Nokia Purebook லேப்டாப் விரைவில் விற்பனைக்கு.. மொத்தம் 9 மாடல்.. என்ன ஸ்பெஷலா எதிர்பார்க்கலாம்?

|

நோக்கியா நிறுவனம் இந்தியாவுக்கான புதிய லேப்டாப் சீரிஸ் மாடல்களை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது என்பது தற்பொழுது உறுதியாகியுள்ளது. நோக்கியா நிறுவனத்தின் புதிய லேப்டாப் நோக்கியா ப்யூர் புக் (Nokia Purebook) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நோக்கியா ப்யூர் புக் லேப்டாப்

புதிய நோக்கியா ப்யூர் புக் லேப்டாப்

இந்த புதிய நோக்கியா ப்யூர் புக் லேப்டாப், பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய லேப்டாப் எப்பொழுது அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றிய சரியாய் வெளியீட்டுத் தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், இவை விரைவில் இந்தியச் சந்தையில் விற்பனைக்கு வரக்கூடும் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

நோக்கியா ப்யூர் புக் வெளியீட்டு போஸ்டர்

நோக்கியா ப்யூர் புக் வெளியீட்டு போஸ்டர்

நோக்கியா நிறுவனம் புதிய நோக்கியா ப்யூர் புக் லேப்டாப் சாதனத்திற்காக பிரத்தியேக பக்கத்தை உருவாக்கியுள்ளது. நோக்கியா ப்யூர் புக் லேப்டாப்களுக்கான வெளியீட்டு போஸ்டரை பிளிப்கார்ட் தனது வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த போஸ்டர் லேப்டாப் இன் மூன்று பண்புகளை வெளிப்படுத்தியுள்ளது, அதாவது 'அல்ட்ராலைட்,' (Ultralight) 'பவர்ஃபுள்' (Powerful) மற்றும் 'இம்மெர்சிவ்'(Immersive) என்று குறிப்பிட்டுள்ளது.

'லேப் வளர்ப்பு இறைச்சி' சாப்பிட ஒப்புதல் கிடைத்தது.. உண்மையில் இது மனிதர்களுக்கு நல்லது தானா?'லேப் வளர்ப்பு இறைச்சி' சாப்பிட ஒப்புதல் கிடைத்தது.. உண்மையில் இது மனிதர்களுக்கு நல்லது தானா?

பிளிப்கார்ட் மூலம் விற்பனை

பிளிப்கார்ட் மூலம் விற்பனை

பிளிப்கார்ட் ஏற்கனவே நோக்கியா பிராண்டட் டிவிகளை விற்பனை செய்து வருவதால், லேப்டாப்களை அதன் போர்ட்டல் மூலம் விற்பனை செய்வது உறுதியாகியுள்ளது. நோக்கியா நிறுவனம் லேப்டாப்களை இ-காமர்ஸ் வலைத்தளம் மூலம் பிரத்தியேகமாக விற்பனை செய்ய வேண்டும் என்பதையே திட்டமாகக் கொண்டுள்ளது. புதிய நோக்கியா லேப்டாப்கள் 9 மாடல்களில் வரும் என்பதை பிஐஎஸ் பட்டியல் வெளிப்படுத்தியுள்ளது.

நோக்கியா ப்யூர் புக் மாடல் எண்கள்

நோக்கியா ப்யூர் புக் மாடல் எண்கள்

இது தவிர, நோக்கியாவின் புதிய நோக்கியா ப்யூர் புக் லேப்டாப்கள் பற்றிய விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள், வெளியீட்டு தேதி அல்லது என்ன விலையில் இதை நாம் எதிர்பார்க்கலாம் என்பது போன்ற எந்த தகவலும் வெளியாகவில்லை. இதன் ஒன்பது மாடல்கள் NKi510UL82S, NKi510UL85S, NKi510UL165S, NKi510UL810S, NKi310UL41S, NKi510UL1610S, NKi310UL82S, NKi310UL42S, மற்றும் NKi310UL85 என்ற மாடல் எண்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

397 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 21 ஆம் தேதி நிகழும் ஆச்சரியம்- அடுத்தது 2080 ஆம் ஆண்டுதான்!397 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 21 ஆம் தேதி நிகழும் ஆச்சரியம்- அடுத்தது 2080 ஆம் ஆண்டுதான்!

மாடல் எண்களில் உள்ள 'NK' என்ன அர்த்தம்?

மாடல் எண்களில் உள்ள 'NK' என்ன அர்த்தம்?

லேப்டாப் மாடல் எண்களில் உள்ள 'NK' 'நோக்கியா' பிராண்டைக் குறிப்பதாகத் தெரிகிறது, அதே நேரத்தில் ஆல்பா எண் பாகங்கள் பிராசஸரை குறிக்கிறது. கவனமாகப் பார்த்தால், இந்த 9 லேப்டாப்களில் 5 லேப்டாப்கள் இன்டெல் கோர் i5 பிராசஸர் உடனும், அவற்றில் 4 லேப்டாப்கள் இன்டெல் கோர் i3 பிரசசசர் உடனும் வரும் என்று தெரிகிறது. இவை அனைத்தும் 10 ஆம் தலைமுறை இன்டெல் பிராசஸர்களை கொண்டு வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Nokia Purebook Laptops Might Sold Through Flipkart With Intel Core i3 and i5 Processors : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X