Home
Gadgets

Nokia Purebook X14 லேப்டாப்பின் விலை மற்றும் விற்பனைக்கான முன்பதிவு தேதி இதோ..

நோக்கியா நிறுவனம் தனது நோக்கியா லேப்டாப் பிரிவில் புதிதாக நோக்கியா ப்யூர்புக் எக்ஸ் 14 (Nokia Purebook X14) என்ற லேப்டாப்பை அறிமுகம் செய்வதை பிளிப்கார்ட் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த புதிய லேப்டாப்பின் விற்பனை எப்பொழுது துவங்குகிறது? இதன் விலை என்ன? போன்ற தகவல்களை பிளிப்கார்ட் நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த லேப்டாப் பற்றிய முழு விபரத்தைப் பார்க்கலாம்.

புதிய நோக்கியா ப்யூர்புக் எக்ஸ் 14

புதிய நோக்கியா ப்யூர்புக் எக்ஸ் 14

நோக்கியா நிறுவனத்தின் புதிய நோக்கியா ப்யூர்புக் எக்ஸ் 14 டிசம்பர் 18 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட்டில் முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. நோக்கியா ப்யூர்புக் சீரிஸ் இன் கீழ் மொத்தம் 9 லேப்டாப் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று முன்பே தகவல்கள் வெளியாகி இருந்தது. அதன்படி, இப்பொழுது முதல் லேப்டாப் மாடலாக இந்த நோக்கியா ப்யூர்புக் எக்ஸ் 14 அறிமுகம் செய்யப்படுகிறது.

நோக்கியா ப்யூர்புக் எக்ஸ் 14 லேப்டாப் விலை

நோக்கியா ப்யூர்புக் எக்ஸ் 14 லேப்டாப் விலை

நோக்கியா ப்யூர்புக் எக்ஸ் 14 லேப்டாப் அறிமுகம் விற்பனை விலையாக ரூ. 59,990 என்ற துவக்க விற்பனை விலையில் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய லேப்டாப் 1.1 கிலோகிராம் எடையுள்ள "அல்ட்ராலைட்" கட்டமைப்பை வழங்குவதாக போஸ்டர் விபரம் தெரிவிக்கிறது. நோக்கியா லேப்டாப் யூ.எஸ்.பி 3.0 மற்றும் எச்.டி.எம்.ஐ போர்ட்டுகளுடன் வருகிறது.

நோக்கியா ப்யூர் புக் எக்ஸ் 14 விவரக்குறிப்புகள்

நோக்கியா ப்யூர் புக் எக்ஸ் 14 விவரக்குறிப்புகள்

  • நோக்கியா ப்யூர்புக் எக்ஸ் 14
  • எடை 1.1 கிலோ மற்றும் 16.8 மிமீ நேர்த்தியான ஸ்லீக் டிசைன்
  • 14' இன்ச் முழு எச்டி எல்இடி பேக்லிட் டிஸ்பிளே
  • 86% டிஸ்பிளே-டு-பாடி விகிதம்
  • டால்பி விஷன்
  • 4.2 ஜிகாஹெர்ட்ஸ் டர்போ இன்டெல் i5 10வது ஜென் குவாட் கோர் பிராசஸர்
  • 1.1 ஜிகாஹெர்ட்ஸ் டர்போ ஜி.பீ.யுடன் இன்டெல் யு.எச்.டி 620 கிராபிக்ஸ்
  • ரேம்
    • 512 ஜிபி என்விஎம் எஸ்எஸ்டியுடன் 8 ஜிபி டிடிஆர் 4 ரேம்
    • எச்டி ஐஆர் வெப்கேம்
    • விண்டோஸ் ஹலோ ஃபேஸ் அன்லாக்
    • டால்பி ஆடியோ
    • டூயல் பேண்ட் வைஃபை
    • புளூடூத் 5.1
    • யூ.எஸ்.பி 3.1 போர்ட்
    • பேட்டரி
      • யூ.எஸ்.பி 2.0 போர்ட்
      • எச்.டி.எம்.ஐ போர்ட்
      • RJ45 போர்ட்
      • ஆடியோ அவுட் போர்ட்
      • எம்ஐசி இன் போர்ட்
      • 65W சார்ஜிங்குடன்
      • 8 மணிநேர பேட்டரி ஆயுள்

Best Mobiles in India

English summary
Nokia Purebook X14 laptop launched in India with pre-order on Flipkart from December 18 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X