Home
Gadgets

வா ராசா வா.. 2 புது Nothing 5ஜி போன்களை தொடர்ந்து புது பட்ஜெட்-விலை Buds.. எந்த மாடல்?

போதும் போதும் லிஸ்ட்டு பெருசாகிட்டே இருக்கு என்று கூறும்படியாக..கார்ல் பெய் தலைமையிலான நத்திங் (Nothing) நிறுவனமானது ஜூலை 7 ஆம் தேதி நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் (July 7 Launch Event) என்னென்ன தயாரிப்புகள் அறிமுகமாகும் என்கிற பட்டியலை நீடித்துக்கொண்டே போகிறது.

ஆரம்பத்தில் ஜூலை 7 ஆம் தேதி அன்று நத்திங் நிறுவனத்தின் என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் ஆக நத்திங் போன் 4பி () மாடல் அறிமுகமாகும் என்கிற டீசர்கள் வெளியாகின. சமீபத்தில் அதே நாளில் நத்திங் போன் 4பி ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் ஆக ஒரு ஆர்சிபி எடிஷன் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவல் கிடைத்தது.

2 புது Nothing 5ஜி போன்களை தொடர்ந்து புது பட்ஜெட்-விலை Buds!

அதை தொடர்ந்து தற்போது ஜூலை 7 ஆம் தேதி அன்று, நத்திங் நிறுவனம் அதன் புதிய டிடபுள்யூஎஸ் (TWS) இயர்பட்ஸ் ஆன நத்திங் இயர் 3ஏ (Nothing Ear 3a) மாடலும் அறிமுகம் செய்யப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இயர் ஏ (Ear a) மாடலின் அதே விலையில் இயர் 3 அறிமுகமாகும் என்ற தகவல் லீக் ஆன சிறிது நேரத்திலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நினைவூட்டும் வண்ணம் நத்திங் இயர் ஏ மாடல் ஆனது ரூ.7,999 க்கு அறிமுகமாகி, இன்னமும் அதே விலைக்கு, பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கிறது. ஆக வரவிருக்கும் நத்திங் இயர் 3ஏ மாடலும் கிட்டத்தட்ட இதே விலைக்கு (ரூ.10,000 க்குள்) அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.

இதுகுறித்த டீஸரில் நத்திங் இயர் 3ஏ இயர்பட்ஸ் மாடல் ஆனது வெள்ளை, கருப்பு, மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு ஆகிய நான்கு கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் டிசைன் மற்றும் முக்கிய அம்சங்கள் குறித்த விவரங்கள் இன்னும் டீஸ் செய்யப்படவில்லை, வரும் நாட்களில் வெளியாகலாம்.

முன்னதாக அறிமுகமான நத்திங் இயர் ஏ பட்ஸ் மாடலின் முக்கிய அம்சங்கள்:இது 45dB வரையிலான ஏஎன்சி (ANC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷன் (Active noise cancellation) மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டியை (Bluetooth Connectivity) ஆதரிக்கிறது. இதன் சார்ஜிங் கேஸ் (Charging Case) மற்றும் இயர்பட்ஸ் ஆனது நத்திங் பிராண்டின் சிக்னேச்சர் டிரான்ஸ்பரென்ட் டிஸைனை (Signature Transparent Design) பெற்றுள்ளது

மேலும் இன்-இயர் டிடெக்ஷன் அம்சத்துடன் (In-ear detection feature) வருகின்றன மற்றும் டூயல் கனெக்டிவிட்டியை (Dual Connectivity) ஆதரிக்கின்றன. இரண்டுமே 11மிமீ டைனமிக் டிரைவர்களுடன் வருகின்றன. கூடவே பிஞ்ச் கண்ட்ரோல்களையும் (Pinch Controls) வழங்குகின்றன. நத்திங் எக்ஸ் ஆப் (Nothing X App) உடன் இணக்கமாக உள்ளன. இந்த ஆப்பை பயன்படுத்தி இந்த இயர்பட்ஸ்களின் செயல்பாடுகளை கஸ்டமைஸ் செய்யலாம்.

நத்திங் இயர் ஏ இயர்பட்ஸ் ஒவ்வொன்றும் 46எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளன, அதே சமயம் சார்ஜிங் கேஸ்களில் 500எம்ஏஎச் பேட்டரிகள் உள்ளன. நத்திங் நிறுவனத்தின் கூற்றுப்படி இயர் ஏ மாடலானது 42.5 மணிநேரம் வரை ஒட்டுமொத்த பிளேபேக் நேரத்தை (Total Playback Time) வழங்கும். கடைசியாக நத்திங் இயர் ஏ-வின் இயர்பட்கள் ஆனது ஐபி54 ரேட்டிங்கை கொண்டிருந்தாலும் கூட, இதன் கேஸ் ஐபிஎக்ஸ்2 ரேட்டிங்கை (IPX2 Rating) மட்டுமே கொண்டுள்ளது

ஆர்சிபி எடிஷன்: முன்னரே குறிப்பிட்டபடி நத்திங் நிறுவனத்தின் இந்நிகழ்வு ஜூலை 7 ஆம் தேதி அன்று மதியம் 3.30 மணிக்கு இதொடங்கும். இந்நிகழ்வில் நத்திங் நிறுவனமானது ஒரு ஸ்பெஷல் எடிஷனையும் அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது. அது நத்திங் போன் 4பி ஆர்சிபி எடிஷன் (Nothing Phone 4b RCB Edition) ஆகும், இன்ஸ்டாகிராமில், இந்நிறுவனம் வெளியிட்ட ஒரு வீடியோவானது இந்த ஸ்மார்ட்போனின் இருப்பை உறுதி செய்கிறது. மேலும் இதுவும் ஜூலை 7 ஆம் தேதி அன்று அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Nothing Ear 3a in Pink Yellow White Black Launching in India on July 7 Alongside Nothing Phone 4b
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X