Apple AirPods-ஐ பார்த்து அட்டை காப்பி.. Talk பட்டன், சூப்பர் மைக் உடன் புதிய Nothing இயர்பட்ஸ்!
நத்திங் (Nothing) நிறுவனம் ஆனது அதன் நத்திங் போன் 3 மாடலை அறிமுகம் செய்து - சில மாத கால இடைவெளிக்கு பிறகு புதிய தயாரிப்பு ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. அது நத்திங் நிறுவனத்தின் தேர்ட் ஜெனரேஷன் பிளாக்ஷிப் இயர்பட்ஸ் (Third generation flagship earbuds) மாடல் ஆகும்.
அதாவது - நத்திங் இயர் 3 (Nothing Ear 3) மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இது வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "வழக்கம் போல" இது தனித்துவமான புதிய அம்சங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது - குறிப்பாக டால்க் பட்டன் (Talk Button) மற்றும் சூப்பர் மைக் (Super Mic) போன்ற அம்சங்கள்!

டால்க் பட்டன் மற்றும் சூப்பர் மைக்: நத்திங் இயர் 3 மாடலின் சார்ஜிங் கேஸில் ஒரு மர்மமான 'டால்க்' பட்டன் சேர்க்கப்படும் என்று பேச்சுக்கள் அடிபடுகிறது. நத்திங் பிராண்ட் இன்னும் இந்த டால்க் பட்டனின் பயன்பாட்டை உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் இது சார்ஜிங் கேஸில் உள்ளமைக்கப்பட்ட சூப்பர் மைக் மூலம் பயனர்கள் நேரடியாக ஏஐ அசிஸ்டென்ட்டை அணுகலாம் என்று பலர் ஊகிக்கின்றனர்.
இந்த செயல்பாட்டை ஆதரிக்க நத்திங் இயர் 3 சார்ஜிங் கேஸில் ஒரு சிறிய ஸ்பீக்கரும் இருக்கலாம் என்று Exaked visuals-ன் அறிக்கை தெரிவிக்கிறது. இது உண்மையாக இருந்தால், நத்திங் இயர் 3 ஆனது ஆப்பிளின் ஏர்பாட்ஸ் ப்ரோ 3 மாடலில் உள்ள லைவ் டிரான்ஸ்லேஷன் அம்சத்துடன் நேரடியாக போட்டியிடும்.
ஆப்பிளின் இந்த லேட்டஸ்ட் இயர்பட்ஸ் மாடலில் இருக்கும் நேரடி மொழிபெயர்ப்பு அம்சமானது ஆப்பிள் இன்டலிஜென்ஸால் இயக்கப்படுகிறது. பயனர்கள் ஒரு எளிய சைகை மூலம் இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்யலாம் (செயல்படுத்தலாம்), மேலும் இந்த அமைப்பு ஒரு உரையாடலை அல்லது பேச்சை நிகழ்நேரத்தில் மொழிபெயர்க்கும் திறன் கொண்டது.
ஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோ 3 மாடலில் கவனிக்கப்பட வேண்டிய மற்ற முக்கிய அம்சங்கள்:
- ஐபி57 ரேட்டிங்
- ஹார்ட் ரேட் சென்சார்
- உலகின் மிகசிறந்த ஏஎன்சி
- ஏஎன்சி உடன் 8 மணிநேர பேட்டரி லைஃப்
- ஹியரிங் மோட் உடனான டிரான்ஸ்பிரன்ஸியில் 10 மணிநேர பேட்டரி லைஃப்
மிகவும் சமீபத்தில் தான் (ஐபோன் 17 சீரீஸ் உடன்) ஆப்பிள் நிறுவனம் ஏஐ அடிப்படையிலான அம்சங்களுடன் அதன் லேட்டஸ்ட் ஏர்பாட்ஸ் ப்ரோ 3 (AirPods Pro 3) மாடலை அறிமுகம் செய்தது . இந்நிலையில் செப்.18 ஆம் தேதி நடக்கும் நத்திங் இயர் 3 மாடலின் அறிமுகமானது பிரீமியம் டிடபுள்யூஎஸ் )(TWS - True Wireless Stereo) பிரிவில் ஆப்பிள் நிறுவனத்திற்கு நத்திங் நிறுவனத்தின் நேரடி சவாலாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
முன்னதாக அறிமுகமான நத்திங் இயர் 2 மாடலின் முக்கிய அம்சங்கள்:
- ட்ரான்ஸ்பெரன்ட் டூயல்-சேம்பர் டிஸைன்
- 11.6 மிமீ கஸ்டமைஸ்டு ட்ரைவர்ஸ்
- ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active noise cancellation)
- ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி
- LHDC 5.0 கோடெக்கை ஆதரவு
- AAC மற்றும் SBC ப்ளூடூத் கோடெக்ஸ் ஆதரவு
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்
- கேஸ் ஐபி55 ரேட்டிங் உடன் வருகிறது
- கூகுள் ஃபாஸ்ட் பேர் ஆதரவு
- ஸ்விஃட் பேர் ஆதரவு -
- லோ லேக் மோட்
- ஒவ்வொரு இயர்பீஸிலும் 33எம்ஏஎச் பேட்டரி
- சார்ஜிங் கேஸில் 485எம்ஏஎச் பேட்டரி
- ஏஎன்சி ஆஃப் செய்யப்பட்டு இருந்தால் 36 மணிநேர பிளேபேக்
- யூஎஸ்பி டைப்-சி போர்ட்
- அறிமுக விலை ரூ.9,999; தற்போதைய விலை ரூ.8,999 (பிளிப்கார்ட்)


Click it and Unblock the Notifications