Home
Gadgets

80 மணிநேர பேட்டரி.. Nothing Headphone 1 அறிமுகம்.. ஆபர் விலையில் ஜூலை 15 முதல் விற்பனை!

நத்திங் நிறுவனம் அதன் முதல் ஹெட்போன் ஆன நத்திங் ஹெட்போன் 1 (Nothing Headphone 1) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. "அடேங்கப்பா" என்று வாய்பிளக்க வைக்கும் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனுடன் சேர்த்து வெளியான நத்திங் இயர்போன் 1 விலையும் கூட கொஞ்சம் ஓவர் ஆகத்தான் உள்ளது!

நத்திங் ஹெட்போன் 1 முக்கிய அம்சங்கள்:
- ஓவர் தி இயர், ட்ரான்ஸ்பரென்ட் டிசைன்
- நடுவில் சற்று உயர்த்தப்பட்ட ஓவல் மாட்யூல்
- 40 மிமீ டைனமிக் டிரைவர்ஸ்
- 42dB ANC வரையிலான ஆதரவு
- டிரான்ஸ்பரன்சி மோட்
- KEF ஆடியோ பொறியாளர்களால் ட்யூன் செய்யப்பட்டுள்ளது
- 4 மைக்ரோஃபோன் உடனான ENC மோட்

80 மணிநேர பேட்டரி.. Nothing Headphone 1 அறிமுகம்!

- ப்ளூடூத் 5.3 மற்றும் AAC, SBC மற்றும் LDAC ஆடியோ கோடெக் ஆதரவு
- டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி ஆதரவு
- Android 5.1 மற்றும் iOS 13 அல்லது அதற்கு மேலான ஓஎஸ்-களுடன் இணக்கம்
- டச் கண்ட்ரோல்களுக்கு பதிலாக ஹெட்போன்களில் தொட்டுணரக்கூடிய பட்டன்கள்
- ஒலியளவை சரிசெய்ய, மீடியாவை மாற்ற மற்றும் ANC முறைகளுக்கு இடையில் மாற ரோலர், பேடில் மற்றும் ஒரு பட்டன்

- 1,040mAh பேட்டரி
- - USB டைப்-சி போர்ட்
- 120 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும்
- 3.5 மிமீ ஆடியோ ஜாக்
- ANC இல்லாமல் ஐந்து நிமிட பாஸ்ட் சர்ஜிங்கில் 5 மணிநேரம் வரை பிளேபேக்

- ANC இல்லாமல் AAC ஆடியோவை இயக்கும்போது ஒரு முறை சார்ஜ் செய்தால் 80 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்
- ANC இல்லாமல் மற்றும் LDAC ஆடியோவை இயக்கும்போது 54 மணிநேர பேட்டரி லைஃப்
- ANC இயக்கப்பட்டிருந்தால் AAC ஆடியோவை கேட்கும்போது 35 மணிநேர பேட்டரி லைஃப்
- LDAC கோடெக்கை பயன்படுத்தும் போது 30 மணிநேர பேட்டரி லைஃப்
- அளவீட்டில் 1 173.8x78x189.2 மிமீ
- எடையில் 329 கிராம்
- நத்திங் ஹெட்போன் 1 ஆனது ஒரு சாஃப்ட்ஷெல் ஸ்டோரேஜ் கேஸுடன் வருகின்றன.

இந்தியாவில் நத்திங் ஹெட்போன் 1 விலை, விற்பனை சலுகைகள் மற்றும் விற்பனை தேதி: இந்தியாவில் நத்திங் ஹெட்போன் 1 மாடலின் விலை ரூ.21,990 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வருகிற ஜூலை 15 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட், பிளிப்கார்ட் மினிட்ஸ், விஜய் சேல்ஸ், மின்த்ரா, குரோமா மற்றும் முன்னணி சில்லறை விற்பனை கடைகள் வழியாக வாங்க கிடைக்கும்.

நத்திங் ஹெட்போன் 1 ஆனது நத்திங் நிறுவனத்தின் "ஆஸ்தான" கலர்கள் ஆன பிளாக் மற்றும் ஒயிட் கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக சலுகையை பொறுத்தவரை, ஜூலை 15 ஆம் தேதி நடக்கும் முதல் நாள் விற்பனையின் போது நத்திங் ஹெட்போன் 1 மாடல் ரூ. 19,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நத்திங் ஹெட்போன் 1 உடன் அறிமுகமான நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இதுவும் நத்திங் நிறுவனத்தின் "வழக்கமான" பிளாக் மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என்கிற 2 ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அசல் வியை பொறுத்தவரை, நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கும் மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் பேஸிக் 12ஜிபி ரேம் ஆப்ஷன் ஆனது பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபர் உடன் சேர்துது ரூ.62,999 என்கிற ஆபர் விலையிலும், மறுகையில் உள்ள 16ஜிபி ரேம் ஆப்ஷன் ஆனது பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபர் உடன் சேர்துது ரூ.72,999 என்கிற ஆபர் விலையிலும் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Headphone 1 With 80 Hours Battery Launched in India Price Offer Features Sale From July 15
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X