Nothing Ear Stick என்ற புதிய டிவைஸை வெளியிடுகிறதா Nothing.! விலை என்னவா இருக்கும்?

|

Nothing நிறுவனம் மீண்டும் ஒரு புதிய கேட்ஜெட் உடன் மக்களின் கவனத்தையும், எதிர்பார்ப்பையும் அதிகமாக ஈர்த்துள்ளது. நத்திங் (Nothing) நிறுவனம் இப்போது, அடுத்து வரவிருக்கும் நத்திங் இயர் ஸ்டிக் (Nothing Ear Stick) பற்றி டீஸ் செய்துள்ளது. நத்திங் இயர் ஸ்டிக் நிறுவனத்தின் இரண்டாவது ஆடியோ தயாரிப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, Carl Pei முன்னணி பிராண்ட் கடந்த ஆண்டு Nothing Ear (1) டிவைஸை அறிமுகப்படுத்தியது.

புதிய Nothing Ear Stick சாதனம் விரைவில் அறிமுகமா?

புதிய Nothing Ear Stick சாதனம் விரைவில் அறிமுகமா?

இப்போது, ​​​​ஒரு புதிய வளர்ச்சியில், ட்விட்டர் பயனர் குபா வோஜ்சிச்சோவ்ஸ்கி (Kuba Wojciechowski) மைக்ரோ-பிளாக்கிங் தளத்தில் வடிவமைப்பு ரெண்டர்களை வெளியிட்டார். Nothing Ear (1) மற்றும் Nothing Phone (1) போன்ற சாதனங்களை Nothing நிறுவனம் ட்ரான்ஸ்பரென்ட் வடிவமைப்புடன் வழங்கியது. அதேபோல், இந்த புதிய Nothing Ear Stick சாதனத்தையும் நிறுவனம் புதிய வடிவமைப்புடன் அறிமுகம் செய்கிறது. இந்த சாதனத்தில் என்ன எதிர்பார்க்கலாம் என்ற விபரங்கள் இதோ.

முந்தைய மாடலில் இருந்து இது எப்படி மாறுபடுகிறது?

முந்தைய மாடலில் இருந்து இது எப்படி மாறுபடுகிறது?

தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, வரவிருக்கும் புதிய Nothing Ear Stick சாதனத்தின் இயர்பட்ஸ்கள் முன்பு வந்த இன்-இயர் டிசைன் போன்று இல்லாமல், இம்முறை செமி இன்-இயர் டிசைனுடன் வெளிவருவதாகக் கூறப்படுகிறது. அதாவது நத்திங் இயர் ஸ்டிக் சாதனம் இயர் டிப்ஸ் அம்சத்துடன் வருகிறது. சரி, இந்த வரவிருக்கும் நத்திங் இயர் ஸ்டிக் ரெண்டர்கள் நமக்கு என்ன தகவலை வழங்குகிறது என்று பார்க்கலாம். நத்திங் இயர் ஸ்டிக் கேஸ் பற்றி முதலில் தெரிந்துகொள்ளலாம்.

EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.81000 டெபாசிட்! உடனே Online இல் பேலன்ஸ் செக் செய்யுங்க.!EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.81000 டெபாசிட்! உடனே Online இல் பேலன்ஸ் செக் செய்யுங்க.!

நத்திங் இயர் ஸ்டிக் (1) சாதனத்தில் இன்-இயர் டிசைன் கிடையாதா?

நத்திங் இயர் ஸ்டிக் (1) சாதனத்தில் இன்-இயர் டிசைன் கிடையாதா?

Nothing நிறுவனம் முன்பு அறிமுகம் செய்த நத்திங் இயர் கேஸைப் போன்ற ஒரு வெளிப்படையான ட்ரான்ஸ்பரென்ட் வடிவமைப்பை முழுமையாகப் பெறவில்லை. ஆனால், நத்திங் இயர் (1) ஸ்டிக் இல் உள்ள வடிவமைப்பை நாம் முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது, புதிய இயர் ஸ்டிக் கேஸ் சிலிண்டர் வடிவமைப்பைக் கொண்டிருப்பதாக ரெண்டர் புகைப்படங்கள் காண்பிக்கிறது. இதில் கவனிக்கக் கூடிய மற்றொரு மாற்றம் என்னவென்றால், இந்த இயர்பட்ஸ்களில் இன்-இயர் டிசைன் கிடையாது.

ஆப்பிள் உடன் போட்டியிட போகிறதா நத்திங்?

ஆப்பிள் உடன் போட்டியிட போகிறதா நத்திங்?

முன்பே சொன்னது போல, நத்திங் இயர் ஸ்டிக் இயர்பட்ஸ்கள் ஆப்பிள் ஏர்பாட் டிவைஸ்களைப் போலவே செமி இன்-இயர் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்பது தெரியவந்துள்ளது. நத்திங் இயர் ஸ்டிக் சமீபத்தில் FCC சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டது. இயர் ஸ்டிக்கின் ஒவ்வொரு இயர்பட்களிலும் 36mAh பேட்டரி யூனிட் பொருத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கேஸின் பேட்டரி திறன் 350mAh ஆக இருக்கும்.

WhatsApp வாய்ஸ் மற்றும் வீடியோ கால்ஸை Record செய்வது எப்படி? ரொம்ப ஈஸியான டிப்ஸ்.!WhatsApp வாய்ஸ் மற்றும் வீடியோ கால்ஸை Record செய்வது எப்படி? ரொம்ப ஈஸியான டிப்ஸ்.!

நத்திங் இயர் ஸ்டிக்கின் விலை என்ன?

நத்திங் இயர் ஸ்டிக்கின் விலை என்ன?

இதேபோல், மாடல் எண் B157 உடன் நத்திங் இயர் ஸ்டிக் சாதனம் ஏற்கனவே BIS சான்றிதழில் காணப்பட்டது. எனவே இது விரைவில் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம். சில மாதங்களுக்கு முன்பு, நத்திங் இயர் ஸ்டிக்கின் விலை அமேசான் பட்டியல் மூலம் லீக் ஆனது என்பதை நாங்கள் இந்த இடத்தில் குறிப்பிடுகிறோம். நத்திங் இயர் ஸ்டிக்கின் விலை €99 என்று அதில். குறிப்பிடப்பட்டிருந்தது இந்திய மதிப்பில் இது தோராயமாக சுமார் ரூ. 8,200 ஆகும். நத்திங் இயர் ஸ்டிக் புளூடூத் 5.2 இணைப்பைக் கொண்டிருக்கும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Nothing Ear Stick Spotted On BIS Certification It Might Soon Launch In India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X