Home
Gadgets

சும்மா கிழி.. Nothing இறக்கும் புது இயர்பட்ஸ்.. பட்ஜெட்டில் ரெடியாகும் புது Nothing Ear 3a மாடல்!

நத்திங் நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ் மாடலாக நத்திங் இயர் 3ஏ (Nothing Ear 3a) அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த இயர்பட்ஸ் மாடலின் விலை மற்றும் கலர் விவரங்கள் கசிந்துள்ளன. இந்தியாவில் நத்திங் இயர் 2ஏ மாடல் கிடைப்பதால், இந்த புதிய மாடல் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இதுகுறித்த விவரங்களை பார்க்கலாம்.

டீல்லேப்ஸ் (Dealabs) வழியாக இந்த நத்திங் இயர் 3ஏ மாடலின் கலர் விவரங்கள் கசிந்துள்ளன. இதில் புதியாக பிங்க் கலரை பார்க்க முடிகிறது. அதேபோல பிரான்ஸ் நாட்டில் இந்த மாடலுக்கு நிர்ணயிக்கப்பட இருக்கும் விலை விவரங்களும் கசிந்துள்ளன. இதை தவிர வேறு விவரங்கள் கசியவில்லை. நத்திங் நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.

சும்மா கிழி.. Nothing இறக்கும் இயர்பட்ஸ்.. பட்ஜெட்டில் ரெடியாகும்!

ஒயிட் (White), பிளாக் (Black), எல்லோ (Yellow) மற்றும் பிங்க் (Pink) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் கசிந்த விலையின்படி 99 அமெரிக்க டாலர்களுக்கு வெளியாக இருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.10,919ஆக இருக்கிறது. இதே விலையில் இந்திய மார்கெட்டில் எதிர்பார்க்கலாம். ஏனென்றால், நத்திங் இயர் 2ஏ (Nothing Ear 2a) மாடலின் விலை ரூ.9,999ஆக இருக்கிறது.

இந்த விலையுடன் வெளியாகியது. ஆகவே, இப்போது கிட்டத்தட்ட அதே விலைக்கு நத்திங் இயர் 3ஏ வெளியாக இருப்பதால், இது விற்பனையில் நல்ல வரவேற்பை பெற வாய்ப்புள்ளது. இப்போது, நத்திங் இயர் 2ஏ மாடலில் கிடைத்த பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். இதிலிருந்து அப்கிரேட் செய்யப்பட்ட பீச்சர்கள் இயர் 3ஏ மாடலில் கொடுக்கப்படும்.

நத்திங் இயர் 2ஏ அம்சங்கள் (Nothing Ear 2a Specifications): டுயல் சேம்பர் டிசைனில் (Dual Chamber Design) 11.6 எம்எம் டைனாமிக் டிரைவர்கள் கிடைக்கின்றன. லோவ் லேக் மோட் (Low Lag Mode) கிடைக்கிறது. ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கனெக்டிவிட்டி கொடுத்துள்ளது. ஏஏசி (AAC), எஸ்பிசி (SBC), எல்எச்டிசி 5.0 (LHDC 5.0) ஆகிய கோடெக்குகள் கிடைக்கின்றன.

மேலும், ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கிடைக்கிறது. பிரீமியம் கனெக்டிவிட்டி பீல் கொடுக்கும்படி கூகுள் ஃபாஸ்ட் பேர் (Google Fast Pair), மைக்ரோசாப்ட் ஸ்விப்ட் பேர் (Microsoft Swift Pair) மற்றும் ஒரே நேரத்தில் 2 டிவைஸ்களை கனெக்ட் செய்து கொள்ளும்படி டூயல் கனெக்சன் (Dual Connection) கொடுக்கப்பட்டு இருக்கிறது. டிரான்ஸ்பரன்ஸி மோட் (Transparency Mode) உள்ளது.

ஹை (High), மிட் (Mid), லோவ் (Low) மற்றும் அடாப்டிவ் (Adaptive) ஆகிய மோட்களுடன் ஸ்மார்ட் அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Smart Adaptive Noise Cancellation) கிடைக்கிறது. 40db ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) மற்றும் என்விரான்மெண்ட் அடாப்டிவ் ஏஎன்சி (Environment Adaptive ANC) கொடுக்கப்பட்டு இருக்கிறது. கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால்களை கொடுக்கிறது.

ஏனென்றால், கிளியர் வாய்ஸ் டெக்னாலஜி (Clear Voice Technology) கொண்ட 3 மைக்குகள் கிடைக்கின்றன. இதில் விண்ட் நாய்ஸ் ரெசிஸ்டன்ஸ் (Wind Noise Resistance) கிடைக்கிறது. பிரஸ் கன்ட்ரோல் கிடைக்கிறது. பிளே,பாஸ், ஸ்கிப், பார்வேர்ட், கால் அன்சர் உள்ளிட்ட கன்ட்ரோல்கள் கிடைக்கின்றன. மேலும், ஆக்டிவ் நாட்ஸ் கேன்சலேஷன், டிரான்ஸ்பரன்சி மோட் கன்ட்ரோல்கள் உள்ளன.

இயர்பட்களுக்கு IP54 ரேட்டிங் மற்றும் சார்ஜிங் கேஸில் IP55 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. பட்களில் 33mAh பேட்டரி கிடைக்கிறது. சார்ஜிங் கேஸில் 485mAh பேட்டரி கிடைக்கிறது. ஏஎன்சி மோடில் பட்களில் 4 மணி நேரங்களுக்கும், சார்ஜிங் கேஸில் 22.5 மணி நேரங்களுக்கும் பேக்கப் கிடைக்கும்.

ஏஎன்சி ஆப் செய்தால், முறையே 6.3 மணி நேரங்களுக்கு பட்களில் பேக்கப் கிடைக்கும். சார்ஜிங் கேஸில் 36 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கிறது. கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. 2.5W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. ஆகவே, 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 8 மணி நேரங்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும். இதில் அப்கிரேட் செய்யப்பட்டு நத்திங் இயர் 3ஏ கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Nothing Ear 3a Price Colors Leaked Ahead Of Launch Expected Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X