Home
Gadgets

Bro இதைத்தானே நீங்க முதல்ல பண்ணி இருக்கணும்.. நச் விலையில் புது Nothing இயர்பட்ஸ் அறிமுகம்!

நத்திங் நிறுவனம் அதன் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனிற்கு கொடுத்த ஓவர் பில்டப்களும், அதற்கு பிறகு வாங்கிய அடிகளும் (மோசமான விமர்சனங்களும்) நம்மில் பலருக்கும் தெரிந்ததே. அதை சரி செய்யத்தான் நத்திங் போன் 3 ஆனது ரூ.79,999 க்கு ரூ.34,999 க்கு விற்பனை செய்யப்பட உள்ளது (பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2025 விற்பனையில்)!

ஆனால் உண்மையில் நத்திங் நிறுவனம் செய்திருக்க வேண்டியது இதைத்தான் - நத்திங் இயர் 3 மாடலின் அறிமுகத்தை தான். ஆம்! நத்திங் (Nothing) நிறுவனமானது தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில், அதன் நத்திங் இயர் 3 (Nothing Ear 3) மாடலை அறிமுகம் செய்துள்ளது. சார்ஜிங் கேஸில் ஒரு சூப்பர் மைக் உடன் வருகிறது.

நச் விலையில் புது Nothing இயர்பட்ஸ் அறிமுகம்!

இந்த சூப்பர் மைக் ஆனது தெளிவான கால்களுக்கு 95dB வரை சத்தத்தை குறைக்கும் திறனை கொண்டுள்ளது. மேலும் டாக் பட்டன் மூலம் இதை உடனடி பயன்பாட்டிற்காக செயல்படுத்தவும் முடியும். மேலும் இந்த டாக் பட்டனை பயன்படுத்தி கேஸிலிருந்து நேரடியாக வாய்ஸ் நோட்களையும் பதிவு செய்ய முடியும். ஆனால் இணக்கமான நத்திங் ஓஎஸ் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே எசென்ஷியல் ஸ்பேஸ் வழியாக ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்கிரிப்ஷன் கிடைக்கும்.

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை நத்திங் இயர் 3 மாடலின் இயர்போன்கள் ஆனது 45dB வரை ரியல்டைம் அடாப்டிவ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷனை (Real-time Adaptive Active Noise Cancellation) ஆதரிக்கின்றன மற்றும் சார்ஜிங் கேஸையும் சேர்த்து மொத்தம் 38 மணிநேரம் வரை பிளேபேக் டைம்-ஐ வழங்குவதாகக் கூறப்படுகிறது.

நத்திங் இயர் 3 மாடலின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: நத்திங் இயர் 3 இயர்பட்ஸ் மாடலின் விலை தோராயமாக ரூ.21,500 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது; தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய சந்தைகளில், இந்த இயர்பட்ஸின் விதை தோராயமாக ரூ.18,700 ஆக உள்ளது. அமெரிக்காவில் தோராயமாக ரூ.15,800 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் இது இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் நிநத்திங் றுவனம் இன்னும் இந்திய வெளியீட்டு தேதி எதையும் அறிவிக்கவில்லை. பிளாக் மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நத்திங் இயர் 3 ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும்.

நத்திங் இயர் 3 விரிவான அம்சங்கள்:
- ஒவ்வொரு இயர்பட்டும் த்ரீ டைரக்ஷனல் மைக்ரோஃபோன்ஸ் மற்றும் துல்லியமான வாய்ஸ் கேப்சருக்காக போன்-கான்டெக்ஷன் வாய்ஸ் பிக்-அப் யூனிட்டை கொண்டுள்ளது
- ஏஐ நாய்ஸ் கேன்சலேஷன் ஆனது காற்றின் இரைச்சலை 25dB வரை குறைக்கும்

- ரியல் டைம் அடாப்டிவ் ஏஎன்சி ஆதரவு (45dB வரை சத்தத்தைத் தடுக்கும், ஒவ்வொரு 600 மில்லி விநாடிகளுக்கும் தொடர்ந்து சுற்றுச்சூழலுக்கு ஏற்ப சரிசெய்யும்; ஒவ்வொரு 1,875 மில்லி விநாடிகளுக்கும் ஃபிட் தொடர்பான கசிவை (Fit Related Leakage) கண்காணிக்கும்)

- 12 மிமீ டைனமிக் டிரைவர்ஸ்
- ப்ளூடூத் 5.4
- கேமிங் மற்றும் வீடியோவிற்கு 120ms க்கும் குறைவான லேடன்சி
- ஃபாஸ்ட் பேர், விண்டோஸ் வழியாக ஸ்விஃப்ட் பேர் மற்றும் ஐஓஎஸ் டிவைஸ்களை பயன்படுத்தி ஆண்ட்ராய்டுடன் தடையின்றி கனெக்ட் செய்யும் ஆதரவு
- நத்திங் எக்ஸ் ஆப் மூலம் எசன்ஷியல் ஸ்பேஸ் மற்றும் சாட்ஜிபிடி செயல்பாடுகள் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கஸ்டமைஸ் செய்யலாம்

- ஒவ்வொரு நத்திங் இயர் 3 இயர்பட்டும் 55mAh பேட்டரியை கொண்டுள்ளது
- இது 10 மணிநேரம் வரை பேட்டரியை வழங்குவதாகவும், சார்ஜிங் கேஸுடன் மொத்த பிளேபேக் டைம் 38 மணிநேரம் வரை நீட்டிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
- விரைவான 10 நிமிட யூஎஸ்பி டைப்-சி சார்ஜ் ஆனது 10 மணிநேர பயன்பாட்டை வழங்குவதாக கூறப்படுகிறது
- சார்ஜிங் கேஸில் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவும் உள்ளது

- மெட்டல் அசென்ட்ஸ் கொண்ட டிரான்ஸ்பரென்ட் கவர் மற்றும் 0.35 மிமீ MIM ஆண்டெனாவை கொண்டுள்ளது, இது 15 சதவிகிதம் சக்தியையும், 20 சதவிகிதம் சிக்னல் உணர்திறனையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
- இந்த சார்ஜிங் கேஸ், நானோ இன்ஜெக்ஷன் மோல்டிங்கை பயன்படுத்தி 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டதாக நத்திங் நிறுவனம் கூறுகிறது
- கடைசியாக இயர்பட்ஸ் மற்றும் கேஸ் ஆகிய இரண்டுமே தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கை பெற்றுள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Ear 3 With Super Mic 38 Hrs Total Battery Realtime ANC Launched Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X