸைனை பெற்றுள்ளன. மேலும் இரண்டுமே இன்-இயர் டிடெக்ஷன் அம்சத்துடன் வருகின்றன மற்றும் டூயல் கனெக்டிவிட்டியை ஆதரிக்கின்றன. இரண்டுமே 11மிமீ டைனமிக் டிரைவர்களுடன் வருகின்றன. கூடவே பிஞ்ச் கண்ட்ரோல்களை வழங்குகின்றன.
நத்திங் இயர் மற்றும் இயர் ஏ இயர்பட்கள் ஒவ்வொன்றும் 46எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளன, அதே சமயம் சார்ஜிங் கேஸ்களில் 500எம்ஏஎச் பேட்டரிகள் உள்ளன. முக்கிய வேறுபாடுகளை பொறுத்தவரை.. நத்திங் இயர் மாடலானது 40.5 மணிநேரம் வரை ஒட்டுமொத்த பேட்டரி லைஃப்பை வழங்குகிறது. மறுகையில் உள்ள நத்திங் இயர் ஏ மாடலானது 42.5 மணிநேரம் வரை ஒட்டுமொத்த பிளேபேக் நேரத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் நத்திங் இயர் மாடல் ரூ.11,999 க்கும், நத்திங் இயர் ஏ மாடல் ரூ.7,999 க்கும் வாங்க கிடைக்கிறது. நத்திங் இயர் மற்றும் நத்திங் இயர் ஏ ஆகிய இரண்டு இயர்பட்ஸ்களுமே பிளாக் (Black) மற்றும் ஒயிட் (White) என்கிற "நத்திங் பிராண்டின் வழக்கமான" கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகின்றன ஆனால் நத்திங் இயர் ஏ மாடல் மட்டும் கூடுதலாக மூன்றாவது கலர் ஆப்ஷன் ஆன யெல்லோ (Yellow) கலரில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications