இந்த 2023 ஆச்சும் நல்லபடியா அமையணும்.. சாமிய கும்பிட்டு Nothing அறிமுகம் செய்யும் அடுத்த தயாரிப்பு!
நத்திங் (Nothing) நிறுவனத்தின் கீழ் வாங்க கிடைக்கும் நத்திங் போன் (1) ஸ்மார்ட்போன் மற்றும் நத்திங் இயர் (1) இயர்பட்ஸ் ஆகிய இரண்டையுமே "சூப்பர்" என்றும் சொல்லி விட முடியாது; அதேசமயம் "மொக்கை" என்றும் சொல்லிவிட முடியாது. சரிக்கு சமமான, மிகவும் கலவையான விமர்சங்களை பெற்ற தயாரிப்புகள் என்று வேண்டுமானால் கூறலாம்.
அந்த வரிசையில் நத்திங் நிறுவனம் இந்த 2023 ஆம் ஆண்டிற்கான தனது முதல் தயாரிப்பை அறிமுகம் செய்யவுள்ளது. வண்டுகளின் புகைப்படங்களை வெளியிட்டு 'டீஸ்' செய்த பல நாட்களுக்குப் பிறகு, வருகிற மார்ச் 22 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு நத்திங்கின் அடுத்த ஜெனரேஷன் இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நத்திங் இயர் (2) இயர்பட்ஸ்: அதே டிசைன் ஆனால்..?
நத்திங் இயர் (1) மாடலை தொடர்ந்து வருகிற மார்ச் 22 அன்று நத்திங் இயர் (2) அறிமுகம் செய்யப்படவுள்ளது. வழக்கம் போல இயர் (2) மாடலின் சார்ஜிங் கேஸும் (உள்ளே என்ன இருக்கிறது என்பதை காட்சிப்படுத்தும்) வெளிப்படையான வடிவமைப்பையே பெற்றுள்ளது. மேலும் முன்னர் வெளியான மாடலில் இருந்து மிகவும் வித்தியாசமான வடிவமைப்பை பெற்றுள்ளது போலும் தெரியவில்லை.
வடிவமைப்பில் பெரிய வித்தியாசங்கள் இல்லை என்றாலும் கூட, நத்திங் இயர் (2) ஆனது ஒப்பீட்டளவில் மேம்பட்ட அம்சங்களை பேக் செய்யும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால், நத்திங் நிறுவனத்தின் டீஸரின் படி, இயர் (2) மாடலானது அதன் முன்னோடியை விட "சிறந்த ஒலி" மற்றும் "சிறந்த தெளிவை" வழங்கும். அப்படி என்னென்ன அம்சங்களை வழங்கும்? இதோ விவரங்கள்:
பெர்சனலைஸ்டு ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்
நத்திங் இயர் (2) இயர்பட்ஸில் பெர்சனலைஸ்டு ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation - ANC) இடம்பெறலாம். இது பயனர்களின் விருப்பத்திற்கேற்ப நாய்ஸ் கேன்சலேஷனின் அளவை மாற்ற அல்லது கட்டுப்படுத்த அனுமதிக்கும். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், இந்த இயர்பட்ஸ் வழியாக உங்களுக்கு என்ன மாதிரியான ஆடியோ எக்ஸ்பீரியன்ஸ் வேண்டுமென்பதை நீங்களே முடிவு செய்யலாம்.
டூயல் அல்லது மல்டி-பாயிண்ட் கனெக்டிவிட்டி
நத்திங் இயர் (2) இயர்பட்ஸில் டூயல் அல்லது மல்டி-பாயிண்ட் கனெக்டிவிட்டி இடம்பெறும் என்றும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரே நேரத்தில் 2 டிவைஸ்களில் கனெக்ட் செய்யவும்; அவற்றுக்கிடையே சிரமமின்றி மாறவும் உதவும். அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் டேப்லெட் போன்ற பல டிவைஸ்களில் கனெக்ட் செய்து தேவைக்கு ஏற்ப அவற்றிற்கு இடையே அடிக்கடி மாறலாம்.
கஸ்டம் செட்டிங்ஸ் உடனான அட்வான்ஸ்டு இக்யூ
நத்திங் இயர் (2) இயர்பட்ஸ்களானது கஸ்டம் செட்டிங்ஸ் உடனான அட்வான்ஸ்டு இக்யூ-வை (Advanced EQ) ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதாவது பயனர்கள் தங்கள் ரசனைக்கு ஏற்ப தாங்கள் கேட்கும் மியூஸிக்கில் சில மாற்றங்களை ஏற்படுத்த இயர்பட்ஸின் சவுண்ட் ப்ரொஃபைலை கஸ்டமைஸ் செய்யலாம் என்று அர்த்தம்.
நத்திங் இயர் (2) இந்திய விலை
இந்தியாவில் நத்திங் இயர் (2) ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸின் விலை நிர்ணயம் நத்திங் இயர் (1) மாடலுடன் ஒற்றுப்போகலாம். அதாவது இது ரூ.9,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும் (நினைவூட்டும் வண்ணம் நத்திங் இயர் (1) ரூ.8499 க்கு விற்பனை செய்யப்படுகிறது). இந்த இயர்பட்ஸின் சரியான விலை விவரம் வருகிற மார்ச் 22 ஆம் தேதி நடக்கும் அறிமுகத்திற்கு பின்னரே தெரிய வரும்!


Click it and Unblock the Notifications








