முதல் அடியே முரட்டு அடியா இருக்கே.. Nothing-ன் முதல் ஹெட்போன் ஆன Headphone 1-ன் விலை லீக்!
நத்திங் (Nothing) நிறுவனத்தின் முதல் ஓவர் இயர் ஹெட்போன் (Over Ear Headphone) ஆக நத்திங் ஹெட்போன் 1 (Nothing Headphone 1) மாடல் ஆனது வருகிற ஜூலை 1 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதே நாளில் தான் நத்திங் போன் 3 (Nothing Phone 3) ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பதும், இந்த ஸ்மார்ட்போன் "கேட்டதும் நெஞ்சை பிடித்துக்கொள்ளும் படியான" விலைக்கு வரவுள்ளதும் கூடுதல் தகவல்!
வெளியீட்டு நாள் மிகவும் நெருக்கமாக இருக்கும் போதிலும் கூட நத்திங் ஹெட்போன் 1 மாடலின் டிசைன், அம்சங்கள் மற்றும் விலை குறித்து நத்திங் நிறுவனம் இன்னும் வாய் திறக்கவில்லை. இதற்கிடையில் நத்திங் ஹெட்போன் 1 மாடலின் விலை நிர்ணயம் மற்றும் கலர் ஆப்ஷன்கள் (Nothing Headphone 1 Price and Colour Options) குறித்த விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.

டிலேப்ஸ் (Dealabs) வழியாக கிடைத்த சமீபத்திய அறிக்கையின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் நத்திங் ஹெட்போன் 1 மாடலின் விலை 299 யூரோவாக இருக்கலாம்; அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.29,700) ஆக இருக்கலாம். இதற்கிடையில் இங்கிலாந்தில் நத்திங் ஹெட்போன் 1 மாடலின் விலை இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.34,700 ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
குறிப்பிட்ட பிராந்தியங்களில் நத்திங் ஹெட்போன் 1 மாடல் ஆனது பிளாக் மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் நத்திங் ஹெட்போன் 1 ஆனது பிளாக் கலர் ஆப்ஷனுடன் சேர்த்து ஒயிட் கலருக்கு பதிலாக க்ரே கலரில் வாங்க கிடைக்கலாம். அமெரிக்காவில் இதன் விலை $309 ஆக, அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.26,700 க்கு அறிமுகம் செய்யப்படலாம்
ஆக எப்படி பார்த்தாலும் நத்திங் ஹெட்போன் 1 மாடலின் இந்திய விலை நிர்ணயம் (Nothing Headphone 1 Price Range in India) ஆனது நிச்சயமாக ரூ.30,000 - ரூ.40,000 பட்ஜெட்டில் தான் இருக்கும் என்பது போல் தெரிகிறது. இதோடு சேர்ந்து அறிமுகம் செய்யப்பட உள்ள நத்திங் போன் 3 மாடலும் கூட அதிக விலைக்கு தான் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முதலில் எதிர்பார்த்தபடி ரூ.1 லட்சத்திற்கு அருகே வர வாய்ப்பில்லை!

ஏனென்றால் எக்ஸ் போஸ்ட் ஒன்றின் வழியாக, நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் ( Qualcomm Snapdragon 8s Gen 4 chipset) கொண்டு இயங்கும் என்பதை நத்திங் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. ஆக நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது முன்னர் கூற்பட்டபடி ரூ.1 லட்சத்திற்கு அருகிலான விலைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் இல்லை.
மாறாக நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது போட்டித்தன்மை உடனான விலை நிர்ணயத்தையே பெறும். அதாவது சுமார் $799 (ரூ.68,000) க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதிலுள்ள சிப்செட்ஹை-எண்ட் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் ஆக இல்லையென்றாலும், நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட்டை விட இது தீவிரமான செயல்திறன் ஆதாயங்களை கொண்டுள்ளது.
நத்திங் நிறுவனத்தின் சிஇஓ-வான கார்ல் பெய் (Nothing CEO Carl Peoi) கருத்துப்படி, நத்திங் போன் 2 உடன் ஒப்பிடும், நத்திங் போன் 3 மாடலில் 36% வேகமான சிபியு செயல்திறன், 88% ஜிபியு அதிகரிப்பு மற்றும் என்பியு செயல்திறனில் 60% முன்னேற்றம் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். இது மென்மையான மற்றும் மிகவும் ரெஸ்பான்சிவ் ஆன அனுபவத்தை உறுதியளிக்கும். Source: Dealabs


Click it and Unblock the Notifications








