வணக்கம்டி மாப்ள Nothing-ல இருந்து.. அசால்ட் விலைக்கு 100 மணி நேர பேட்டரி, ANC உடன் புதிய ஹெட்போன்!
கார்ல் பெய் (Carl Pei) தலைமையிலான நத்திங் (Nothing) நிறுவனத்தின் துணை பிராண்ட்டிடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு புதிய தயாரிப்புகளின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது: அவைகள் சிஎம்எப் ஹெட்ஃபோன் ப்ரோ மற்றும் சிஎம்எப் வாட்ச் 3 ப்ரோ மாடல்கள் ஆம்
இதுகுறித்த சமீபத்திய டீஸர் போஸ்டரில், சிஎம்எப் ஹெட்ஃபோன் ப்ரோ மாடல் (Nothing CMF Headphone Pro) ஆனது இந்தியாவில் ஜனவரி 17, 2026 அன்று அறிமுகமாகும் என்பதை சிஎம்எப் பிராண்ட் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த அறிவிப்பு வெளியான வேகத்தில் ஒரு புதிய மைக்ரோசைட் ஆனது பிளிப்கார்ட்டில் நேரலைக்கு வந்தது.

அது சிஎம்எப் ஹெட்ஃபோன் ப்ரோ மாடல் ஆனது 100 மணிநேர ஆடியோ பிளேபேக்குடன் ஈர்க்கக்கூடிய பேட்டரி லைஃப்[பை வழங்கும் என்பதை வெளிப்படுத்துகிறது. மேலும் இது ஏஎன்சி (ANC) ஆதரவுடன் வரும் என்பதும், ஏஎன்சி (ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்) இயக்கப்பட்டு இருக்கும் போது சுமார் 50 மணிநேர பிளேபேக் கிடைக்கும் என்றும், இது பாஸ்ட் சார்ஜ் செய்வதற்கான ஆதரவு உடன் வரும் என்பதும் கூட உறுதி செய்யப்பட்டுள்ளது
மேலும் 5 நிமிட பாஸ்ட் சார்ஜ் ஆனது 4 மணிநேரம் வரை பிளேபேக்கை உறுதி செய்கிறது. நினைவூட்டும் வண்ணம் நத்திங் முதன்முதலில் சிஎம்எப் ஹெட்ஃபோன் ப்ரோ மாடலை கடந்த செப்டம்பர் 2025 இல் உலகளவில் அறிவித்தது. எனவே இந்தியாவிற்கு வரும் மாடலின் அம்சங்கள் உலகளாவிய மாறுபாட்டிற்கு ஏற்பவே இருக்கும். நினைவூட்டும் வண்ணம் அமெரிக்காவில் இது $99 க்கு, அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.8,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டது
சிஎம்எப் ஹெட்ஃபோன் ப்ரோ விரிவான அம்சங்கள் (CMF Headphone Pro Features):
- இது ஏஎன்சி ஆதரவு உடன் வருகிறது. - இது தேவையற்ற சுற்றுப்புற ஒலியை 40dB வரை குறைப்பதாக கூறப்படுகிறது -
இதில் ஹைப்ரிட் ஏஎன்சி அம்சமும் உள்ளது
- இதில் ஒரு ரோலர் டயலும் உள்ளது, இது பயனர்கள் ஒலியளவை சரிசெய்யவும், ஏஎன்சி-ஐ மாற்றவும், இசையை இயக்கவும் அல்லது இடைநிறுத்தவும் அனுமதிக்கிறது.
- எனர்ஜி ஸ்லைடர் உள்ளது. இது பயனர்கள் அவர்கள் கேட்கும் டிராக்கின் அடிப்படையில் பாஸ் மற்றும் ட்ரெபிள் நிலைகளை தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது.
- ஸ்பேஷியல் ஆடியோ அல்லது ஏஐ அசிஸ்டென்ட்டை ஆக்டிவேட் செய்வது போன்ற அம்சங்களுக்கு விரைவான அணுகலை வழங்கும் கஸ்டமைசபிள் பட்டன் உள்ளது.
- விருப்பப்படி கண்ட்ரோல்களை நத்திங் எக்ஸ் ஆப் மூலம் கஸ்டமைஸ் செய்யலாம்
- குறைவான சிதைவு மற்றும் கூர்மையான தெளிவுக்காக நிக்கல் பூசப்பட்ட டயாபிராம்களுடன் 40மிமீ ட்ரைவர்கள் உள்ளன.
- இது SBC மற்றும் LDAC ஆடியோ கோடெக்குகளை ஆதரிக்கிறது
- ஹை-ரெஸ் ஆடியோ பிளேபேக்கையும் ஆதரிக்கிறது
- ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 மணிநேரம் வரை பிளேபேக் மற்றும் 50 மணிநேர டால்க் டைம்
- ஏஎன்சி இயக்கப்பட்டிருக்கும் போது பிளேபேக் நேரம் 50 மணிநேரமாக குறையும்
- இது ஆடியோ பிளேபேக்கிற்கான யுஎஸ்பி டைப்-சி கனெக்டிவிட்டியையும், சார்ஜ் செய்வதையும் ஆதரிக்கிறது.
- ஐந்து நிமிட குவிக் சார்ஜிங்குடன் 5 மணிநேரம் வரை பிளேபேக் நேரத்தை வழங்குவதாக விளம்பரப்படுத்தப்படுகின்றன
- முழுமையாக சார்ஜ் ஆக சுமார் இரண்டு மணிநேரம் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது
சிஎம்எப் ஹெட்ஃபோன் ப்ரோ மாடலின் டீசரை பார்க்கும்போது, இந்த ஹெட்போன் மாடல் ஆனது குறைந்தது மூன்று கலர் ஆப்ஷன்களில் வரும் என்பதை பார்க்க முடிகிறது. அதாவது வெளிர் பச்சை, வெளிர் சாம்பல் மற்றும் அடர் சாம்பல் ஆகிய கலர்களை பார்க்க முடிகிறது. மேலதிக விவரங்கள் வரும் நாட்களில் வெளியிடப்படலாம். அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.


Click it and Unblock the Notifications








