Home
Gadgets

என்ன Carl Pei சார்.. வாங்குன அடி ஞாபகம் இருக்குல.. செப்.18 இல் அறிமுகமாகும் புதிய Nothing தயாரிப்பு!

கடந்த சில மாதங்களில் நத்திங் (Nothing) என்கிற பெயரை ஒருமுறை கூட கேட்கவில்லை. அந்த அளவிற்கு நத்திங் நிறுவனம் சைலன்ட் மோட்டிற்கு சென்றது. காரணம்? நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனும், அதற்கு கொடுக்கப்பட்ட பயங்கர பில்டப்பும், வெளியான பின்னர் கஸ்டமர்களும், ரிவ்யூவர்களும் கொடுத்த அடிகளும் தான் காரணம்!

இன்னும் குறிப்பாக நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம். இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. ஒன்பிளஸ் 13 கூட ரூ.69,999 க்கு தான் அறிமுகமானது. அவ்வளவு ஏன் நேற்று அறிமுகமான ஐபோன் 17 கூட ரூ.82,900 க்கு தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

செப்.18 இல் அறிமுகமாகும் புதிய Nothing தயாரிப்பு!

ஆனால் ஜூலை 2025 இல் அறிமுகமாகும் போதே இது நியாயமே இல்லாத விலை நிர்ணயத்தின் கீழ் அறிமுகமானதால், கூடவே விலைக்கு ஏற்ற அம்சங்களையும் பேக் செய்யாததால்.. இன்னும் சொல்லப்போனால் இது கொஞ்சம் கூட இந்திய வாடிக்கையாளர்களை கருத்தில் கொள்ளாததால்.. சந்தையில் "செம்ம அடி" வாங்கியது!

தற்போது 3 மாதங்கள் கழித்து நத்திங் நிறுவனம் சைலன்ட் மோடில் இருந்து வெளியே வந்துள்ளது. வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதியன்று ஒரு புதிய தயாரிப்பை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அது நத்திங் இயர் 3 (Nothing Ear 3) டிடபுள்யூஎஸ் இயர்பட்ஸ் மாடல் ஆகும். இது கடந்த மார்ச் 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்ட நத்திங் இயர் 2 மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செப்.18 இல் அறிமுகமாகும் புதிய Nothing தயாரிப்பு!

டிசைன் குறித்த டீசர் வழியாக நத்திங் இயர் 3 இயர்போன்ஸ் ஆனது செமி-டிரான்ஸ்பரென்ட் வடிவமைப்பை (Semi Transparent) கொண்டிருக்கும். இதன் சார்ஜிங் கேஸ் (Charging Case) ஆனது ஏற்கனவே உள்ள மாடலில் நாம் காண்பதை போலவே முழுமையாக டிரான்ஸ்பரென்ட் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நத்திங் நிறுவனமானது இந்த இயர்பட்ஸ் "பொருள் ரீதியாக வேறுபட்டது" என்று குறிப்பிட்டுள்ளது. இது நத்திங் இயர் 3 இயர்போன்களுக்கான புதிய மெட்டீரியலை குறிக்கலாம். நினைவூட்டும் வண்ணம் நத்திங் இயர் 2 மாடலின் கேஸ் மற்றும் இயர்பட்கள் ஆனது பாலிகார்பனேட்டால் ஆனவை.

பழைய நத்திங் இயர் 2 விலை மற்றும் அம்சங்கள்: இந்தியாவில் இது ரூ.9,999 க்கு அறிமுகமானது. வடிவமைப்பை பொறுத்தவரை இது, நத்திங் இயர் 1-ஐ போலவே ஒரு ட்ரான்ஸ்பெரன்ட் டூயல்-சேம்பர் டிஸைனுடன் வருகிறது. இது நிறுவனத்தின் 11.6 மிமீ கஸ்டமைஸ்டு ட்ரைவர்களால் இயக்கப்படுகின்றன.

இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷனும் (Active noise cancellation) உள்ளது. மேலும் இது ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டியுடன் வருகிறது. இது புதிய LHDC 5.0 கோடெக்கை ஆதரிக்கின்றன. மேலும் இது AAC மற்றும் SBC ப்ளூடூத் கோடெக்குகளையும் ஆதரிக்கின்றன. மேலும் இந்த இயர்பீஸ்கள் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கையும் கொண்டுள்ளன, அதே நேரத்தில் இதன் கேஸ் ஐபி55 ரேட்டிங்கிலான கட்டமைப்பை கொண்டுள்ளது.

நத்திங் எக்ஸ் ஆப்ஸ் வழியாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டுக்குமே இணக்கமானதாக இருக்கும் நத்திங் இயர் 2 ஆனது ஆண்ட்ராய்டு போன்களுடன் தடையற்ற கனெக்டிவிட்டியை உறுதி செய்யும் கூகுள் ஃபாஸ்ட் சப்போர்ட் உடன் வருகிறது; மேலும் விண்டோஸ் 10 டிவைஸ்ளுடன் விரைவாக கனெக்ட் ஆக ஸ்விஃட் பேர் அம்சத்தையும் ஆதரிக்கிறது.

கேமிங் செஷன்களுக்கான லோ லேக் மோட் உடன் வரும் நத்திங் இயர் 2-வின் ஒவ்வொரு இயர்பீஸிலும் 33எம்ஏஎச் பேட்டரி உள்ளது மற்றும் இதன் சார்ஜிங் கேஸில் 485எம்ஏஎச் பேட்டரி உள்ளது. நத்திங் இயர் 2-வின் ஏஎன்சி ஆஃப் செய்யப்பட்டு இருந்தால், இது சிங்கிள் சார்ஜில் 36 மணிநேர பிளேபேக்கை வழங்கும். கடைசியாக இது யூஎஸ்பி டைப்-சி போர்ட்டை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nothing Ear 3 TWS Earbuds With Different Material Launching in September 18
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X