Home
Gadgets

Nothing-ன் முதல் Headphone.. 1040mAh பேட்டரி, 80 மணிநேர பிளேபேக், ANC ஆதரவு.. என்ன விலை?

நத்திங் நிறுவனத்தின் முதல் ஓவர்-இயர் ஹெட்ஃபோன்கள் ஆன நத்திங் ஹெட்ஃபோன் 1 (Nothing Headphone 1) ஆனது ஜூலை 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் (Android Headlines) வழியாக நத்திங் ஹெட்ஃபோன்ஸ் 1 பல முக்கிய அம்சங்கள் லீக் ஆகியுள்ளன. கூடவே ஈக்வல் லீக்ஸ் (EQUAL LEAKS) வழியாக நத்திங் ஹெட்ஃபோன்ஸ் 1-ன் டிசைனும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நத்திங் ஹெட்ஃபோன் 1-ன் லீக்டு அம்சங்கள்: லீக் ஆன விவரங்களின்படி, பிஸிக்கல் ஆகா இந்த ஹெட்ஃபோன்கள் ஆனது அளவில் பெரியதாக இருக்கிறது. இந்த ஹெட்செட் 173.85 x 78 x 189.25 மிமீ அளவையும் 329 கிராம் எடையையும் கொண்டுள்ளது. அதே நேரத்தில் வழக்கத்திற்கு மாறாக பெரிய கேரி கேஸ்-ஐயும் (220 x 220 x 52 மிமீ மற்றும் 264 கிராம் எடை) கொண்டுள்ளது.

Nothing Headphone 1.. 1040mAh பேட்டரி, 80 மணிநேர பிளேபேக், ANC ஆதரவு!

சவுண்ட் செட்டப் ஆனது 16-ஓம் இம்பெடென்ஸ் மற்றும் நிக்கல் பூச்சுடன் கூடிய பியு டயாபிராம் கொண்ட 40 மிமீ டைனமிக் டிரைவர்கள் உள்ளன. மேலும் இந்த ஆடியோ டிவைஸ் ஆனது அடாப்டிவ் பாஸ் என்ஹான்ஸ்மென்ட், ஸ்பாட்டியல் ஆடியோ மற்றும் 8-பேண்ட் கஸ்டம் இக்யூ அமைப்புகளையும் கொண்டிருக்கும்.

வயர்லெஸ் ஆடியோவை பொறுத்தவரை, இந்த ஹெட்ஃபோன்கள் AAC, SBC மற்றும் LDAC ஆகியவற்றை ஆதரிக்கின்றன. இது நிலையான மற்றும் உயர்-தெளிவுத்திறன் கொண்ட ஆடியோ கோடெக்குகளை உள்ளடக்கியது. ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷன் (ANC) ஆதரவு 42dB-ஐ வழங்கும் மற்றும் இது 2,000Hz ப்ரெக்வன்சி வரம்பை ஆதரிக்கிறது. இதில் டிரான்ஸ்பரன்சி மோட்-ம் உள்ளது.

இதில் மூன்று வகையான பிஸிக்கல் கண்ட்ரோல்கள் உள்ளன: ரோல் மெக்கானிசம், ஒரு பேடில் மற்றும் ஒரு பட்டன். கனெக்ட்விட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது ப்ளூடூத் 5.3-ஐ வழங்கும். மேலும் இது Android மற்றும் iOS இல் உள்ள நத்திங்கின் எக்ஸ் கம்பானியன் ஆப் உடன் இணக்கமானதாக இருக்கும்.

பேட்டரியை பொறுத்தவரை, நத்திங் ஹெட்ஃபோன் 1 ஆனது 1040mAh பேட்டரியை கொண்டிருக்கும். இது ANC ஆஃப் உடன் 80 மணிநேரம் வரை பிளேபேக்கை வழங்குகிறது (AAC-ஐ பயன்படுத்தி), ANC ஆன் உடன் 35 மணிநேர பேட்டரியை வழங்கும். LDAC ஆனது மேற்கண்ட நேரங்களை முறையே 54 மற்றும் 30 மணிநேரமாக குறைக்கிறது.

வெறும் 5 நிமிட சார்ஜ் 5 மணிநேரம் வரை பிளேபேக்கை (ANC ஆஃப்) அல்லது 2.4 மணிநேரம் (ANC ஆன்) வழங்கும். இதோடு கூகுள் ஃபாஸ்ட் பேர், மைக்ரோசாஃப்ட் ஸ்விஃப்ட் பேர், டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி, ஒரு பெர்சனல் சவுண்ட் ப்ரொபைல், ஆன்-ஹெட் டிடெக்ஷன், ஃபைண்ட் மை டிவைஸ் ஆதரவு, கேமிங் அல்லது வீடியோவிற்கான லோ லேக் மோட் மற்றும் சார்ஜிங் ஸ்டேட்டஸ் எல்இடி ஆகியவைகளையும் கொண்டிருக்கும்.

நத்திங் ஹெட்ஃபோன் 1 என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? டிலேப்ஸ் (Dealabs) வழியாக கிடைத்த சமீபத்திய அறிக்கையின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் நத்திங் ஹெட்போன் 1 மாடலின் விலை 299 யூரோவாக இருக்கலாம்; அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.29,700) ஆக இருக்கலாம். இதற்கிடையில் இங்கிலாந்தில் நத்திங் ஹெட்போன் 1 மாடலின் விலை இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.34,700 ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

குறிப்பிட்ட பிராந்தியங்களில் நத்திங் ஹெட்போன் 1 மாடல் ஆனது பிளாக் மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் நத்திங் ஹெட்போன் 1 ஆனது பிளாக் கலர் ஆப்ஷனுடன் சேர்த்து ஒயிட் கலருக்கு பதிலாக க்ரே கலரில் வாங்க கிடைக்கலாம். அமெரிக்காவில் இதன் விலை $309 ஆக, அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.26,700 க்கு அறிமுகம் செய்யப்படலாம் ஆக எப்படி பார்த்தாலும் நத்திங் ரூ.30,000 - ரூ.40,000 பட்ஜெட்டில் தான் இருக்கும் என்பது போல் தெரிகிறது.

Best Mobiles in India

English summary
Nothing Headphone 1 Offer 1040mAh battery 80 hours Playback Report Launch on July 1
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X