Home
Gadgets

Nothing Headphone 1 அறிமுக தேதி அறிவிப்பு.. விலையை கேட்டா சும்மா ஆடிப்போயிடுவீங்க!

நத்திங் (Nothing) நிறுவனம் 2025 ஜூலை மாதத்தில் ஒரு பெரிய வெளியீட்டு நிகழ்வை நடத்த உள்ளதும், அதில் இந்த பிராண்டின் "ட்ரூ பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்" ஆக நத்திங் போன் 3 (Nothing Phone 3) அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பதையும் உங்களில் பலரும் ஏற்கனவே அறிந்து இருக்கலாம். ஆனால் அந்நிகழ்வில் நத்திங்கின் புதிய ஸ்மார்ட்போன் மட்டுமே வெளியாகாது என்கிற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது!

நத்திங்கின் ஜூலை மாத வெளியீட்டு நிகழ்வில் நத்திங் நிறுவனத்தின் முதல் 'ஓவர்-இயர்' ஹெட்ஃபோன்ஸ் (Nothing's First Over Ear Headphones) ஆன நத்திங் ஹெட்ஃபோன் 1 (Nothing Headphone 1) அறிமுகமாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஜூலை 1 ஆம் தேதி லண்டனில், இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு தொடங்கும் வெளியீட்டு நிகழ்வில் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனுடன் சேர்த்து வெளியிடப்படும்.

Nothing Headphone 1 அறிமுக தேதி அறிவிப்பு!

நத்திங்கின் இந்த அறிவிப்பு, இந்நிறுவனம் பிரீமியம் ஓவர்-இயர் ஆடியோ துறையில் நுழைவதை குறிக்கிறது. இதற்காக நத்திங் நிறுவனம் பிரிட்டிஷ் ஆடியோ நிறுவனமான கேஇஎப் (KEF) உடன் இணைந்துள்ளது. இந்நிறுவனம் தன் உயர்மட்ட ஒலி தரத்திற்கு பெயர் பெற்றது. இந்த கூட்டணி நத்திங் ஹெட்ஃபோன் 1-க்கு ஒரு தீவிரமான சோனிக் பன்ச்சை (serious sonic punch) வழங்க முடியும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

வெளியீட்டு தேதி தவிர்த்து ஹெட்ஃபோன் 1 குறித்த விவரங்கள் இன்னும் மறைக்கப்பட்ட நிலையில், கேஇஎப் நிறுவனத்தின் ஒத்துழைப்பு இந்த ஹெட்ஃபோன்கள் - ஆப்பிளின் ஏர்போட்ஸ் மேக்ஸ் (Apple AirPods Max) போன்ற ஹெவிவெயிட்களுடன் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது; அதுவும் நத்திங்கின் சிக்னேச்சர் ட்ரான்ஸ்பெரன்ட் டிசைன் உடன்!

முன்னதாக லீக் ஆன ஒரு தகவல், நத்திங் ஹெட்ஃபோன் 1 ஆனது 2025 செப்டம்பர் மாதம் தான் அறிமுகமாகும் என்று பரிந்துரைத்து இருந்தது. மேலும் இது சுமார் $299 க்கு (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.25,560) அறிமுகமாகும் என்றும் குறிப்பிட்டு இருந்தது. தற்போது இது ஜூலை 1 அறிமுகமாகும் என்று உறுதி செய்யப்பட்டு விட்டதால், அதன் பிரீமியம் விலை பிரிவை மட்டுமே நாம் கருத்தில் எடுத்துக்கொள்ள முடியும்.

நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் இந்திய விலை நிர்ணயம் (Nothing Phone 3 Price in India Expected) எப்படி இருக்கும்? டிப்ஸ்டர் @MysteryLupin வழியாக கிடைத்த தகவலின்படி நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் ஆனது 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் சேர்த்து புதிய 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது நத்திங் போன் 3 மாடல் ஆனது 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனில் அறிமுகம் செய்யப்படாமல் போகலாம்

விலையை பொறுத்தவரை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆனது 899 அமெரிக்க டாலர்களுக்கு (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.76,865 க்கு) அறிமுகம் செய்யப்படலாம். 16ஜிபி ரேம் ஆப்ஷன் ஆனது 100 அமெரிக்க டாலர்கள் என்கிற அளவிலான அதிகரிப்பை பெற்று, இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.76,865 க்கு அறிமுகம் செய்யப்படலாம்!

நினைவூட்டும் வண்ணம் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜை கொண்ட நத்திங் போன் 2 (Nothing Phone 2) ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.49,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்கவில் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் விலை உயர்வு சுமார் 12.5 சதவீதமாக இருக்கும் என்பதால், நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் ரூ. 60,000க்கும் குறைவான விலையில் தான் இருக்கும்!

Best Mobiles in India

English summary
Nothing Confirmed Its First Over Ear Headphones Nothing Headphone 1 Launching On July 1
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X