Home
Gadgets

பட்ஜெட் விலையில் இந்தியாவுக்கு வந்த புதிய Nokia டேப்லெட்: ஆளுக்கு 2 பார்சல்.!

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா டி21 டேப்லெட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் மாடல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேசச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலுக்கு 2 வருட ஓஎஸ் அப்டேட் கிடைக்கும். மேலும் இந்த புதிய டேப்லெட் மாடலின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

நோக்கியா டி21 டேப்லெட் விலை

நோக்கியா டி21 டேப்லெட் விலை

நோக்கியா டி21 டேப்லெட் ஆனது கிரே நிறத்தில் கிடைக்கும். பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. அதேபோல் நோக்கியா டி21 டேப்லெட் வைஃபை மாடலின் விலை ரூ.17,999-ஆக உள்ளது. பின்பு இதன் எல்இடி + வைஃபை வேரியண்டின் விலை ரூ.18,999-ஆக உள்ளது.

ஜனவரி 22-ம் தேதி முதல்..

ஜனவரி 22-ம் தேதி முதல்..

ஜனவரி 17 (இன்று) முதல் நோக்கியா.காம் தளத்தில் இந்த நோக்கியா டி21 டேப்லெட் மாடலை முன்பதிவு செய்ய முடியும். முன்பதிவு செய்யும் பயனர்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும். பின்பு வரும் ஜனவரி 22-ம் தேதி முதல் இந்த நோக்கியா டேப்லெட் விற்பனைக்கு வருகிறது.

360 நிட்ஸ் ப்ரைட்னஸ்

360 நிட்ஸ் ப்ரைட்னஸ்

நோக்கியா டி21 டேப்லெட் ஆனது 10.4-இன்ச் 2கே டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 2000 x 1200 பிக்சல்ஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5:3 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 360 நிட்ஸ் ப்ரைட்னஸ்,மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான டேப்டெல் மாடல். குறிப்பாக இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது புதிய நோக்கியா டி21 டேப்லெட் மாடல். மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா டேப்லெட்.

ஃபேஸ் அன்லாக் வசதி

ஃபேஸ் அன்லாக் வசதி

வைஃபை மற்றும் எல்இடி + வைஃபை என இரண்டு வகைகளில் வெளியிடப்பட்டுள்ளது இந்த நோக்கியா டேப்லெட். குறிப்பாக நோக்கியா டி21 டேப்லெட் மாடலில் கைரேகை சென்சார் வசதி இல்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் ஃபேஸ் அன்லாக் வசதி ஆதரவுடன் இந்த புதிய டேப்லெட்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 12

ஆண்ட்ராய்டு 12

நோக்கியா டி21 டேப்லெட் மாடலில் 12nm Unisoc Tiger T610 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 12 மூலம் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

8எம்பி ரியர் கேமரா

8எம்பி ரியர் கேமரா

அதேபோல் இரண்டு வருடங்களுக்கு இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த சாதனத்தின் மூன்று வருட பாதுகாப்பு அப்டேட்களுக்கு உறுதியளித்துள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.

எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட 8எம்பி ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா டி1 டேப்லெட் மாடல். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட். குறிப்பாக 8200 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா டி21 டேப்லெட் மாடல். மேலும் இதை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும்.

 OZO பிளேபேக் ஆதரவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

OZO பிளேபேக் ஆதரவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

4ஜி எல்டிஇ,வைஃபை 802.11 ஏசி,புளூடூத் 5.0, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த நோக்கியா டேப்லெட். அதேபோல் OZO பிளேபேக் ஆதரவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் பல சிறப்பான வசதிகளுடன் இந்த நோக்கியா டேப்லெட் வெளிவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia T21 tablet launched in India: Specifications, Price, sale and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X