மஞ்ச கலரு சிங்குச்சா.. பட்ஜெட் விலையில் புதிய Nothing ஹெட்போன்ஸ்.. எந்த மாடல்? என்ன விலை?
அடுத்த மாத தொடக்கத்தில் இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் நத்திங் போன் 4ஏ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த சீரீஸின் கீழ் நத்திங் போன் 4ஏ மற்றும் நத்திங் போன் 4ஏ ப்ரோ என்கிற 2 மாடல்கள் வெளியாக உள்ளன
இதற்கிடையில் நத்திங்கின் இந்த புதிய ஸ்மார்ட்போன்களுடன் நத்திங் ஹெட்ஃபோன் ஏ (Nothing Headphone a) மாடலும் வெளியிடப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஓவர்-இயர் ஹெட்ஃபோன்ஸ் வடிவமைப்பை வெளிப்படுத்தும் ஒரு போஸ்டரை நத்திங் நிறுவனம் பகிர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட நத்திங் ஹெட்ஃபோன் 1 மடலின் மலிவு விலை வெர்ஷன் ஆக நத்திங் ஹெட்ஃபோன் ஏ வர வாய்ப்புள்ளது. மேலும் இந்த புதிய மாடலில் நத்திங் நிறுவனத்தின் சிக்னேச்சர் டிசைன் ஆன டிரான்ஸபிரென் ட் டிசைனும் இடம்பெறலாம்.
இதுகுறித்த எக்ஸ் (X) தள பதிவில், ஹெட்போன் ஏ மாடல் ஆனது வருகிற மார்ச் 5 ஆம் தேதி அன்று நத்திங் போன் 4ஏ சீரீஸ் ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து அறிமுகப்படுத்தப்படும் என்று நத்திங் அறிவித்தது. இந்த வெளியீட்டு நிகழ்வு குறிப்பிட்ட தேதியில், இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு தொடங்கும்.
மேலும் நத்திங் பிராண்டால் பகிரப்பட்ட முதல் டீஸர் ஆனது வரவிருக்கும் ஹெட்ஃபோன்களை மஞ்சள் நிறத்தில் வெளிப்படுத்துகிறது. ஹெட்போனின் மேலே தயாரிப்பு பெயர் ஆன - நத்திங் ஹெட்ஃபோன் ஏ ஆனது ஒரு டாட்-மேட்ரிக்ஸ் ஃபாண்ட் உடன் பொறிக்கப்பட்டு உள்ளது.
தற்போது வரையிலாக நத்திங் ஹெட்ஃபோன் ஏ மாடலின் முக்கிய அம்சங்கள் மறைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், சமீபத்திய லீக்ஸ் இந்த புதிய ஹெட்ஃபோன்கள் பிளாக், பிங்க், ஒயிட் மற்றும் யெல்லோ கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் என்று கூறுகின்றன.
ஐரோப்பாவில் இதன் விலை EUR 159 (தோராயமாக ரூ.17,300) ஆகவும் மற்றும் இங்கிலாந்தில் GBP 149 (தோராயமாக ரூ.18,700) ஆகவும் நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதாவது, முன்னரே குறிப்பிட்டபடி இது நத்திங் ஹெட்ஃபோன் 1 க்கு மிகவும் மலிவு விலைமாற்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில், இது கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரூ.21,990 க்கு அறிமுகமானது.
நத்திங் ஹெட்போன் 1 முக்கிய அம்சங்கள்:
- ஓவர் தி இயர், ட்ரான்ஸ்பரென்ட் டிசைன்
- நடுவில் சற்று உயர்த்தப்பட்ட ஓவல் மாட்யூல்
- 40 மிமீ டைனமிக் டிரைவர்ஸ்
- 42dB ANC வரையிலான ஆதரவு
- டிரான்ஸ்பரன்சி மோட்
- KEF ஆடியோ பொறியாளர்களால் ட்யூன் செய்யப்பட்டுள்ளது
- 4 மைக்ரோஃபோன் உடனான ENC மோட்
- ப்ளூடூத் 5.3 மற்றும் AAC, SBC மற்றும் LDAC ஆடியோ கோடெக் ஆதரவு
- டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி ஆதரவு
- Android 5.1 மற்றும் iOS 13 அல்லது அதற்கு மேலான ஓஎஸ்-களுடன் இணக்கம்
- டச் கண்ட்ரோல்களுக்கு பதிலாக ஹெட்போன்களில் தொட்டுணரக்கூடிய பட்டன்கள்
- ஒலியளவை சரிசெய்ய, மீடியாவை மாற்ற மற்றும் ANC முறைகளுக்கு இடையில் மாற ரோலர், பேடில் மற்றும் ஒரு பட்டன்
- 1,040mAh பேட்டரி
- USB டைப்-சி போர்ட்
- 120 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும்
- 3.5 மிமீ ஆடியோ ஜாக்
- ANC இல்லாமல் ஐந்து நிமிட பாஸ்ட் சர்ஜிங்கில் 5 மணிநேரம் வரை பிளேபேக்
- ANC இல்லாமல் AAC ஆடியோவை இயக்கும்போது ஒரு முறை சார்ஜ் செய்தால் 80 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்
- ANC இல்லாமல் மற்றும் LDAC ஆடியோவை இயக்கும்போது 54 மணிநேர பேட்டரி லைஃப்
- ANC இயக்கப்பட்டிருந்தால் AAC ஆடியோவை கேட்கும்போது 35 மணிநேர பேட்டரி லைஃப்
- LDAC கோடெக்கை பயன்படுத்தும் போது 30 மணிநேர பேட்டரி லைஃப்
- அளவீட்டில் 1 173.8x78x189.2 மிமீ
- எடையில் 329 கிராம்
- நத்திங் ஹெட்போன் 1 ஆனது ஒரு சாஃப்ட்ஷெல் ஸ்டோரேஜ் கேஸுடன் வருகின்றன.


Click it and Unblock the Notifications