6D சவுண்ட் உடன் Nokia Smart TV விற்பனைக்கு ரெடி.! பேசிக் மாடல் வெறும் ரூ.12,999 மட்டுமே.!

|

நோக்கியா நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் தயாரித்து விற்பனைக்குத் தயார் செய்துள்ளது. பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் ஒரு பகுதியாக அக்டோபர் 15 முதல் நோக்கியாவின் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் விற்பனைக்குக் கிடைக்கும். நோக்கியா ஸ்மார்ட் டிவிகளின் சிறந்த ஆடியோ தரத்தை வழங்க ஜப்பானிய பிராண்டான ஓன்கியோவுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது.

6D தரத்தில் சவுண்ட் அனுபவம்

6D தரத்தில் சவுண்ட் அனுபவம்

நோக்கியாவின் புதிய ஸ்மார்ட் டிவிகளில் 6D தர சவுண்ட் அனுபவம் மற்றும் ஓன்கியோ சவுண்ட்பார் போன்ற மிரட்டல் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவை ஓன்கியோ ஹோம் தியேட்டர் சிஸ்டம் மற்றும் டால்பி ஆடியோ சிஸ்டத்தையும் நோக்கியாவின் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் ஆதரிக்கின்றது.

ப்ரோன்டோ ஃபோகல் AI இன்ஜின்

ப்ரோன்டோ ஃபோகல் AI இன்ஜின்

புதிய நோக்கியா ஸ்மார்ட் டிவி டைமண்ட் கட் கொண்ட பேசல் டிஸைனுடன், மைக்ரோ டிம்மிங், மேக்ஸ் பிரைட் டிஸ்ப்ளே மற்றும் மேம்பட்ட கான்ட்ராஸ்ட் ரேஷியோ தொழில்நுட்பத்துடன் வருகிறது.புதிய நோக்கியா ஸ்மார்ட் டிவிகள் கூடுதலாக ப்ரோன்டோ ஃபோகல் AI இன்ஜினுடன் பொருத்தப்பட்டிருக்கிறது.

2500 ஆண்டு பழமையான 59 மம்மி சவப்பெட்டிகள்: ஊடகத்திற்கு முன்பு திறப்பு-கிடுகிடுக்க வைத்த காட்சி!2500 ஆண்டு பழமையான 59 மம்மி சவப்பெட்டிகள்: ஊடகத்திற்கு முன்பு திறப்பு-கிடுகிடுக்க வைத்த காட்சி!

Nokia ஸ்மார்ட் Tv

Nokia ஸ்மார்ட் Tv

இது படங்கள், ஒலி மற்றும் தடையற்ற டிவி பார்க்கும் அனுபவத்திற்கான தொடர்பு ஆகியவற்றில் AI அனுபவத்தைச் செயல்படுத்துகிறது. Nokia ஸ்மார்ட் Tv, Android 9 Pie மூலம் இயங்குகிறது. நுகர்வோருக்கு உற்சாகமான சலுகைகளை வழங்க நோக்கியாவும் ஸ்பாட்ஃபி உடன் கூட்டுச் சேர்ந்துள்ளது.

50

50 ", 55" மற்றும் 65 " இன்ச் மாடல்களில் மட்டும்

Nokia ஸ்மார்ட் டிவிகளில் 50 ", 55" மற்றும் 65 " இன்ச் மாடல்களில் மட்டும் 48W (30W ஸ்பீக்கர்கள் + 18W ட்வீட்டர்கள்) சக்தி கொண்ட ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், 32 "மற்றும் 43" இன்ச் மாடல்களில் 39W ஒலி சக்தி கொண்ட (24W ஸ்பீக்கர்கள் + 15W ட்வீட்டர்கள்) கொடுக்கப்பட்டுள்ளது. வைஃபை மற்றும் புளூடூத் மற்றும் 2 எச்டிஎம்ஐ போர்ட்களுடன் 3 யூ.எஸ்.பி போர்ட்களைக் இந்த ஸ்மார்ட் டிவி கொண்டுள்ளது.

இந்த பழைய நாணயம் லட்சம் விலை போகும்! ஆன்லைனில் அதிகரிக்கும் பழைய பொருட்களுக்கான ஏலம்.!இந்த பழைய நாணயம் லட்சம் விலை போகும்! ஆன்லைனில் அதிகரிக்கும் பழைய பொருட்களுக்கான ஏலம்.!

UHD 43

UHD 43 ", 50", 55 ", 65" இன்ச் ஸ்டோரேஜ்

UHD 43 ", 50", 55 ", 65" இன்ச் வரம்பில் உள்ள மாடல்களுக்கு மட்டும் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், 32 "இன்ச் HD மற்றும் 43" FHD மாடல்களுக்கு 1.5 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட், இ-காமர்ஸ் தளத்தில் அக்டோபர் 15ம் தேதி முதல் விற்பனைக்கு இந்த ஸ்மார்ட் டிவிகள் வாங்கக் கிடைக்கிறது.

32'' இன்ச் HD மற்றும் 43'' இன்ச் FHD விலை

32'' இன்ச் HD மற்றும் 43'' இன்ச் FHD விலை

Flipkart பிக் பில்லியன் டேஸ் சேல்ஸ் விற்பனையில் 32'' இன்ச் HD ஸ்மார்ட் டிவி மாடல் விலை ரூ .12,999 என்றும், இதன் 43'' இன்ச் FHD மாடல் விலை ரூ .22,999 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

UHD ஸ்மார்ட் டிவிகளின் விலை

UHD ஸ்மார்ட் டிவிகளின் விலை

அதேபோல், நோக்கியா ஸ்மார்ட் டிவியில் UHD டிஸ்பிளேயுடன் வரும் 43" இன்ச் மாடல் விலை ரூ28,999 என்றும், இதன் 50'' இன்ச் மாடல் விலை ரூ.33,999 என்றும், இதன் 55'' இன்ச் மாடல் விலை ரூ.39,999 என்றும், இதன் 65'' இன்ச் மாடல் விலை ரூ .59,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia Smart TVs launched, price starts at Rs 12,999 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X