நோக்கியா 55' இன்ச் 4K ஸ்மார்ட் டிவி சலுகையுடன் விற்பனைக்கு கிடைக்கிறது! உடனே முந்துங்கள்!

|

நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா 55' இன்ச் 4K ஸ்மார்ட் டிவி இன்று இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த 4K நோக்கியா ஸ்மார்ட் டிவியை வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் வழியாகப் பெறலாம். இந்த ஸ்மார்ட் டிவியின் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் இதன் விற்பனையில் கிடைக்கும் சலுகைகளைக் கீழே குறிப்பிட்டுள்ளோம்.

நோக்கியா ஸ்மார்ட் டிவி

நோக்கியா ஸ்மார்ட் டிவி

நோக்கியா ஸ்மார்ட் டிவி விற்பனை பிளிப்கார்ட்டில் இன்று மதியம் 12:00 மணி முதல் துவங்கியுள்ளது. எச்எஸ்பிசி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் வாடிக்கையாளர்கள் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆக்சிஸ் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுடன் ஈ.எம்.ஐ.யில் 5 சதவீத உடனடி தள்ளுபடி சலுகையும் வழங்கப்படுகிறது. பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கடன் அட்டையில் 5 சதவீத வரம்பற்ற கேஷ்பேக்கையும் வழங்குகிறது.

ஜேபிஎல் ஆடியோ தொழில்நுட்பம்

ஜேபிஎல் ஆடியோ தொழில்நுட்பம்

இந்த நோக்கியா ஸ்மார்ட் டிவிக்கு ஒரு வருட வாரண்ட்டி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வட்டி இல்லாத ஈ.எம்.ஐ விருப்பமும் உள்ளது. சமீபத்திய நோக்கியா ஸ்மார்ட் டிவிகளில், சிறந்த ஒலி தரத்திற்காக ஜேபிஎல் ஆடியோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது மற்றும் 24 வாட் ஸ்பீக்கர்கள் இதில் வழங்கப்பட்டுள்ளது.

கட்டணத்தை உயர்த்தியாச்சு., அடுத்த கட்டம் என்ன தெரியுமா?- ஜியோ, வோடபோன், ஏர்டெல் வாடிக்கையாளர்களே..!கட்டணத்தை உயர்த்தியாச்சு., அடுத்த கட்டம் என்ன தெரியுமா?- ஜியோ, வோடபோன், ஏர்டெல் வாடிக்கையாளர்களே..!

குறைந்த விலையில் முழுமையான டிவி பாதுகாப்பு

குறைந்த விலையில் முழுமையான டிவி பாதுகாப்பு

நோக்கியா ஸ்மார்ட் டிவிகளுக்கு முழுமையான டிவி பாதுகாப்பை வெறும் ரூ .2,999 என்ற விலையில் பிளிப்கார்ட் நிறுவனம் வழங்கியுள்ளது. அதேபோல் 3 ஆண்டு முடிவில் 30 சதவீத எக்ஸ்சேஞ் மதிப்பு உத்தரவாதத்துடன் நோக்கியா ஸ்மார்ட் டிவியை எக்ஸ்சேஞ் ஆஃப்பரில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோக்கியா 55' இன்ச் 4K ஸ்மார்ட் டிவி சிறப்பம்சம்

நோக்கியா 55' இன்ச் 4K ஸ்மார்ட் டிவி சிறப்பம்சம்

நோக்கியா 55' இன்ச் 4K ஸ்மார்ட் டிவி, அண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான ஆண்ட்ராய்டு டிவி இயக்க முறைமையுடன் விற்பனைக்கு வந்துள்ளது. கூகிள் பிளே ஸ்டோர் உள்ளமைக்கப்பட்டிப்பதனால், பயனர்கள் தங்கள் டிவியில் கூடுதல் பயன்பாடுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நோக்கியா 55' இன்ச் ஸ்மார்ட் டிவி ப்யூர்எக்ஸ் குவாட் கோர் பிராசஸருடன் வருகிறது.

சிறந்த ஆடியோ தரம்

சிறந்த ஆடியோ தரம்

நோக்கியா நிறுவனம் தனது முதல் டிவியை 2.25 ஜிபி ரேம் விருப்பத்தில் வெளியிட்டுள்ளது. நோக்கியா 55' இன்ச் 4K ஸ்மார்ட் டிவியில் டால்பி விஷன் மற்றும் எச்டிஆர் 10 போன்ற அம்சங்களுடன் பிரகாசமான, கூர்மையான மற்றும் தெளிவான காட்சி அனுபவத்தை வழங்குகிறது. இது டால்பி ஆடியோ, டால்பி டிஜிட்டல் மற்றும் டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் தொழில்நுட்பங்களால் மிரளவைக்கிறது.

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ப்ரீபெய்ட்: ரூ.450-க்குள் கிடைக்கும் சிறந்த திட்டம் இதுதான்!ஜியோ, ஏர்டெல், வோடபோன் ப்ரீபெய்ட்: ரூ.450-க்குள் கிடைக்கும் சிறந்த திட்டம் இதுதான்!

நோக்கியா 55' இன்ச் 4K ஸ்மார்ட் டிவியின் விலை என்ன?

நோக்கியா 55' இன்ச் 4K ஸ்மார்ட் டிவியின் விலை என்ன?

இந்தியாவில் நோக்கியா 55' இன்ச் 4K ஸ்மார்ட் டிவி ரூ.41,999 முதல் பிளிப்கார்ட் தளத்தில் பிரத்தியேகமாகக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவி கூகிள் வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் நெட்ஃபிக்ஸ் மற்றும் யூடியூபிற்கான ஹாட்ஸ்கிகளுடன் வருகிறது. இந்த நோக்கியா-பிராண்டட் டிவி சியோமி, மோட்டோரோலா, வு, இஃபால்கான், தாம்சன் மற்றும் பல முன்னணி ஸ்மார்ட் டிவிகளுடன் நேரடி போட்டியில் களமிறங்கியுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Nokia Smart TV with 55-inch 4K panel set to go on sale in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X