Home
Gadgets

டிசம்பர் 5: அனைவரும் அதிகம் எதிர்பார்த்த நோக்கியா ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!

இப்போது வெளிவந்த தகவலின் அடிப்படையில் வரும் டிசம்பர் 5-ம் தேதி அனைவரும் அதிகம் எதிர்பார்த்த நோக்கியா ஸ்மார்ட் டிவி அறிமுகம் செசய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 5 ஆம் தேதி புதுதில்லியில் நடைபெறவுள்ள வெளியீட்டு நிகழ்விற்கான ஊடக அழைப்புகளை அந்நிறுவனம் அனுப்பத் தொடங்கியுள்ளது,அங்கு நோக்கியா ஸ்மார்ட் டிவியை வெளியிடும்.

 பிளிப்கார்ட் மற்றும் நோக்கியா கூட்டணி

பிளிப்கார்ட் மற்றும் நோக்கியா கூட்டணி

குறிப்பாக இந்தியாவில் பிளிப்கார்ட் மற்றும் நோக்கியா கூட்டணி சேர்ந்து ஸமார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது எனத் தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த சாதனங்களின் சில அம்சங்களைப் பார்ப்போம்.

 55-இன்ச் டிஸ்பிளே

55-இன்ச் டிஸ்பிளே

முன்பு வந்த தகவல்களின் அடிப்படையில் 55-இன்ச் டிஸ்பிளே மற்றும் 4கே யுஎச்டி ரெசல்யூசன் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன்வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதாகஅந்நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சான்றிதழ்

சான்றிதழ்

இந்த நோக்கியா ஸ்மார்ட் டிவி ஆனது சிறந்த மென்பொருள் மற்றும் சேமிப்பு திறனுடன் வரும். குறிப்பாக இது பிஐஎஸ் (இந்திய தர நிர்ணய பணியகம்) சான்றிதழ் அளித்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை விரைவில் எதிர்பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டு 9.0பை

ஆண்ட்ராய்டு 9.0பை

டைம்ஸ் ஆப் இந்தியாவின் அறிக்கையின்படி, தயாரிப்பில் உள்ள நோக்கியா ஸ்மார்ட் டிவி, ஆண்ட்ராய்டு 9.0பை-க்கு வெளியே இயங்க வாய்ப்புள்ளது. சந்தையில் உள்ள மற்ற ஸ்மார்ட் டிவிகளைப் போலவே, இதுவும் கூகிள் பிளே ஸ்டோருடன் முன்பே நிறுவப்பட்டிருப்பதாகவும், சிறந்த மாறுபட்ட விகிதத்தை வழங்கும் நுண்ணறிவு டிம்மிங் போன்ற அம்சங்களுடன் வருவதாகவும் கூறப்படுகிறது.

பட்ஜெட் விலை

பட்ஜெட் விலை

நோக்கியா அறிமுகப்படுத்தும் இந்த ஸ்மார்ட் டிவி ஆனது ஒன்பிளஸ் டிவி, மோட்டோரோலா டிவி மற்றும் மி டிவி சாம்சங் டிவி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும் நோக்கியா நிறுவனம் தனது ஸ்மார்ட் டிவியை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

 ஜேபிஎல் சவுண்ட் ஸ்பீக்கர்

ஜேபிஎல் சவுண்ட் ஸ்பீக்கர்

நோக்கியா டிவி ஜேபிஎல் சவுண்ட் ஸ்பீக்கர் ஆதரகளுடன் வெளிவரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

photo courtesy:digit.in

Best Mobiles in India

English summary
Nokia Smart TV to launch in India on December 5 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X