வேண்டாம்னு சொல்ல முடியாத விலையில் அறிமுகமான 43-இன்ச் GloLED TV.. அப்படி என்னப்பா விலை?

|

Vu நிறுவனம் தொடர்ந்து அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட் டிவி மாடலும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருகிறது.

Vu GloLED டிவி

Vu GloLED டிவி

இந்நிலையில் உலகத் தொலைக்காட்சி தினத்தன்று இந்தியாவில் 43-இன்ச் Vu GloLED டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது Vu நிறுவனம். மேலும் வரும் நவம்பர் 27-ம் தேதி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் தளத்தில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி விற்பனைக்கு வருகிறது.

கல் நெஞ்ச காரங்க.. கருணையே காட்டாத 7 கம்பெனிகள்.. கொத்து கொத்தாக பணி நீக்கம்.. இருப்பதிலேயே யார் மோசம்?கல் நெஞ்ச காரங்க.. கருணையே காட்டாத 7 கம்பெனிகள்.. கொத்து கொத்தாக பணி நீக்கம்.. இருப்பதிலேயே யார் மோசம்?

Vu GloLED ஸ்மார்ட் டிவி விலை

Vu GloLED ஸ்மார்ட் டிவி விலை

குறிப்பாக இந்த 43-இன்ச் Vu GloLED ஸ்மார்ட் டிவி மாடலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.29,999-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த டிவி Midnight Black நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட் டிவியின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அசுர வளர்ச்சி! நீல பறவையை வீழ்த்திய மஞ்ச பறவை: இந்திய செயலியை பார்த்து கண்ணீர் விடும் ட்விட்டர்!அசுர வளர்ச்சி! நீல பறவையை வீழ்த்திய மஞ்ச பறவை: இந்திய செயலியை பார்த்து கண்ணீர் விடும் ட்விட்டர்!

4கே டிஸ்பிளே

4கே டிஸ்பிளே

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட 43-இன்ச் Vu GloLED TV ஸ்மார்ட் டிவி ஆனது பெசல்-லெஸ் 4கே டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவம் கொடுக்கும். அதேபோல் 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான Vuஸ்மார்ட் டிவி.

இந்த MOTOROLA 5G போன் சேல்ஸ்க்கு வந்துருச்சுன்னு சொன்னா போட்டிபோட்டு வாங்குவாங்க: அப்படியென்ன ஸ்பெஷல்.!இந்த MOTOROLA 5G போன் சேல்ஸ்க்கு வந்துருச்சுன்னு சொன்னா போட்டிபோட்டு வாங்குவாங்க: அப்படியென்ன ஸ்பெஷல்.!

ஓடிடி-இல் படம்

MEMC, ALLM போன்ற சிறந்த தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட் டிவி. அதேபோல் அதிகமாக ஓடிடி-இல் படம் பார்க்க விரும்பும் பயனர்கள் இந்த ஸ்மார்ட் டிவியை வாங்குவது நல்லது. அதாவது சிறந்த தரமான அம்சங்களை வழங்குகிறது இந்த 43-இன்ச் Vu GloLED TV.

WiFi பாஸ்வோர்ட் விபரம் தேவையில்லை.! டைரக்ட்டா WiFi உடன் இணைவது எப்படி? இதோ ட்ரிக்.!WiFi பாஸ்வோர்ட் விபரம் தேவையில்லை.! டைரக்ட்டா WiFi உடன் இணைவது எப்படி? இதோ ட்ரிக்.!

குவாட்-கோர் பிராசஸர்

குவாட்-கோர் பிராசஸர்

குறிப்பாக 43-இன்ச் Vu GloLED ஸ்மார்ட் டிவி மாடல் குவாட்-கோர் பிராசஸர் உடன் டூயல்-கோர் ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் Google TV OS மூலம் இயங்குகிறது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.

ஒருவழியாக முடிவுக்கு வந்தது! WhatsApp-ல் Forward செய்யும் போது இருந்த முக்கிய குறை.. இனி இருக்காது!ஒருவழியாக முடிவுக்கு வந்தது! WhatsApp-ல் Forward செய்யும் போது இருந்த முக்கிய குறை.. இனி இருக்காது!

ஆப்பிள் டிவி+

அதேபோல் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஆப்பிள் டிவி+ மற்றும் பல போன்ற OTT இயங்குதளங்களுக்கான அணுகலை Google TV OS செயல்படுத்துகிறது. அதேபோல் Advanced Cricket mode technology ஆதரவுடன் இந்த ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே மிகவும் தெளிவாக கிரிக்கெட் போட்டி மட்டுமல்லாமல் அனைத்து போட்டிகளையும் பார்க்க முடியும்.

அன்லிமிடெட்-க்கு ஆப்பு.. Google Pay, Paytm பயனர்களுக்கு வரப்போகும் புது சிக்கல்!அன்லிமிடெட்-க்கு ஆப்பு.. Google Pay, Paytm பயனர்களுக்கு வரப்போகும் புது சிக்கல்!

 சிறந்த ஆடியோ  அனுபவம் கொடுக்கும்

சிறந்த ஆடியோ அனுபவம் கொடுக்கும்

2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான 43-இன்ச் Vu GloLED ஸ்மார்ட் டிவி. மேலும் built-in soundbar ஆதரவுடன் 84 வாட்ஸ் சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது இந்த Vu GloLED TV ஸ்மார்ட் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவம் கொடுக்கும்.

வாய் பிளக்க வைக்கும் விலைக்குறைப்பு! இந்த லேட்டஸ்ட் OnePlus போனை வாங்க Amazon-ல் குவியும் கூட்டம்!வாய் பிளக்க வைக்கும் விலைக்குறைப்பு! இந்த லேட்டஸ்ட் OnePlus போனை வாங்க Amazon-ல் குவியும் கூட்டம்!

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

3 எச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட், ஏவி இன்புட்,ஆப்டிகல் டிஜிட்டல் ஆடியோ அவுட்புட், eARC/ARC, நெட்வொர்க் ஈதர்நெட் போர்ட், இயர்போன் ஜாக், ப்ளூடூத் 5.1 மற்றும் வைஃபை போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி மாடல். ஒரு தரமான 43-இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க விரும்பினால் இந்த Vu GloLED ஸ்மார்ட் டிவியை வாங்குவது நல்லது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Not a normal LED TV It is GloLED TV Vu Televisions launched new 43 inch model in india for Rs 29999: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X