ஆடிய ஆட்டம் என்ன.. ரூ.8000 விலை குறைப்பு.. அடிமட்ட விலைக்கு வந்த Nothing-ன் புது இயர்பட்ஸ்!
என்னது "79 ஆயிரத்து 999 ரூபாயா!" என்று ஷாக் ஆகி, எங்க ஏரியா உள்ள வராதே என்று நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனையும், நந்திங் நிறுவனத்தையும் வெளுத்துவிட்டதன் விளைவாக, நிகழும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 இல் - நத்திங் போன் 3 மீது ரூ.45,000 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, உலகளாவிய அறிமுகம் நடந்து 1 ஆண்டுக்கு பிறகு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நத்திங் இயர் ஓப்பன் (Nothing Ear Open) மாடல் ஆனது - வந்த வேகத்திலேயே ரூ.8000 விலை குறைப்பின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் நத்திங் இயர் ஓப்பன் - நத்திங் நிறுவனத்தின் முதல் ஓப்பன் ஸ்டைல் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) ஹெட்செட்டாக கடந்த செப்டம்பர் 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

நத்திங் இயர் ஓப்பன் தற்போது, பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது ஒரு "ஸ்பெஷல் ப்ரைஸ்" என்று நத்திங் நிறுவனம் குறிப்பிடுகிறது. அதாவது நிகழும் பிளிப்கார்ட் விற்பனை முடியும் போது அதன் விலை மாறக்கூடும். நினைவூட்டும் வண்ணம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இந்த ஹெட்செட்டின் விலை ரூ.17,999 ஆகும்!
நத்திங் இயர் ஓப்பன் முக்கிய அம்சங்கள்:
- நத்திங் பிராண்டின் "சிக்னேச்சர்" டிரான்ஸ்பிரென்ட் டிசைன்
- அணிபவரின் காதின் பின்புறத்தை சுற்றி பாதுகாப்பாக இணைக்கும் கர்வ்டு பேண்ட்
- ஒவ்வொரு இயர்போனிலும் 14.2 மிமீ டைனமிக் டிரைவர்
- சாட்ஜிபிடி ஆதரவு
- பிஞ்ச் கண்ட்ரோல்கள்
- ஸ்விஃப்ட் பேர் மற்றும் கூகுள் ஃபாஸ்ட் பேர்
- நத்திங் எக்ஸ் ஆப் வழியாக செட்டிங்ஸ்-ஐ கஸ்டமைஸ் செய்யும் விருப்பங்கள்
- ப்ளூடூத் 5.3
- AAC மற்றும் SBC கோடெக்ஸ் உடனான இணக்கம்
- மல்டிபாயிண்ட் ஆதரவு
- வாய்ஸ் காலிங்கை மேம்படுத்த ஏஐ அடிப்படையிலான கிளியர் வாய்ஸ் தொழில்நுட்பம்
- 120ms க்கும் குறைவான லேடன்சி
- தூசி மற்றும் நீர் தெறிப்புகளில் இருந்து பாதுகாக்கும் IP54 ரேட்டிங்
- ஒவ்வொரு இயர்போனிலும் 64mAh பேட்டரி
- சார்ஜிங் கேஸில் 635mAh செல்
- யூஎஸ்பி டைப்-சி போர்ட் வழியாக சார்ஜ்
- ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணிநேரம் வரை பேட்டரி
- கேஸ் உடன் சேர்த்து மொத்தம் 30 மணிநேரபேட்டரி
- 10 நிமிட குவிக் சார்ஜ் 2 மணிநேர தொடர்ச்சியான பிளேபேக்கை வழங்கும்
- இயர்பட்ஸ் ஒவ்வொன்றும் 8.1 கிராம் எடையை கொண்டுள்ளன
- கேஸ் எடை 63.8 கிராம்
நத்திங் போன் 3 மீதான விலை குறைப்பு: முன்னரே குறிப்பிட்டபடி பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது, நத்திங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன நத்திங் போன் 3 ஆனது 56% தள்ளுபடி விலையில், அதாவது பாதிக்கும் குறைவான விலையில் வாங்க கிடைக்கிறது.
நினைவூட்டும் வண்ணம் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.79,999 என்கிற விலைக்கு இந்தியாவில் அறிமுகமானது. ஆனால் பிளிப்கார்ட்டில் நிகழும் பண்டிகை கால சிறப்பு விற்பனையில் இது ரூ.45,000 தள்ளுபடியை பெற்று வெறும் ரூ.34,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த விலை - வங்கி தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகைகள் ஆகியவற்றை உள்ளடக்கும் என்பதை நினைவில் கொள்வும்.
அதாவது நத்திங் போன் 1 மற்றும் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனை வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு, அதை எக்ஸ்சேன்ஜ் செய்வதன் மூலம் நல்ல டிஸ்கவுண்ட்டை பெறலாம். கூடவே ஏற்கனவே நத்திங் ஸ்மார்ட்போனை வைத்துள்ள பயனர்கள் தங்களுடைய தனித்துவமான தள்ளுபடி குறியீட்டை (Unique Discount Code) பெற நத்திங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலோ அல்லது பிளிப்கார்ட்டிலோ தங்களுடைய ஐஎம்இஐ (IMEI) நம்பரை உள்ளிட வேண்டும். அதன்மூலம் பெரிய அளவிலான எக்ஸ்சேன்ஜ் சலுகையில் கீழ் புதிய நத்திங் போன் 3 மாடலை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








