நீ வா ராசா.. 4 மாசம் கேப்பு விட்டது இதுக்கு தானா.. Nothing Ear Open இயர்பட்ஸ்.. எப்போது அறிமுகம்?
Nothing Ear Open Earbuds: ட்ரான்ஸ்பரென்ட் டிசைன் மற்றும் எல்இடி லைட்ஸ் - என ஒருசில வியாபார யுக்திகளை மட்டுமே வைத்து கொண்டு.. நத்திங் நிறுவனமானது இந்தியாவை தனக்கான ஒரு முக்கிய சந்தையாக மாற்றி வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. பின்னர் ஏப்ரல் மாதத்தில் இந்நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ்களாக நத்திங் இயர் (Nothing Ear) மற்றும் நத்திங் இயர் ஏ (Nothing Ear a) மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
இதற்கிடையில் 4 மாத இடைவெளிக்கு பின்னர் இந்நிறுவனம் இன்னொரு புதிய இயர்போன்ஸை கூடிய விரைவில் அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது. 91மொபைலஸ் (91Mobiles) வழியாக கிடைத்த சமீபத்திய தகவலின்படி, நத்திங் நிறுவனமானது இயர் ஓப்பன் என்கிற புதிய இயர்பட்ஸில் (Nothing Ear Open Earbuds) பணியாற்றி வருகிறது. சுவாரசியமாக இது பல்வேறு உலகளாவிய சந்தைகளுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இது இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு மட்டுப்படுத்தப்படாமல் இருக்கலாம்.

மாடல் பெயரை தவிர்த்து நத்திங் இயர் ஓப்பன் இயர்பட்ஸின் டிசைன், அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் (Design, Features and Price) குறித்து வேறெந்த விவரங்களும் கிடைக்கவில்லை. வரும் நாட்களில் இதுகுறித்த மேலதிக விவரங்கள் கிடைக்கலாம். பெரும்பாலும் இது நத்திங் இயர் மற்றும் நத்திங் இயர் ஏ மாடல்களில் உள்ள முக்கிய அம்சங்களை அப்படியே தக்கவைத்து கொள்ளலாம்.
ஏனென்றால் நத்திங் இயர் மற்றும் நத்திங் இயர் ஏ ஆகிய 2 மாடல்களுக்கும் கூட சில பொதுவான அம்சங்கள் உள்ளன. இரண்டுமே 45dB வரையிலான ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷன் (Active noise cancellation) மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டியை (Bluetooth Connectivity) ஆதரிக்கின்றன. மேலும் 2 மாடல்களின் சார்ஜிங் கேஸ்களும் (Charging Case) மற்றும் இயர்பட்களும் பிராண்டின் சிக்னேச்சர் டிரான்ஸ்பரென்ட் டிஸைனை (Signature Transparent Design) பெற்றுள்ளன.
மேலும் இரண்டுமே இன்-இயர் டிடெக்ஷன் அம்சத்துடன் (In-ear detection feature) வருகின்றன மற்றும் டூயல் கனெக்டிவிட்டியை (Dual Connectivity) ஆதரிக்கின்றன. இரண்டுமே 11மிமீ டைனமிக் டிரைவர்களுடன் வருகின்றன. கூடவே பிஞ்ச் கண்ட்ரோல்களை (Pinch Controls) வழங்குகின்றன. மேலும் இவ்விரு மாடல்களுமே நத்திங் எக்ஸ் ஆப் (Nothing X App) உடன் இணக்கமாக உள்ளன. இந்த ஆப்பை பயன்படுத்தி இந்த இயர்பட்ஸ்களின் செயல்பாடுகளை கஸ்டமைஸ் செய்யலாம்.
மேலும் இந்த இரண்டு இயர்பட்ஸ் மாடல்களுமே சாட்ஜிபிடி (ChatGPT) ஒருங்கிணைப்புடன் வருகின்றன. இதை பிஞ்ச்-டு-ஸ்பீக் ஆக்ஷன் (Pinch to Speak Action) மூலம் அணுகலாம். இந்த அம்சத்தை அணுக பயனர்கள் தங்கள் நத்திங் போன்களில் லேட்டஸ்ட் நத்திங் ஓஎஸ் (Latest Nothing OS) மற்றும் சாட்ஜிபிடி-ஐ இன்ஸ்டால் செய்து இருக்க வேண்டும்.
நத்திங் இயர் மற்றும் இயர் ஏ இயர்பட்கள் ஒவ்வொன்றும் 46எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளன, அதே சமயம் சார்ஜிங் கேஸ்களில் 500எம்ஏஎச் பேட்டரிகள் உள்ளன. முக்கிய வேறுபாடுகளை பொறுத்தவரை.. நத்திங் இயர் மாடலானது 40.5 மணிநேரம் வரை ஒட்டுமொத்த பேட்டரி லைஃப்பை (Total Battery Life) வழங்குகிறது. மறுகையில் உள்ள நத்திங் இயர் ஏ மாடலானது 42.5 மணிநேரம் வரை ஒட்டுமொத்த பிளேபேக் நேரத்தை (Total Playback Time) வழங்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் நத்திங் இயர் ஆனது செராமிக் டயாஃப்ரம்ஸ்-ஐ (Ceramic Diaphragms) கொண்டுள்ளது; மறுகையில் இயர் ஏ ஆனது PMI + TPU-ஐ கொண்டு உள்ளது. நத்திங் இயர் ஆனது தூசி மற்றும் ஸ்பிளாஷ் (Dust and Splash) எதிர்ப்பிற்க்கான ஐபி54 ரேட்டிங் (IP54 Rating) உடன் வருகின்றன. இதன் சார்ஜிங் கேஸ் ஆனது ஐபி55 ரேட்டிங்கை (IP55 Rating) கொண்டுள்ளது. மறுகையில் உள்ள நத்திங் இயர் ஏ-வின் இயர்பட்கள் ஆனது அதே ஐபி54 ரேட்டிங்கை கொண்டிருந்தாலும் கூட, இதன் கேஸ் ஐபிஎக்ஸ்2 ரேட்டிங்கை (IPX2 Rating) மட்டுமே கொண்டுள்ளது.
நத்திங் இயர், நத்திங் இயர் ஏ-வின் இந்திய விலை: இந்தியாவில் நத்திங் இயர் மாடல் ரூ.11,999 க்கும், நத்திங் இயர் ஏ மாடல் ரூ.7,999 க்கும் வாங்க கிடைக்கிறது. நத்திங் இயர் மற்றும் நத்திங் இயர் ஏ ஆகிய இரண்டு இயர்பட்ஸ்களுமே பிளாக் (Black) மற்றும் ஒயிட் (White) என்கிற "நத்திங் பிராண்டின் வழக்கமான" கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகின்றன ஆனால் நத்திங் இயர் ஏ மாடல் மட்டும் கூடுதலாக மூன்றாவது கலர் ஆப்ஷன் ஆன யெல்லோ (Yellow) கலரில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








