Nothing நீ பலே ஆளு.. பிப்.14 ரூ.99 க்கு CMF Buds 2, FREE நத்திங் இயர்பட்ஸ்.. சரியான நேரத்தில் தரமான ஆபர்!
நத்திங் (Nothing) நிறுவனத்தின் துணை நிறுவனமான சிஎம்எப் பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட சிஎம்எப் பட்ஸ் 2 (CMF Buds 2) இயர்பர்ட்ஸ் மாடல் ஆனது கூடிய விரைவில் இந்தியாவில் வெறும் ரூ.99 க்கு வாங்க கிடைக்கவுள்ளது. எப்படி என்று யோசிக்கிறீர்களா?
உங்களுக்குத் தெரியாவிட்டால், நத்திங் நிறுவனம் இந்தியாவில் அதன் முதல் பிளாக்ஷிப் ஸ்டோரை திறக்கிறது. இந்த ஸ்டோர் பெங்களூரில் திறக்கப்பட உள்ளது. இதற்கான தொடக்க நாள் - பிப்ரவரி 14, 2026 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாளில், கொண்டாட்டச் சலுகையின் ஒரு பகுதியாக, நத்திங் ஸ்டோருக்குள் வெறும் ரூ.99 க்கு சிஎம்எப் பட்ஸ் 2 வாங்க கிடைக்கும்.

மேலும் இந்த சலுகை வாடிக்கையாளர்களுக்கு முதல் 99 நிமிடங்களுக்கு மட்டுமே இருக்கும். எனவே நீங்கள் பெங்களூருவில் இருந்தால், ரூ.2,299 மதிப்புள்ள சிஎம்எப் பட்ஸ் 2 மாடலை வெறும் ரூ.99 க்கு விரும்பினால், முதல் 99 நிமிடங்களில் நத்திங் நிறுவனத்தின் முதல் பிளாக்ஷிப் ஸ்டோருக்கு செல்லவும். ஏனென்றால் உங்களுக்கு இன்னும் சில சலுகைகளும் கிடைக்கும்.
நத்திங் போன் 3 மாடலை வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தற்போது ரூ.5,999 மதிப்புள்ள நத்திங் இயர் ஏ இயர்பட்ஸ் ஆனது இலவசமாக வழங்கப்படும். ஒருவேளை நீங்கள் நத்திங் போன் 3ஏ அல்லது நத்திங் போன் 3ஏ ப்ரோ மாடலை வாங்கினால், சிஎம்எப் பட்ஸ் 2-ஐ இலவசமாகப் பெறுவீர்கள்.
சிஎம்எப் போன் 3ஏ லைட் (CMF Phone 3a Lite) மற்றும் சிஎம்எப் போன் 2 ப்ரோ (CMF Phone 2 Pro) ஆகிய ஸ்மார்ட்போன்கள் உடன், பயனர்கள் இலவச சிஎம்எப் பட்ஸ் 2-வை பெறுவார்கள். மேற்கண்ட அனைத்து வாங்குதல்களுக்கும் - 3 மாத நீட்டிக்கப்பட்ட உத்தரவாதமும் கிடைக்கும்.
மேலும் நத்திங் பிராண்ட் ஆனது தனது ஸ்டோருக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கான காட்சியில் ஆர்சிபி கோப்பையை காண்பிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. நத்திங் நிறுவனம் அதன் முதல் பிளாக்ஷிப் ஸ்டோரை திறக்கும் விலாசம் - 660/1, 100 அடி சாலை, பர்ஸ்ட் ஸ்டேஜ் , இந்திராநகர், பெங்களூரு, கர்நாடகா. கடை திறப்பு தேதி பிப்ரவரி 14, 2026, மற்றும் வரிசை காலை 9 மணி முதல் தொடங்கும்
சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான சிஎம்எப் ஹெட்ஃபோன் ப்ரோவின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் சிஎம்எப் ஹெட்ஃபோன் ப்ரோவின் விலை ரூ.7,999 என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த ஹெட்ஃபோன்கள் வரையறுக்கப்பட்ட காலத்திற்கு ரூ.6,999 என்கிற அறிமுக விலையில் விற்கப்பட்டது. இப்போது அசல் விலைக்கு வாங்க கிடைக்கிறது.
ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் சிஎம்எப் ஹெட்ஃபோன் ப்ரோ மாடலை பிளிப்கார்ட் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் சில்லறை விற்பனை கடைகள் வழியாக வாங்கலாம். சிஎம்எப் ஹெட்ஃபோன் ப்ரோ அது டார்க் கிரே, லைட் கிரீன் மற்றும் லைட் கிரே ஆகிய கலர் ஆப்ஷன்களில் வாங்கலாம்.
சிஎம்எப் ஹெட்ஃபோன் ப்ரோ விரிவான அம்சங்கள் (CMF Headphone Pro Features):
- இது ஏஎன்சி ஆதரவு உடன் வருகிறது, இது தேவையற்ற சுற்றுப்புற ஒலியை 40dB வரை குறைப்பதாக கூறப்படுகிறது
- இதில் ஹைப்ரிட் ஏஎன்சி (Hybrid ANC) அம்சமும் உள்ளது
- இதில் ஒரு ரோலர் டயலும் உள்ளது, இது பயனர்கள் ஒலியளவை சரிசெய்யவும், ஏஎன்சி-ஐ மாற்றவும், இசையை இயக்கவும் அல்லது இடைநிறுத்தவும் அனுமதிக்கிறது.
- எனர்ஜி ஸ்லைடர் (Energy Slider) உள்ளது. இது பயனர்கள் அவர்கள் கேட்கும் டிராக்கின் அடிப்படையில் பாஸ் மற்றும் ட்ரெபிள் நிலைகளை தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது.
- ஸ்பேஷியல் ஆடியோ (Spatial Audio) அல்லது ஏஐ அசிஸ்டென்ட்டை ஆக்டிவேட் செய்வது போன்ற அம்சங்களுக்கு விரைவான அணுகலை வழங்கும் கஸ்டமைசபிள் பட்டன் உள்ளது.
- விருப்பப்படி கண்ட்ரோல்களை நத்திங் எக்ஸ் ஆப் (Nothing X App) மூலம் கஸ்டமைஸ் செய்யலாம்
- குறைவான சிதைவு மற்றும் கூர்மையான தெளிவுக்காக நிக்கல் பூசப்பட்ட டயாபிராம்களுடன் 40 மிமீ ட்ரைவர்கள் உள்ளன.
- இது SBC மற்றும் LDAC ஆடியோ கோடெக்குகளை ஆதரிக்கிறது
- ஹை ரெஸ் ஆடியோ பிளேபேக்கையும் (Hi Res Audio Playback) ஆதரிக்கிறது
- ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 மணிநேரம் வரை பிளேபேக் மற்றும் 50 மணிநேர டால்க் டைம் (Talk time)
- ஏஎன்சி (ANC - Active Noise Cancellation) இயக்கப்பட்டிருக்கும் போது பிளேபேக் நேரம் 50 மணிநேரமாக குறையும்
- இது ஆடியோ பிளேபேக்கிற்கான யுஎஸ்பி டைப்-சி கனெக்டிவிட்டியையும், சார்ஜ் செய்வதையும் ஆதரிக்கிறது.
- ஐந்து நிமிட குவிக் சார்ஜிங் உடன் 5 மணிநேரம் வரை பிளேபேக் நேரத்தை வழங்குவதாக விளம்பரப்படுத்தப்படுகின்றன
- முழுமையாக சார்ஜ் ஆக சுமார் இரண்டு மணிநேரம் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது


Click it and Unblock the Notifications








