36 மணி நேரம் நீடிக்கும் பிளே பேக் நேரத்துடன் Nokia லைட் TWS இயர்பட்ஸ் அறிமுகம்..

|

எச்எம்டி குளோபல் நோக்கியா நிறுவனம் ஸ்மார்ட்போன்களை நேற்று அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, அத்துடன் நிறுவனம் இப்பொழுது நோக்கியா லைட் இயர்பட்ஸ் என்ற TWS வயர்லெஸ் இயர்போன்களையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய இயர்பட்ஸ் சாதனம் 36 மணி நேரம் நீடித்து நிலைக்கும் பேட்டரி ஆயுளுடன் வருவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

மொபைல் விர்ச்சுவல் நெட்வொர்க் ஆபரேட்டர் போன்கள்

மொபைல் விர்ச்சுவல் நெட்வொர்க் ஆபரேட்டர் போன்கள்

மேலும், நிறுவனம் நேற்று எச்எம்டி நிறுவனத்தின் கீழ் புதிதாக நோக்கியா எக்ஸ், நோக்கியா ஜி மற்றும் நோக்கிய சி சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இது மொபைல் வாடிக்கையாளர்களுக்கு எளிமை மற்றும் மதிப்பை வழங்கும் என்று கூறப்படுகிறது. இது ஒரு MVNO, "மொபைல் விர்ச்சுவல் நெட்வொர்க் ஆபரேட்டர்" ஆகும், இதனால் உங்கள் தொலைபேசி உண்மையில் மற்றொரு கேரியரின் செல்களுடன் இணைக்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

நோக்கியா லைட் இயர்பட்ஸ் (BH205) சாதனம்

நோக்கியா லைட் இயர்பட்ஸ் (BH205) சாதனம்

நோக்கியா லைட் இயர்பட்ஸ் (BH205) அறிமுகம் செய்யப்படும் போது 39 யூரோக்கள் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பின் படி சுமார் ரூ. 3,465 ஆகும். ஏப்ரல் நடுப்பகுதியில் தொடங்கி உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் இது கிடைக்கும். அவை சார்கோல் மற்றும் போலார் சீ வண்ணங்களில் வருகின்றது. எச்எம்டி மொபைல் சேவை இங்கிலாந்தில் மாதத்திற்கு 6.50 டாலர் என்ற விலையில் தொடங்கியுள்ளது. இது தோராயமாக ரூ. 665 ஆகும். உலகளவில் ஒவ்வொரு கட்டமாக வெளியிடப்படும்.

ஆரம்பமாகும் ஐபிஎல் 2021: இலவசமாக பார்ப்பதற்கு இதான் வழி!ஆரம்பமாகும் ஐபிஎல் 2021: இலவசமாக பார்ப்பதற்கு இதான் வழி!

36 மணிநேர பிளேபேக் டைம்

36 மணிநேர பிளேபேக் டைம்

நோக்கியா லைட் இயர்பட்ஸில் 6 மிமீ டைனமிக் டிரைவர்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது, இந்த சாதனத்தின் இயர்பட்ஸ்கள் ஒவ்வொன்றும் 40 எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகின்றன. நோக்கியா நிறுவனம் கூறுகையில், முழு சார்கிங்கிற்கு பின்னர் நோக்கியா லைட் இயர்பட்ஸ் 36 மணிநேர பிளேபேக் டைமை வழங்குகிறது. 5 முறை சார்ஜிங் செய்துக்கொள்ள உங்களின் சார்ஜிங் கேஸ் அனுமதிக்கிறது. யூ.எஸ்.பி-சி கேபிள் மூலம் சார்ஜிங் செய்துகொள்ளலாம்.

டச் கண்ட்ரோல் அம்சத்துடன் பல அம்சங்கள்

டச் கண்ட்ரோல் அம்சத்துடன் பல அம்சங்கள்

நோக்கியா லைட் இயர்பட்ஸில் 10 மீட்டர் தூரத்துடன் இணைப்பிற்கான புளூடூத் 5.0 கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு இயர்பட்ஸ்களும் 20Hz-20KHz ஃபிரிக்வென்சி வரம்பைக் கொண்டுள்ளது. இவை மூன்று ஜோடி இயர் டிப்ஸ் பட்ஸ் உடன் வருகிறது. இவை S, M , L ஆகிய மூன்று அளவுகளில் வருகிறது. நோக்கியா லைட் இயர்பட்ஸ் மியூசிக் பிளே, வாய்ஸ் அசிஸ்டன்ட் அம்சம் மற்றும் அழைப்புகளுக்கான டச் கண்ட்ரோல் அம்சம் போன்ற பல கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளது.

விரைவில் இந்தியாவில்

விரைவில் இந்தியாவில்

இந்திய சந்தையில் இந்த புதிய நோக்கியா லைட் இயர்பட்ஸ் சாதனம் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், நமக்கு தெரிந்த தகவலின் படி, இந்த புதிய நோக்கியா லைட் இயர்பட்ஸ் சாதனம், நோக்கியா எக்ஸ், நோக்கியா ஜி மற்றும் நோக்கியா சி ஸ்மார்ட்போன்களுடன் வெகு விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Nokia Lite Earbuds truly wireless earphones Launched : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X