டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
நத்திங் (Nothing) நிறுவனம் இன்று அதன் எக்ஸ் வலைப்பக்கம் வழியாக புதிய டீஸரை வெளியிட்டுள்ளது. ஒரு பெரிய வண்டும், மஞ்சள் நிறத் தவளையையும் நேருக்கு நேர் மோதுவது போன்ற வித்தியாசமான நத்திங் டீஸரை (Teaser) வெளியிட்டு, உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நத்திங் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் ஒரு புதிய டீஸர் வீடியோவை (New Nothing Teaser Video) வெளியிட்டுள்ளது. இது நத்திங் பிராண்டின் இரண்டு புதிய சாதனங்களை குறிப்பதாக லீக் தகவல்கள் குறிப்பிட்டுள்ளது. இந்த இரண்டு புதிய சாதனங்கள் என்னவாக இருக்கும் என்பதை நத்திங் நிறுவனம் இன்னும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றாலும், வெளிவரப்போகும் சாதனம் என்ன என்பதை ரசிகர்கள் இப்போதே யூகித்துவிட்டார்கள்.

மிரளவிட்ட புதிய நத்திங் டீஸர் (Nothing Teaser):
நத்திங் வெளியிட்டுள்ள புதிய டீஸர், நத்திங் பிராண்டின் வழக்கமான வித்தியாசமான தோற்றத்தை வழங்கியுள்ளது. இதில் ஜப்பானிய ரைனோசரஸ் வண்டு (Japanese rhinoceros beetle) என்றழைக்கப்படும் கருப்பு வண்டு காண்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மஞ்சள் நிறத்தில் ஒரு தவளையையும் (Frog) காண்பித்துள்ளது. இந்த இரண்டு உயிரினங்களும் நத்திங்கின் 2 புதிய சாதனங்களை குறிப்பிடுவதாக தெரிகிறது.
தெரியாதவர்களுக்கு, நத்திங் பிராண்ட் அதன் துவக்க நாளில் இருந்து இந்த ஜப்பானிய ரைனோசரஸ் வண்டை அதன் விளம்பரங்களில் காண்பித்து வருகிறது. இது நத்திங் பிராண்டின் இயர்பட்ஸ் ( Nothing Earbuds) சாதனத்தை குறிப்பதாக நம்பப்படுகிறது. இதற்கு முன் நத்திங் போன் 2 (Nothing Phone 2) ஸ்மார்ட்போனின் விளம்பரத்தில் நிறுவனம் ஒரு பெரிய ஆக்டோபஸ்ஸை (Octopus) பயன்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது நிறுவனம் 2 புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய இரண்டு உயிரினங்களுடன் வெளியிட்டுள்ளது. இதில் ஒரு சாதனம் நத்திங் நிறுவனத்தின் சிக்னேச்சர் சாதனமான மற்றும் துவக்க சாதனமான நிறுவனத்தின் டிரான்ஸ்பரென்ட் இயர்பட்ஸ் சாதனத்தை குறிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. தற்போது வெளியான டீஸர் தகவலை வைத்து பார்க்கையில், வரப்போகும் புதிய சாதனங்களில் ஒன்று நிச்சயமாக இயர் (3) - Nothing Ear (3) இயர்பட்ஸ் சாதனமாக இருக்குமென்று கூறப்பட்டுள்ளது.

நத்திங் இயர் (3) அறிமுகத்திற்கு ரெடியா? (Nothing Ear 3 Ready For Launch):
காரணம், நத்திங் இயர்பட்ஸ் 2 சாதனம் வெளியிடப்பட்ட பொழுது இதே வண்டை வைத்து நிறுவனம் விளம்பரம் செய்திருந்தது என்பது கவனிக்கத்தக்கது. இப்போது இந்த வண்டிற்கு எதிராக நிற்கும் தவளை இயர் (3) சாதனத்தை குறிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கையில், நத்திங் நிறுவனம் அதன் துஆ இயர்பட்ஸ் சாதனத்தை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதென்று கூரப்பப்ட்டுள்ளது.
தெரியாதவர்களுக்கு, கடந்த ஆண்டு இதே நேரத்தில், அதாவது மார்ச் (March) மாதத்தில் தான் நத்திங் நிறுவனம் அதன் இயர் (2) இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்திருந்தது என்பது கவனிக்கத்தக்கது. இப்போது அதே கால நேரத்தில், நத்திங் நிறுவனம் அதன் புதிய இயர் (3) சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. வரவிருக்கும் புதிய Ear (3) இயர்பட்ஸ் சாதனம் நிறுவனத்தின் சிக்னேச்சர் டிரான்ஸ்பரென்ட் தோற்றத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், முந்தைய சாதனங்கள் போன்ற ஸ்டிக் வடிவ இயர்பட்ஸ்களை இது கொண்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், எதிர்பார்க்கப்படும் புதிய இயர் (3) இயர்பட்ஸ் சாதனங்களின் ஆடியோ தரம் (Audio quality) பல மடங்கு மேம்படுத்தப்பட்டிருக்கும் என்றும், இதன் பேட்டரி ஆயுள் (Battery life) கூட இயர் (2) சாதனத்தை விட பல மடங்கு மேம்படுத்தப்பட்டு அதிகரிக்கப்பட்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








