Home
Gadgets

Nokia டிவி பாக்ஸ் இந்தியாவில் அறிமுகமா? என்ன இருக்கு இந்த ஆண்ட்ராய்டு டிவி சாதனத்தில்?

நோக்கியா நிறுவனம் விரைவில் தனது புதிய ஆண்ட்ராய்டு டிவி பாக்ஸை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. நோக்கியா நிறுவனத்தின் இந்த புதிய டிவி பாக்ஸ் பல சுவாரஸ்யமான அம்சங்களுடன் வெளிவரும் என்பது தற்பொழுது உறுதியாகியுள்ளது. எப்போது இந்த டிவி பாக்ஸ் விற்பனைக்குக் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

புதிய டிவி பாக்ஸ்

NokiaPowerUser அறிக்கையின்படி, நோக்கியா நிறுவனம் அடுத்த மாதம் இந்த புதிய டிவி பாக்ஸை இந்தியாவில் வெளியிடும் என்று தெரிவித்துள்ளது. நோக்கியாவின் இந்த புதிய சாதனம் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்குக் கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய டிவி பாக்ஸ் ஆண்ட்ராய்டு டிவி 9.0 இயங்குதளத்தில் இயங்கும் டிவிகளுடன் இணங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியாவின் புதிய ஆண்ட்ராய்டு டிவி பாக்ஸ்

இந்த புதிய ஆண்ட்ராய்டு டிவி பாக்ஸ், 1080p ரெசல்யூஷனின் வெளியீட்டைக் கொண்டு வரும் என்றும், இதில் உள்ளமைக்கப்பட்ட Chromecast ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த நோக்கியா டிவி பாக்சில் கூகிள் அசிஸ்டன்ட் வாய்ஸ் கண்ட்ரோலரும் உள்ளது. நோக்கியாவின் இந்த ஆண்ட்ராய்டு டிவி பாக்ஸ் பற்றிய வேறு எந்த தகவலும் தற்போது சரியாய் தெரியவில்லை.

நோக்கியா ஸ்மார்ட் டிவி

சமீபத்தில் நோக்கியா நிறுவனம், இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட் டிவி மாடலை வெறும் ரூ .31,999 என்ற விலைக்கு அறிமுகப்படுத்தியது என்பதை மறக்க வேண்டாம். நோக்கியா ஸ்மார்ட் டிவி 43' இன்ச் 4K எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி ஆண்ட்ராய்டு 9.0 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது மற்றும் உள்ளமைக்கப்பட்ட Chromecast ஆதரவும் இதில் உள்ளது. Google Play Store, நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஆதரவுடன் வருகிறது.

நல்ல வரவேற்பு

நோக்கியா நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு இந்தியச் சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, நோக்கிய நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு டிவி பாக்ஸையும் வெளியிட முடிவு செய்துள்ளது போலத் தெரிகிறது. நோக்கியாவின் இந்த புதிய ஆண்ட்ராய்டு டிவி பாக்ஸ் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நிச்சயம் அடுத்த சில வாரங்களில் இந்த சாதனம் பற்றிய கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia Will Launch It's Android TV Box In India Very Soon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X