Nothing Ear (Stick) மீது ஜாஸ்தி டிமாண்ட்.! இருந்தாலும் தள்ளுபடி தரோம்.! எவ்வளவு தெரியுமா?

|

Nothing நிறுவனம் கடந்த வாரம் இந்தியாவிலும் பல்வேறு உலகளாவிய சந்தைகளிலும் அதன் புதிய நத்திங் இயர் (ஸ்டிக்) சாதனத்தை அறிமுகம் செய்தது. இந்த Nothing Ear (Stick) இப்போது இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கிறது.

இந்த விற்பனையை முன்னிட்டு நிறுவனம் இப்போது சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இந்த குறிப்பிட்ட சலுகையை பெற, வாடிக்கையாளர்களுக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிபிடித்தக்கது.

Nothing Ear (Stick) இந்தியாவில் என்ன விலையில் வருகிறது?

Nothing Ear (Stick) இந்தியாவில் என்ன விலையில் வருகிறது?

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட Nothing Ear (Stick) டிவைஸை எப்படி குறைந்த விலையில் சலுகையுடன், எங்கிருந்து வாங்கலாம் என்பதைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

Nothing Ear (Stick) சாதனம் இந்தியாவில் ரூ. 8,499 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ட்ரூலி இயர்பட்ஸ் சாதனத்திற்கு இந்த விலை அதிகம் தான் என்று நீங்கள் கருதலாம், ஆனால், நத்திங் பிராண்டிற்கான வேல்யூ (Nothing brand value) உலகளவில் அதிகரித்துள்ளதால் ரேட் கூடியுள்ளது.

Nothing Ear (Stick) பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்

Nothing Ear (Stick) பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்

சரி, இப்போது முதலில் Nothing Ear (Stick) அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் பற்றிப் பார்க்கலாம். Nothing Ear (Stick) சிறப்பம்சமாக அதன் சிலிண்டர் வடிவ சார்ஜிங் கேஸ் பார்க்கப்படுகிறது.

இது வெளிப்படையான டிரான்ஸ்பரென்ட் தோற்றத்தில் ரொடேட்டிங் அம்சத்துடன் வருகிறது. நீங்கள் Nothing Ear (Stick) கேஸின் வெளிப்புற மூடியைச் சுழற்றுவதன் மூலம், இயர்பட்ஸ்களை வெளியில் எடுத்துக்கொள்ளலாம்.

சீனால தான் இதன் பெயர் Redmi Note 12 5G.! இந்தியால இதன் பெயரே வேற.! முழுசா மாத்திட்டாங்க.!சீனால தான் இதன் பெயர் Redmi Note 12 5G.! இந்தியால இதன் பெயரே வேற.! முழுசா மாத்திட்டாங்க.!

Nothing Ear (Stick) சாதனம் Nothing Ear (1) இல் இருந்து மறுபட்டதா?

Nothing Ear (Stick) சாதனம் Nothing Ear (1) இல் இருந்து மறுபட்டதா?

Nothing Ear (Stick) டிவைஸ் இதற்கு முன்னர் மாடலான Nothing Ear (1) போல இல்லாமல், முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கிறது. இது ஹாஃப்-இன்-இயர் (half-in-ear) பாணி வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

இந்த வடிவமைப்பு ஒரு வசதியான பொருத்தத்திற்காகக் காது நுழைவாயிலில் குறைவாக ஊடுருவுகிறது. ஒவ்வொரு இயர்பட்ஸ் இன் எடை 4.4 கிராம் ஆக இருக்கிறது. இது AAC மற்றும் SBC குறியீடுகளுக்கான ஆதரவுடன் 12.6 மிமீ டைனமிக் டிரைவர் அமைப்புடன் வருகின்றது.

நத்திங் இயர் ஸ்டிக் இயர்பட்ஸ்கள் எவ்வ்ளவு நேரம் சார்ஜ் நிற்கும்?

நத்திங் இயர் ஸ்டிக் இயர்பட்ஸ்கள் எவ்வ்ளவு நேரம் சார்ஜ் நிற்கும்?

இதில் பாஸ் லாக் அம்சம் இருப்பதனால், இயர்பட்களில் இருந்து ஒலி கசிவைத் தடுக்கிறது. இது சத்தமான பின்னணி இரைச்சலை பில்டர் செய்யக்கூடிய மூன்று மைக்குகளைக் கொண்டுள்ளது.

இருப்பினும், இவற்றுக்கு Active Noise Cancellation (ANC) ஆதரவு இல்லை என்பதை நினைவில் கொள்ளவும். இது உள்ளே 350mAh பேட்டரியை பேக் செய்கிறது. இந்த இயர்பட்ஸ்கள் 7 மணிநேரம் வரை கேட்கும் பிளேபேக் நேரத்தை வழங்குகிறது.

வேகமா போய் வாங்குங்க.! பெஸ்டான டேப்லெட் டிவைஸ் மீது அதிரடி சலுகை.! இன்று மட்டுமே.!வேகமா போய் வாங்குங்க.! பெஸ்டான டேப்லெட் டிவைஸ் மீது அதிரடி சலுகை.! இன்று மட்டுமே.!

இதில்

இதில் "இந்த" அம்சம் இருக்கிறது.. ஆனா.. "இந்த" அம்சம் இல்லை.!

Nothing Ear (Stick) சார்ஜிங் கேஸ் (Ear Stick charging case) உடன் மொத்தமாக 29 மணிநேரம் வரை நீடிக்கும் என்று நத்திங் கூறியுள்ளது. இது பாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் ஆதரிக்கிறது.

அதாவது 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், நீங்கள் 9 மணிநேர பேட்டரி ஆயுளைப் பெறுவீர்கள். இந்த Nothing Ear (Stick) இயர்பட்ஸ்கள் சார்ஜ் செய்வதற்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் வழியாக நிகழ்கிறது.

ஆனால், இதன் விலைக்கு இதில் வயர்லெஸ் சார்ஜிங்கி ஆதரவும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

இது என்னென்ன கட்டுப்பாடுகளை ஆதரிக்கிறது?

இது என்னென்ன கட்டுப்பாடுகளை ஆதரிக்கிறது?

கட்டுப்பாடுகளைப் பொறுத்தவரை, நத்திங் இயர் (ஸ்டிக்) சாதனம் டச் மற்றும் லாங் பிரஸ் கட்டுப்பாடுகளை ஆதரிக்கிறது.

இந்த புதிய Nothing Ear (Stick) புளூடூத் 5.2, IP54 ரேட்டிங், இன்-இயர் டிடெக்ஷன், கூகுள் ஃபாஸ்ட் பேரிங், மைக்ரோசாஃப்ட் ஸ்விஃப்ட் பேரிங், நத்திங் எக்ஸ் ஆப்ஸ், கஸ்டமைஸ் ஈக்யூ மற்றும் கெஷ்டர் கண்ட்ரோல் மற்றும் நத்திங் ஃபோன்(1) உடன் குறைந்த லேக் மோட் போன்றவற்றை கொண்டுள்ளது.

அம்மாடியோவ்.! இது என்ன போன்-பா? இப்படி இருக்கு? உண்மையை சொன்ன நம்பமாட்டீங்க.!அம்மாடியோவ்.! இது என்ன போன்-பா? இப்படி இருக்கு? உண்மையை சொன்ன நம்பமாட்டீங்க.!

Nothing Ear (Stick) சாதனத்தை சலுகையுடன் வாங்க வேண்டுமா?

Nothing Ear (Stick) சாதனத்தை சலுகையுடன் வாங்க வேண்டுமா?

Nothing Ear (Stick) மீது நிறுவனம் ஒரு வருட உத்தரவாதத்தை வழங்குகிறது. இருப்பினும் இது உற்பத்தி குறைபாடுகளை மட்டுமே உள்ளடக்கும் மற்றும் தயாரிப்பில் உள்ள எந்தவொரு பிஸிக்கல் டேமேஜ் அல்லது குறைபாடுகளை உள்ளடக்காது என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நீங்கள் நத்திங் டிவைஸ் வைத்திருக்கிறீர்களா? அல்லது சிறப்பு தள்ளுபடியில் இந்த Nothing Ear (Stick) சாதனத்தை வாங்க விருப்பம் இருக்கிறதா? அப்போது, இந்த சிறப்பு சலுகை விபரத்தை தொடர்ந்து படியுங்கள்.

Nothing பிராண்ட் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ஸ்பெஷல் சலுகை

Nothing பிராண்ட் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ஸ்பெஷல் சலுகை

"Nothing தயாரிப்புக்குக் கிடைத்த அமோக வரவேற்பிற்கு நன்றி" என்று நத்திங் இந்தியாவின் துணைத் தலைவர் மனு ஷர்மா தெரிவித்திருக்கிறார்.

இந்த வரவேற்பிற்குக் கிடைத்த சந்தோஷத்தைக் கொண்டாடும் விதமாக Nothing பிராண்ட் உடன் இணைந்திருந்த விசுவாசமான பயனர்களுக்குச் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும் என்று அவர் இப்போது அறிவித்திருக்கிறார்.

ஆம், குறிப்பிட்ட சிலருக்கு இந்த தள்ளுபடி கிடைக்கப்போகிறது.

iPhone இல் 5G யூஸ் செய்ய ரெடியா? இப்படி செஞ்சா உடனே அப்டேட் கிடைக்கும்.! ஆனா?iPhone இல் 5G யூஸ் செய்ய ரெடியா? இப்படி செஞ்சா உடனே அப்டேட் கிடைக்கும்.! ஆனா?

நத்திங் இயர் ஸ்டிக் மீது எவ்வளவு சலுகை கிடைக்கும்?

நத்திங் இயர் ஸ்டிக் மீது எவ்வளவு சலுகை கிடைக்கும்?

மனு ஷர்மா அறிவித்த தகவலின் படி, Nothing Ear (1) சாதனம் அல்லது Nothing Phone (1) சாதனத்தை இதற்கு முன் வாங்கி, அதன் மீது கருத்து பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1000 தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், Nothing தயாரிப்பு சாதனங்களை வாங்கிய பின், அதன் அனுபவம் குறித்து விமர்சனம் அல்லது ரெவியூ பதிவிட்ட வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை கிடைக்கப்போகிறது.

எங்கிருந்து இந்த தள்ளுபடியை பெறலாம்?

எங்கிருந்து இந்த தள்ளுபடியை பெறலாம்?

அல்லது உங்களிடம் இந்த இரண்டு சாதனங்களில் ஏதேனும் ஒன்று சொந்தமாக இருந்தால் கூட, ரூ.1,000 சிறப்புத் தள்ளுபடியை நீங்கள் பெறலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு தள்ளுபடி Flipkart தளத்திற்கு மட்டுமே பிரத்தியேகமாக இருக்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

நவம்பர் 14 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு முதல் Nothing Ear (Stick) குறைந்த விலையில் வாங்க கிடைக்கும். இதன் மீது இந்த சிறப்பு தள்ளுபடியைப் பயன்படுத்தலாம்.

Nothing Ear (Stick) விற்பனையை மிஸ் பண்ணிடாதீங்க.!

Nothing Ear (Stick) விற்பனையை மிஸ் பண்ணிடாதீங்க.!

மேலும், பிளிப்கார்ட் வழியாக பொது விற்பனைக்காக வாடிக்கையாளர்கள் நவம்பர் 17 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் எப்போது வேண்டுமானாலும் Nothing Ear (Stick) சாதனத்தை பர்ச்சேஸ் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Nothing Ear (Stick) நாட்டில் ரூ.8,499 விலையில் வெளியிடப்பட்டது மற்றும் சிறப்பு தள்ளுபடியுடன், பிளிப்கார்ட்டில் ரூ.7,499 விலைக்கு வாங்க கிடைக்கப்போகிறது.

கடந்த காலத்தில் நத்திங் சாதனத்தை வாங்கிய பயனர்கள் நேரடியாக தங்கள் கணக்கில் இந்த சலுகையைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Nothing Device Users Can Get Nothing Ear (Stick) At a Special Flipkart Discount Of Rs 1000

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X