அட்ரா சக்கை.. Transparent டிசைனில் புது வயர்லெஸ் ஹெட்போன்ஸ்.. Nothing Head 1 அறிமுகத்திற்கு ரெடியா?
நத்திங் (Nothing) நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகிய அனைவரின் கவனமும் 2025 மார்ச் 4 ஆம் தேதி நடக்கவுள்ள வெளியீட்டு நிகழ்வின் மீது உள்ளது. இந்நிகழ்வில் நத்திங் போன் 3ஏ சீரிஸின் கீழ் நத்திங் போன் 3ஏ மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ என 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் நத்திங் நிறுவனமானது அதன் புதிய ஹியரபிள்ஸில் (Hearables) வேலை செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பிராண்டின் அடுத்த ஆடியோ தயாரிப்பு ஒரு வயர்லெஸ் ஹெட்ஃபோன்ஸ் ஆக இருக்கலாம் என்றும், அது நத்திங் ஹெட் 1 (Nothing Head 1) என்கிற மாடல் பெயரை பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது எஸ்ஜிஎஸ் பிலிம்கோ (SGS Fimko) சான்றிதழில் காணப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போன் ஆன நத்திங் போன் 1 மாடலை அறிமுகம் செய்தபோது, அது நத்திங் ஐயர் 1 மாடலை போலவே தனித்துவமான டிரான்ஸபிரென்ட் டிசைனை பெற்று இருந்தது. இதன்மூலம் நத்திங் நிறுவனத்தின் சிக்னேச்சர் ஆனது டிரான்ஸபிரென்ட் டிசைன் தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டது
ஆகையால் நத்திங் ஹெட் 1 ஹெட்போன்ஸ் ஆனது டிரான்ஸபிரென்ட் டிசைனை பெறும் என்று எதிர்பார்ப்பதில் எந்த தவறும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக, இந்த புதிய நத்திங் ஹெட்போன்ஸ்-ன் அம்சங்கள் குறித்து எந்த விவரங்களும் வெளியாகவில்லை. ஆனால் எஸ்ஜிஎஸ் பிலிம்கோ ஆனது இது 5W சார்ஜிங் சப்போர்ட்-ஐ பெறும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
இவைகள் எல்லாமே வெறும் ஊகங்கள் தான என்பதை நினைவில் கொள்ளவும். நத்திங் நிறுவனம் அதன் புதிய ஹெட்செட் குறித்து எந்தவிதமான தகவலையும் வெளிப்படுத்தவில்லை. ஒருவேளை நத்திங் பிராண்டட் ஹெட்போன்ஸ் உருவாக்கத்தில் இருந்தால், அது மார்ச் 4 ஆம் தெத்து நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட போவதாக இருந்தால், நத்திங் நிறுவனம் இந்நேரத்திற்கு அதை டீஸ் செய்ய தொடங்கி இருக்கும்.
நத்திங் போன் 3ஏ சீரீஸில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? சமீபத்திய டீசர், இதில் ஆப்பிள் ஐபோன்களின் உள்ளதை போன்ற ஆக்ஷன் பட்டன் (Action Button) இடம்பெறும் என்பது உறுதி செய்துள்ளது. எக்ஸ் தளம் வழியாக நத்திங் பகிர்ந்துள்ள டீஸர் படத்தின் படி, நத்திங் போன் 3ஏ சீரீஸில், ஐபோன்களில் உள்ள ஆக்ஷன் பட்டன் போன்ற ஒரு பட்டனை பார்க்க முடிகிறது.
இந்த பட்டனின் பயன்கள் என்ன என்பது பற்றிய எந்த விளக்கமும் இல்லை. இருப்பினும் இது கேமராவை லான்ச் செய்து போட்டோவை கிளிக் செய்ய பயன்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நத்திங் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த டீசரில் "உங்கள் இரண்டாவது மெமரி, ஒரு கிளிக் தொலைவில் உள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், இந்த பட்டன் ஏஐ அசிஸ்டன்ட்-ஐ லான்ச் செய்வதற்காக கூட பயன்படலாம்.
எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளே பேக் செய்யலாம் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் சிப்செட் மூலம் இயக்கப்படலாம். கேமராக்களை பொறுத்தவரை 50எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் உடனான 8எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் இடம்பெறலாம். முன்பக்கத்தில் 32ம்பி செல்பீ கேமரா இருக்கலாம்.
கடைசியாக இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நத்திங் போன் 3ஏ ப்ரோ மாடலை பற்றி அதிகமான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் இவ்விரு மாடல்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்னவென்பதை பார்க்க சுவாரசியமாக இருக்கும். அறிமுகத்திற்கு பின்னர் இவ்விரு மாடல்களுமே பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) வழியாக விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








