Home
Gadgets

NOKIA ரசிகர்களே.. இந்த சான்ஸை விட்றாதீங்க.. 8-இன்ச் டிஸ்பிளே கொண்ட நோக்கியா T10 மீது திடீர் விலை குறைப்பு!

நோக்கியா நிறுவனம் தரமான சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. எனவே தான் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனத்திற்கும் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் பிரபலமான நோக்கியா டேப்லெட் மாடலுக்கு அமேசான் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது அமேசான் தளத்தில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள்தை கொண்ட நோக்கியா டி10 டேப்லெட் மாடலுக்கு அமேசான் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த நோக்கியா டேப்லெட் முன்பு ரூ.12,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட விலை குறைப்பின் மூலம் இந்த நோக்கியா டி10 டேப்லெட் மாடலை ரூ.10,999-விலையில் வாங்க முடியும்.

8-இன்ச் டிஸ்பிளே கொண்ட நோக்கியா T10 மீது திடீர் விலை குறைப்பு!

மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த நோக்கியா டி10 டேப்லெட் மாடலை இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும். இப்போது நோக்கியா டி10 டேப்லெட் மாடலின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது 8-இன்ச் எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நோக்கியா டேப்லெட்.

அதேபோல் 800 x 1280 பிக்சல்ஸ், 16:10 ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த அட்டகாசமான நோக்கியா டேப்லெட் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

நோக்கியா டி10 டேப்லெட் ஆனது 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா டி10 டேப்லெட் ஆண்ட்ராய்டு 12 (OS) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இதை இயக்க அருமையாக இருக்கும். மேலும் இந்த புதிய டேப்டெல் மாடலுக்கு இரண்டு வருடம் ஓஎஸ் (OS) அப்டேட், மூன்று வருட செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

நோக்கியா டி10 டேப்லெட் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பேஸ் அன்லாக் போன்ற அசத்தலான அம்சங்களை வழங்குகிறது இந்த நோக்கியா டேப்லெட். ஆனால் 8எம்பி ரியர் கேமராவுக்கு பதிலாக 13எம்பி கேமரா இதில் இடம்பெற்றிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.

8-இன்ச் டிஸ்பிளே கொண்ட நோக்கியா T10 மீது திடீர் விலை குறைப்பு!

நோக்கியா டி10 டேப்லெட் வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலையே இருக்காது. இந்த புதிய டேப்லெட் 5250 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 10W சார்ஜிங் வசதியும் உள்ளது. OZO பிளேபேக் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா டி10 டேப்லெட். எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் இது தண்ணீர் பட்டாலும் சேதமடையாத வாட்டர் ரெசிஸ்டன்ஸ் தன்மை கொண்டது.

புளூடூத் 5.0, 3.5 மிமீ ஆடியோ ஜாக், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த நோக்கியா டி10 டேப்லெட். அதேபோல் Unisoc T616 சிப்செட் கொண்டுள்ளது இந்த நோக்கியா டேப்லெட். குறிப்பாக இதன் செயல்திறன் மிகவும் அருமையாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia T10 tablet model is available at discount of 24 percent on Amazon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X