அறிமுகமாகிறதா நோக்கியா லேப்டாப்?- எப்போது தெரியுமா?

|

நோக்கியா இந்தியாவில் லேப்டாப் தொடரை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நோக்கியா மடிக்கணினிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும் பிஐஎஸ் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நோக்கியா லேப்டாப் தொடர்

நோக்கியா லேப்டாப் தொடர்

நோக்கியா இந்தியாவில் லேப்டாப் தொடரை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. இந்திய தர நிர்ணய பணியகம் (பிஐஎஸ்) பட்டியலின்படி, நோக்கியா மடிக்கணினிகள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. பிற நாடுகளில் அறிமுகம் செய்வதற்கு முன்பு இந்திய சந்தையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மடிக்கணினிகள் உருவாக்கி வருவதாக தகவல்

மடிக்கணினிகள் உருவாக்கி வருவதாக தகவல்

சீனாவின் ஜியோங்சுவில் நோக்கியா மடிக்கணினிகள் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் நோக்கியா மடிக்கணினி துறையில் நுழைவது இது முதல்முறையல்ல என்பது கவனிக்கத்தக்க ஒன்று. 2009 ஆம் ஆண்டில் நோக்கியா புக்லெட் 3ஜி மாடலை அறிமுகம் செய்தது.

மொபைல் சந்தையில் ஆதிக்கம்

மொபைல் சந்தையில் ஆதிக்கம்

முன்னதாக நோக்கியா நிறுவனம் மொபைல் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. பின் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கவனம் செலுத்தி முதன்மைரக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

ஒன்பது வெவ்வேறு மடிக்கணினிகள்

ஒன்பது வெவ்வேறு மடிக்கணினிகள்

நோக்கியா மடிக்கணினிகள் பிஐஎஸ் சான்றிதழ் தளத்தில் பட்டியலிடப்பட்டதை டிப்ஸ்ட்ர் முகுள் சர்மா முதலில் கண்டறிந்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, குறைந்தபட்சம் ஒன்பது வெவ்வேறு மடிக்கணினிகள் பிஐஎஸ் பட்டியலிட்டுள்ளது. அவை NKi510UL82S, NKi510UL85S, NKi510UL165S, NKi510UL810S, NKi510UL1610S, NKi310UL41S, NKi310UL82S மற்றும் NKi310UL85S ஆகும்.

அம்பானி வீடு: 600 ஊழியர்கள், 3 ஹெலிகாப்டர், 168 கார் பார்க்கிங்- அன்டிலியாவின் வியப்பூட்டும் தகவல்கள்!அம்பானி வீடு: 600 ஊழியர்கள், 3 ஹெலிகாப்டர், 168 கார் பார்க்கிங்- அன்டிலியாவின் வியப்பூட்டும் தகவல்கள்!

விண்டோஸ் 10 மூலம் இயங்கும்

விண்டோஸ் 10 மூலம் இயங்கும்

மேலே குறிப்பிட்டுள்ள மாதிரி எண்களில் என்கே என்ற இரண்டு எழுத்துகளும் நோக்கியா என்பதை குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வருகிற நோக்கியா மடிக்கணினிகள் விண்டோஸ் 10 மூலம் இயங்கும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.

பிளிப்கார்ட் மூலம் விற்பனை செய்ய வாய்ப்பு

பிளிப்கார்ட் மூலம் விற்பனை செய்ய வாய்ப்பு

பிஐஎஸ் சான்றிதழ் தரவுத்தளத்தில் காணப்படும் நோக்கியா மடிக்கணினிகள் நோக்கியா பிராண்ட் உரிமம் பெற்ற தயாரிப்புகளாகும். நோக்கியா டிவி மற்றும் ஸ்ட்ரீமிங் சாதனங்கள் பிளிப்கார்ட் மூலம் கிடைக்கிறது. எனவே அதேபோல் நோக்கியா மடிக்கணினிகளும் பிளிப்கார்ட்டில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

அதிகாரப்பூர்வ தகவல் விரைவில்

அதிகாரப்பூர்வ தகவல் விரைவில்

நோக்கியா மடிக்கணினிகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தற்போதுவரை வெளியான தகவல் உறுதியில்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Nokia May Launching Laptop Series in India: Expected Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X